Anna: 2வது திருமணத்திற்கு ரெடியான முத்துப்பாண்டி.. இப்படிபட்ட புருஷன் உனக்கு தேவையா?
சென்னை: இசக்கியை பார்க்க வரும், முத்துப்பாண்டி, இன்னைக்கு எனக்கு ரெண்டுல ஒரு விஷயம் தெரிஞ்சு ஆகணும். நீ என் கூட வாழ வரியா? இல்லையா? உன்னை நான் காதலிச்சேன் உன் கூட வாழ்ந்து புள்ள குட்டி எல்லாம் பெத்துக்கிட்டு சந்தோஷமா இருக்கலாம்னு நெனச்சேன் ஆனா நீ, அண்ணனுடைய பேச்சை கேட்டுகிட்டு என் கூட வாழ மாட்டேன்னு முரண்டு பிடிச்சிட்டு இருக்க. இன்னைக்கு ரெண்டுல ஒரு விஷயம் தெரிஞ்சு ஆகணும் ஒன்னும் என்கூட நீ வாழ வரணும், அப்படி இல்லன்னா என்னை அறுத்துவிட்டுடு, நான் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறேன் என்கிறான்.
இப்போது அங்கு வரும் சண்முகம், என் தங்கச்சியை பிளாக் மெயில் பண்ண பார்க்கிறாயா, அவ நீ வேண்டான்னு எப்பவுமே சொல்லவே இல்ல, அந்த நரகத்துக்கு நான் அவளை அனுப்ப மாட்டேன். உனக்கு இந்த வீட்ல வந்து வாழ்றதுல என்ன பிரச்சனை இருக்குன்னு என்று கேட்க முத்துப்பாண்டிக்கும் சண்முகத்திற்கும் சண்டை வருகிறது.

அண்ணா சீரியல்: இன்றைய சீரியல், கோபத்துடன் வீட்டுக்கு போகும், முத்துப்பாண்டி அப்பா எனக்கு இரண்டாவது கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க, இனிமே இசக்கி இந்த வீட்டுக்கு வரமாட்டா, அவளை இதோடு தலைமுழுகிவிட்டு, நான் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழப் போறேன். கேட்டு பதறிப் போன பாக்கியம், டேய் முத்துப்பாண்டி என்னடா பேசுற, அவ அண்ணன் மேல இருக்கிற பாசத்துல அப்படி நடந்துக்கிறா, உங்க அப்பா அன்னைக்கு பண்ணதும் ரொம்ப பெரிய தப்பு டா நீ கொஞ்சம் புரிஞ்சிக்கோ.இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்வது சரியில்லை என்றாள்.
இரண்டாவது திருமணம்: அம்மா நீ சும்மா இரு, இனிமே அவ வர மாதிரி இல்ல, அதனால நான் ரெண்டாவது கல்யாணம் பண்ண போறேன் அப்பா நீ பொண்ண பாரு நீ எந்த பொண்ண பார்த்தாலும் எனக்கு சம்மதம் தான் என்று சொல்லிவிட்டு கிளம்ப, பாக்கியம், சிவபாலா, இப்படியே நம்ம விடக்கூடாது நான் போய் என்னுடைய மருமகளை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வரேன். இந்த வீட்டுக்கு மருமகனா அது இசக்கி மட்டும் தான். வேற யாரும் இந்த வீட்டுக்கு மருமகளா வர முடியாது. நான் போய் இசக்கியை கூப்பிட்டு வரேன் என்று கிளம்புகிறாள்.
புருஷன் உனக்கு தேவையா: வீட்ல இசக்கி அழுதுகொண்டு இருக்க, வைகுண்டம் யானை மண்ணள்ளி போட்டுக்கிற மாதிரி உன்னோட வாழ்க்கையை நீயே கெடுத்துக்க போற, அவ்வளவு தூரம் மாப்பிள்ளை வந்து கூப்பிட்டும் நீ போகல, உன் அண்ணன் பேச்சை கேட்டுட்டு இருக்க, கடைசி வரைக்கும் இந்த கடையை கட்டிக்கிட்டு இங்கேயே இருக்க போற. குடும்பத்தை கெடுக்கலாம்னு சவுந்தர பாண்டியன் பிளான் பண்ணிட்டு இருக்கும்போது அவனுக்கு நீயா இடத்தை கொடுத்து உன்னோட வாழ்க்கைய கெடுத்துக்கிட்ட இசக்கி அப்பா சொல்றதை கேளு வீட்டுக்கு போ என்கிறார்.
அப்போது அங்கு பாக்கியம் வந்த அண்ணா இந்த வீட்டில் என்ன நடக்குது, முத்துப்பாண்டி இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க போறேனு அவன், அப்பா கிட்டையே சொல்லிட்டான். அவர் அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்காம இருக்க மாட்டாரு, என்று சொல்ல அதெல்லாம் எப்படி பண்ண முடியும் என்று சண்முகம் சொல்கிறான்.


Click it and Unblock the Notifications











