இசக்கி, முத்துப்பாண்டி சேர்வார்களா? நடக்கப்போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோடு!
சென்னை: சௌந்தரபாண்டி ஷண்முகம் வீட்டிற்கு வந்து இசக்கியிடம் மன்னிப்பு கேட்பது போல் நடிக்கிறான். இதுவரைக்கும் என் புள்ள நான் சொல்றதை கேட்டா போதும்னு இருந்துட்டேன். இப்போ என் பிள்ளை வாழ்க்கை இப்படி நாசமாக போறத என்னால பார்க்க முடியல, அவன் நீ இல்லாம ரொம்ப கஷ்டப்படுகிறான். நான் உன் மீது எண்ணெய் ஊத்தி கொளுத்திவிடுவேன் என்று சொன்னது உண்மைதான், ஆனால் அப்படி செய்தேனா, சண்முகம் மேல இருக்குற கோவத்துல உன்னை கொல்லப்பார்த்தேன், என்று கார் சாவியை கீழே போட்டுவிட்டு, இசக்கியின் காலில் விழுவது போல நடிக்கிறான். இதை தூரத்தில் இருந்து பார்த்த பரணி மற்றும் வைகுண்டம் அதிர்ச்சி அடைகின்றனர்.
சௌந்தரபாண்டி மன்னிப்பு கேட்டு அங்கிருந்து கிளம்ப, பரணி இசக்கியிடம் அவர் உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார் என்று நான் நினைக்கவே இல்லை என்று சொல்லி, இசக்கி, மாமா கேட்டது மன்னிப்பு மாதிரி தெரியல, என்னை மிரட்டுவது மாதிரி இருந்தது என்று சொல்கிறாள். இதைக்கேட்ட பரணி, அவர் உன் காலில் விழுந்ததை நான் பார்த்தேன் எதுக்கு இப்படி பேசுற, இது உன் வாழ்க்கையில் முடிவெடுக்க வேண்டியது நீ தான் என்று சொல்கிறாள். சௌந்தரபாண்டி காலில் விழுந்து மன்னிப்புகேட்ட விஷயம் தெரிந்த முத்துப்பாண்டி, கோபத்துடன் இசக்கி வீட்டுக்கு வருகிறான். இதையடுத்து இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.

அண்ணா சீரியல் : இன்றைய எபிசோடில், கோபத்தோடு இசக்கி வீட்டுக்கு வரும் முத்துப்பாண்டி, இசக்கியை வெளிய அழைத்து, ரெண்டுல ஒரு விஷயம் தெரிஞ்சு ஆகணும் உனக்கு உன் அண்ணன் வேணுமா? இல்ல நான் வேணுமா? சொல்லு என்கிறான். இதைக் கேட்டு பதறிப்போன இசக்கி அழுது கொண்டே, எனக்கு ரெண்டு பேரும் வேணு மாமா என்று சொல்கிறாள். மேலும் ஆத்திரமடைந்த முத்து பாண்டி, அதெல்லாம் முடியாது நான் வேணும்னு நினைச்சா என்கூட இப்போவே கிளம்பிவா என்று சொல்கிறன். அப்போது குறிப்பிடும் சண்முகம்,இசக்கிக்கு நீதான் வேணும் ஆனா அந்த வீட்டுக்கு நான் வாழ அனுப்பவே மாட்டேன் நீ இந்த வீட்ல வந்து இருக்கிறதில் என்ன பிரச்சனை என்று கேட்கிறான்.
உடனே ஆத்திரப்படும் முத்துப்பாண்டி இசக்கி நல்லா கேட்டுக்க, இத்தோட எல்லாமே முடிஞ்சு போச்சு நான் உன்ன காதலித்தேன், உன் கூட வாழனும் ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா நீ உன் அண்ணன் தான் முக்கியம்னு இருக்க, இத்தோட எல்லாமே முடிஞ்சு போச்சு இனிமேல் நீ எனக்கு வேண்டாம் வயிறு எரிஞ்சு சொல்ற நீ நல்லாவே இருக்க மாட்டே என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறான்.
இதையடுத்து, சண்முகம் பரணியிடம் சாந்திமுகூர்த்தத்திற்கு தேதி குறிக்கலாமா என்று கேட்க, பரணி இப்போத்தான் அதப்பத்தி கேட்கணுமா. நாம ஒன்னும் காதலிச்சிட்டு இல்ல, நமக்கு கல்யாணம் ஆகிவிட்டது, அதனால சாந்திமுகூர்த்தத்திற்கு தேதி குறிக்க வேண்டிய அவசியம் இல்ல என்று பரணி சொல்ல, அதெல்லாம் முடியாது எல்லாம் முறைப்படித்தான் நடக்க வேண்டும் என்று சண்முகம்,ஜோசியருக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு நேரம் குறிக்க சொல்லி போன் செய்கிறான். ஆனால் அவரோ இப்போதைக்கு தள்ளி இருப்பது தான் நல்லது என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











