இசக்கியின் காலில் விழுந்த சௌந்தரபாண்டி.. எல்லாமே நாடகம் தான்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: சண்முகம் இசக்கியை பார்க்க வரக்கூடாது என்று சொல்லியும், முத்துப்பாண்டி மீண்டும் வந்து இசக்கியுடன் பேசி கொண்டிருக்க, அப்போது கனி, மாமா என்கிட்ட வாங்கின கடனை எப்போ தரப்போறீங்க என்று சொல்லி கேலி செய்கிறாள். உடனே முத்துப்பாண்டி நாளைக்கு கண்டிப்பா கொடுத்துடுறேன் என்று சொல்கிறான். இசக்கியுடன் முத்துப்பாண்டி பேசி கொண்டிருப்பதை பார்த்த ஷண்முகம் திரும்ப எதுக்கு வந்த என்று கேட்க கடைனா நாலு பேர் வர தானே செய்வாங்க.. கலர் குடிக்க வந்தேன் என்று சொல்லி சண்முகத்தை ஆப் ஆக்குகிறான்.

முத்துப்பாண்டி கிளம்பி சென்றதும் வைகுண்டம், பரணி ஆகியோர் முத்துப்பாண்டி இசக்கியை தேடி வர ஆரம்பிச்சுட்டான். உன் பிடிவாதத்தால் தான் அவங்க ரெண்டு பேரும் சேராமல் இருக்காங்க என்று சொல்லி கோவப்படுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், சௌந்தரபாண்டி ஷண்முகம் வீட்டிற்கு வந்து இசக்கியிடம் மன்னிப்பு கேட்பது போல் நடிக்கிறான். இதுவரைக்கும் என் புள்ள நான் சொல்றதை கேட்டா போதும்னு இருந்துட்டேன். இப்போ என் பிள்ளை வாழ்க்கை இப்படி நாசமாக போறத என்னால பார்க்க முடியல, அவன் நீ இல்லாம ரொம்ப கஷ்டப்படுகிறான். நான் உன் மீது எண்ணெய் ஊத்தி கொளுத்திவிடுவேன் என்று சொன்னது உண்மைதான், ஆனா அப்படி செய்தேனா, சண்முகம் மேல இருக்குற கோவத்துல உன்னை கொல்லப்பார்த்தேன், என் கார் சாவியை கீழே போட்டுவிட்டு, இசக்கியின் காலில் விழுவது போல நடிக்கிறான். எல்லாரும் சௌந்தரபாண்டியின் நடிப்பை நம்பி விட ஷண்முகத்திற்கு மட்டும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இந்த அளவுக்கு இறங்கி வந்த பிறகு இன்னும் எதுக்கு காத்துகிட்டு இருக்க என்று சண்முகத்தை கேள்வி கேட்கின்றனர்.

அண்ணா முடிவு தான் என் முடிவு: சௌந்தரபாண்டி மன்னிப்பு கேட்டு அங்கிருந்து கிளம்ப, பரணி இசக்கியிடம் அவர் உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார் என்று நான் நினைக்கவே இல்லை என்று சொல்லி, இசக்கி, மாமா கேட்டது மன்னிப்பு மாதிரி தெரியல, என்னை மிரட்டுவது மாதிரி இருந்தது என்று சொல்கிறாள். இதைக்கேட்ட பரணி, அவர் உன் காலில் விழுந்ததை நான் பார்த்தேன் எதுக்கு இப்படி பேசுற, உன் வாழ்க்கையில் முடிவெடுக்க வேண்டியது நீ தான் என்று சொல்கிறாள். ஆனால் இசக்கி என் வாழ்க்கைக்கு எது நல்லதுனு என் அண்ணனுக்கு தெரியும். என் அண்ணனோட முடிவு தான் என் முடிவு என்று சொல்கிறாள்.

திருந்திவிட்டேன்: பாண்டியம்மா, வீட்டில் பாக்யாவிடம் காபி கேட்டு சண்டை போட்டுக்கொண்டு இருக்க, அப்போது சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு வீட்டுக்கு வர, பாண்டியம்மா,பாக்யம் ஒரு காபி கூட கொடுக்கவில்லை என்று சொல்லி, சௌந்தரப்பாண்டி, இனி மேல், வீட்டில் இந்த மாதிரி பிரச்சனை பண்ணாத அக்கா, நான் திருந்திவிட்டேன். இனி மேல் இருந்து நான் நல்லவனா இருப்பேன் என்று சொல்வதை கேட்ட, சிவபாலன் கிண்டல் அடிக்கிறான் இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X