பாக்கியத்தை விரட்டிய சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: சனிக்கிழமை எபிசோடில், வெங்கடேஷ், ரத்னா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான். இதையடுத்து, ரத்னா, நீ செய்த தப்புக்கு தண்டனை அனுபவிச்சே ஆகணும். இப்போ,நான் உன்னை மன்னிச்சா, நீ செய்த தப்புக்கு நான் துணை நிற்கிற மாதிரி ஆகிவிடும். எனக்கு இவன் கிட்ட இருந்து விவாகரத்து வாங்கி கொடுத்துடு அண்ணே என்று சொல்ல வெங்கடேஷ் அதிர்ச்சி அடைகிறான்.
அடுத்து பாக்கியம், சண்முகம் வீட்டிற்கு வந்து இசக்கியை தனது வீட்டிற்கு அழைத்து செல்வதாக சொல்ல அவன் இசக்கியோட முடிவை கேளுங்க என்று சொல்ல இசக்கி வர முடியாது என மறுத்து விடுகிறாள். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில் பாக்கியம் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறாள். வீட்டு வாசலில் இருக்கும் சௌந்தரபாண்டி என் பேச்சை கேட்காமல், இசக்கிய கூட்டிட்டு வரப்போன, இப்போ அவமானப்பட்டு நிக்கிறியா.. இனி மேல் நீ இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது என வெளியே தடுத்து நிறுத்துகிறார். அப்படியே, நீயும் உன் அம்மா வீட்டுக்கு போயிடு என பாக்கியத்திடம் சண்டை போடுகிறான் சௌந்தரபாண்டி. இதைப் பார்த்த சிவபாலன், நாம இந்த வீட்டை விட்டு போயிடலாம் இந்த, ஆள் வீட்ல எதுக்கு இருக்கணும் என்று சொல்கிறான்.
வாசலில் நிற்கும் பாக்கியம்: பாக்கியம் இல்ல நான் வரமாட்டேன் இப்ப நான் சண்முகம் வீட்டுக்கு போனால் அவன் செய்வது சரி என்று ஆகிவிடும். கல்யாணம் ஆனால் பொண்ணுங்க புருஷன் வீட்டில் தான் இருக்கணும்.. நான் இந்த வீட்டை விட்டு வரமாட்டேன் என்று சொல்ல சிவபாலன் சௌந்தரபாண்டியிடம் எங்க அம்மாவை உள்ள விடுங்க என சண்டை போட சௌந்தரபாண்டி முடியாது என மறுக்கிறான். இதனால் பாக்யம் வாசலிலேயே நின்று கொண்டு இருக்கிறாள். இதைத்தொடர்ந்து சிவபாலன், நீ இப்படி சொன்ன வர மாட்டா நான் மாமாவை கூட்டிக்கிட்டு வருகிறேன் என்று கிளம்புகிறான்.
கோவத்தில் ரத்னா: சண்முகத்தின் வீட்டில் ரத்னா சமையல் அறையில் சமைத்துக் கொண்டு இருக்க அப்போது வரும் பரணி. எதற்கு இந்த வேலையெல்லாம் செய்கிறாய் ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே என்று கேட்க, பரணி மீது கோபத்தில் இருக்கும் ரத்னா, இது ஏன் வீடு இதுல நான் சமைக்கிறேன் என்று கோபமாக கூறுகிறாள். உடனே பரணி, ஏன் ரத்னா என் மேல கோவமா இருக்கே, நான் உன் நல்லதுக்காக தான் வெங்கடேஷ் கூட இரு என்று சொன்னேன். எல்லாம் உன்னுடைய நல்லதுக்காக தான் சொன்னேன். அதற்காக இப்பவும் என் மேல கோவமா இருப்பது சரி இல்லை என்கிறாள். உடனே ரத்னா என் நல்லதுக்கு நீங்க பண்ண விஷயம் எல்லாம் போதும், இனிமே என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன். தயவு செய்து இனிமேல் என்னோட விஷயத்துல நீங்க தலையிடாதீங்க என்று மூஞ்சில் அடித்தது போல சொல்லி விடுகிறாள்.
நிதானமாக யோசிக்கும் சண்முகம்: இந்த நேரத்தில் வீட்டிற்கு வரும் சிவபாலன், சௌந்தரபாண்டி அம்மாவை வீட்டிற்குள் உள்ள விட மாட்றாரு என்ற விஷயத்தை சொல்ல வைகுண்டம் அவனுக்கு இப்படி எல்லாம் சொன்னா புத்தி வராது.. எடுடா அந்த வேல் கம்ப என்று ஆவேசப்படுகிறான். உடனே சண்முகம்,என் பொண்டாட்டி கோபப்பட கூடாதுனு சொல்லி இருக்கா.. நானும் அம்மாவுக்கு அருவா எடுக்க மாட்டேன்னு சத்தியம் செய்து கொடுத்து இருக்கேன். இதை வேற மாதிரி தான் டீல் பண்ணனும் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன? சண்முகம் சௌந்தரபாண்டியை டீல் செய்யப் போவது எப்படி என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











