இசக்கியின் வாழ்க்கை கெடுக்க நினைக்கும் சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: இசக்கி தன்னுடன் வாழமுடியாது என்று சொல்லிவிட்டதால், முத்துப்பாண்டி நைட் தூங்காமல் கவலையில் இருக்க. அப்போது, பாக்கியம் என்னாச்சு என்று கேட்க உனக்கு தெரியாதா? இசக்கி ஏன் இப்படி பண்றா? அவ மேலே நான் எவ்வளவு பாசம் வச்சிருக்கேன் தெரியுமா என்று சொல்கிறான். இதை கேட்ட பாக்கியம் என்னடா பாசம் வச்சிருக்க? ரத்னாவை தான் கல்யாணம் பண்ணிப்பேனு தாலியை வச்சிட்டு சுத்திகிட்டு இருந்த, இசக்கியும் சிவபாலனும் லவ் பண்ணிட்டு இருந்தாங்க. நீ இசக்கி கழுத்தில் தாலி கட்டியதும் சிவபாலன் அண்ணினு கூப்பிட்டா வச்சிட்ட.

உன்னை ஒரு அம்மாவா என்னால் திருத்த முடியல.. ஆனால் இசக்கி திருத்தினா, அப்படி இருக்கும் போது நீ என்ன பண்ண? அண்ணன் பாசம் தான் முக்கியம்னு இருக்க அவளை உன் பாசத்தால் மாத்து. புருஷன் தான் வேணும்னு சொல்லவை என்று சொல்கிறாள். இதை கேட்டு முத்துபாண்டியும் அவளை மாத்தி காட்டுறேன் என்று சவால் விடுகிறான். இதைத்தொடர்ந்து இன்று நடக்கபோவதை பார்க்கலாம்.

Zee tamil Anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில் இசக்கியின் கடைக்கு வந்த முத்துப்பாண்டி அவளிடம் பேசுகிறான். அப்போது, இத்தனை நாள், நான் தான் எல்லா தப்பையும் பண்ணிக்கிட்டு இருந்தேன். ஆனால், நீ எனக்காக எல்லாத்தையும் பொருத்துக்கிட்ட உண்மையிலேயே உன் அருமை எனக்கு தெரியவே இல்லை, உன் அத்தை தான் எனக்கு எல்லாத்தையும் சொல்லி புரிய வெச்சாங்க இனிமேல் அது போல நடந்துக்க மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறான்.

மாமாவை கிண்டலடித்த கனி: இசக்கி முத்துப்பாண்டி இருவரும் பேசிகொண்டு இருக்க அங்கு செல்லக்கனி வர, என்ன மாமா அக்கா மேல இருந்த கோவம் எல்லாம் போய்டுச்சா, இருங்க நான் எல்லாரையும் கூப்பிடுகிறேன் என்று சொல்ல, யம்மா கனி நீ கொஞ்சம் அமைதியா இருமா, எல்லாரும் வந்தாங்கனா என்னைத்தான் கேலி பண்ணி பேசுவாங்க என்று சொல்ல, இசக்கி, மாமா கிண்டல் பண்ணாதடி அவரே இப்போத்தான் என்கிட்ட அன்பா பேசுகிறார் என்று சொல்லி ஒரு ரொமான்ஸ் லுக்விடுகிறாள்.

பரணி சொன்ன அந்த வார்த்தை: இதைத்தொடர்ந்து வீட்டில், பரணி மற்றும் சண்முகம் தனியாக இருக்க, பரணி வேண்டும் என்றே என்னமோ என் அப்பா கிட்ட, ஒரு வருஷத்துல உங்கள தாத்தா வாக்கி காட்டுகிறேன் என்று சொன்னீங்க ஆனால், அதுக்கான முயற்சி எதையும் செய்யாமல் இருந்தா எப்படி என்று சொல்லி, சண்முகத்தை உசுப்பேத்திவிட, சண்முகம் பரணியிடம் நெருங்கி வரும் நேரத்தில், உங்க தங்கச்சி இசக்கி, ரத்னாவின் வாழ்க்கை மட்டும் இப்படி இருக்கும் போது, நாம இப்படி சந்தோஷமா இருந்தா நல்ல இருக்காது, முதலில் அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்று சொல்லிவிட்டு இழுத்திபோர்த்திக் கொண்டு தூங்க, சண்முகம் திருதிரு என்று முழித்துக்கொண்டு இருக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X