முத்துப்பாண்டி எடுத்த விபரீத முடிவு.. இசக்கி வாழ்க்கை என்னாகுமோ.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: இசக்கி வீட்டுக்கு வரும் முத்துப்பாண்டி, உனக்கு உன் அண்ணன் வேணுமா? இல்ல நான் வேணுமா? சொல்லு என்கிறான். இதைக் கேட்டு பதறிப்போன இசக்கி அழுது கொண்டே, எனக்கு ரெண்டு பேரும் வேணு மாமா என்று சொல்கிறாள். மேலும் ஆத்திரமடைந்த முத்து பாண்டி, அதெல்லாம் முடியாது நான் வேணும்னு நினைச்சா என்கூட இப்போவே கிளம்பிவா என்று சொல்கிறான்.
அப்போது இசக்கி எதுவும் பேசாமல் இருக்க, சண்முகம் குறுக்கிட்டு, இசக்கிக்கு நீதான் வேணும். ஆனா அந்த வீட்டுக்கு நான் வாழ அனுப்பவே மாட்டேன் நீ இந்த வீட்ல வந்து இருக்கிறதில் என்ன பிரச்சனை என்று கேட்கிறான். இதனால், மேலும், ஆத்திரப்படும் முத்துப்பாண்டி, இசக்கி நல்லா கேட்டுக்க, இத்தோட எல்லாமே முடிஞ்சு போச்சு நான் உன்ன காதலித்தேன், உன் கூட வாழனும் ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா நீ உன் அண்ணன் தான் முக்கியம்னு இருக்க, இத்தோட எல்லாமே முடிஞ்சு போச்சு என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறான்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், : இரவு முழுக்க முத்துப்பாண்டியை நினைத்து அழுது கொண்டு இருந்த இசக்கி விடிந்ததும் கடையை திறந்து முத்துப்பாண்டிக்காக காத்துக் கொண்டிருக்கிறாள், கடைக்கு வரும் பெண்கள் பொருட்கள் கேட்டும், எடுத்துக்கொடுக்காமல், முத்துப்பாண்டிக்காக காத்துக் கொண்டிருக்கிறாள். கோலம் போட்டுக் கொண்டிருக்கும் பரணி இதை பார்த்துவிட்டு இசக்கி, நீ முத்துப்பாண்டிக்காக காத்துகிட்டு இருக்கியா? அவன் வரமாட்டான் நேத்து அவன் சொன்னதை கேட்டல, அவன் வரமாட்டான் நீ உன் வேலையை பாரு என்கிறாள்.
இரண்டாவது திருமணம்: சௌந்தரபாண்டியன் வீட்ல பேப்பர் படிச்சிட்டு இருக்கும்போது வீட்டுக்கு வரும் ஒரு ஆளு என்னோட மனைவி என்னை விட்டுட்டு போயிட்டா, இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் கஷ்டப்பட்டுக்கிட்டே இருக்கேன். அதனால நான் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க போறேன் என்கிறான். அப்போது சௌந்தரப்பாண்டி, டேய் என் மகன் வாழ்க்கையே இங்க நாசமா போய் இருக்கு, இதுல, இதுல நீ வேறயா போடா என்று சொல்லி அனுப்பி வைக்கிறான். இதைத்கேட்ட முத்துப்பாண்டி, இவனே இரண்டாவது கல்யாணம் பண்ணும் போது, நானும் பண்ணுவேன் என்று முடிவு எடுக்கிறான்.
கொந்தளித்த முத்துப்பாண்டி: கடைக்கு வரும் முத்துப்பாண்டி, இசக்கி இடம் இன்னைக்கு எனக்கு ரெண்டுல ஒரு விஷயம் தெரிஞ்சு ஆகணும். நீ என் கூட வாழ வரியா? இல்லையா? உன்னை நான் காதலிச்சேன் உன் கூட வாழ்ந்து புள்ள குட்டி எல்லாம் பெத்துக்கிட்டு சந்தோஷமா இருக்கலாம்னு நெனச்சேன் ஆனா நீ, அண்ணனுடைய பேச்சை கேட்டுகிட்டு என் கூட வாழ மாட்டேன்னு முரண்டு பிடிச்சிட்டு இருக்க. இன்னைக்கு ரெண்டுல ஒரு விஷயம் தெரிஞ்சு ஆகணும் ஒன்னும் என்கூட நீ வாழ வரணும், அப்படி இல்லன்னா என்னை அத்துவிட்டுடு, நான் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறேன் என்கிறான். இதைக் கேட்டு இசக்கி அதிர்ச்சி அடைகிறாள்.
என்னடா பண்ணுவ: இப்போது அங்கு வரும் சண்முகம், என் தங்கச்சியை பிளாக் மெயில் பண்ண பார்க்கிறாயா, அவ நீ வேண்டான்னு எப்பவுமே சொல்லவே இல்ல, அந்த நரகத்துக்கு நான் அவளை அனுப்ப மாட்டேன். உனக்கு இந்த வீட்ல வந்து வாழ்றதுல என்ன பிரச்சனை இருக்குன்னு எனக்கு புரியல என்கிறான். அப்போது முத்துப்பாண்டி, சண்முகம் நீ பேசாதே நான் உன்கிட்ட பேச வரல, நான் என் பொண்டாட்டி கிட்ட பேசுறேன், இதுல வாய தொறந்து பதில் பேச வேண்டியது என்னுடைய மனைவி இசக்கி மட்டும் தான். அவ வேண்டாம்னு சொல்லிட்டா, என்கூட வாழ மாட்டேன்னு சொல்லிட்டா, அவளை அத்துவிட்டு நான் வேற கல்யாணம் பண்ணிக்கிறேன் என்கிறான்.
வாசப்படிக்கூட மிக்க மாட்டேன்: இருவரும் பேசுவதை கேட்டு பதறிப்போன வைகுண்டம், இசக்கி இது உன்னோட வாழ்க்கை உன் அண்ணன பத்தி நீ யோசிக்காத, நீ முடிவு பண்ணு, அவன் கூட போய் வாழறது தான் உனக்கு நல்லது என்கிறார். அப்போதும் இசக்கி வாய மூடிக்கிட்டு அமைதியா இருந்ததால், மேலும் கோபமடைந்த முத்துப்பாண்டி இனிமே எதுவுமே சரிப்பட்டு வராது இசக்கி, நீயும் நானும் பிரிஞ்சிடலாம். பஞ்சாயத்தை கூட்டி என்னை அறுத்துவிட்டுடு நான் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ்றேன். இனிமே இந்த வீட்டு வாசப்படி கூட நான் மிதிக்க மாட்டேன் என்று சொல்ல, இசக்கி அண்ணா சொன்னா மட்டும் தான் நான் உங்க கூட வருவேன் என்று தீர்க்கமாக சொல்ல சண்முகத்திற்கும் முத்துப்பாண்டி இடையே சண்டை நடக்கிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











