முத்துப்பாண்டி- இசக்கி சேர்வார்களா? 2வது திருமணம் நடக்குமா? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: முத்துப்பாண்டி, இசக்கி மீது இருக்கும் கோவத்தால், இரண்டாவது கல்யாணத்திற்கு சம்மதித்த நிலையில், வீட்ல இசக்கி அழுதுகொண்டு இருக்க, வைகுண்டம் யானை மண்ணள்ளி போட்டுக்கிற மாதிரி உன்னோட வாழ்க்கையை நீயே கெடுத்துக்க போற, அவ்வளவு தூரம் மாப்பிள்ளை வந்து கூப்பிட்டும் நீ போல, உன் அண்ணன் பேச்சை கேட்டுட்டு உன் வாழ்க்கையை கெடுத்துக்கிட்டே என்று சொல்கிறார்.

அப்போது அங்கு பாக்கியம் வந்த அண்ணா இந்த வீட்டில் என்ன நடக்குது, முத்துப்பாண்டி இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க போறேனு அவன் அப்பா கிட்டையே சொல்லிட்டான். அவர் அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்காம இருக்க மாட்டாரு, என்று சொல்ல அதெல்லாம் எப்படி பண்ண முடியும் என்று சண்முகம் சொல்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில் இசக்கி, அழுது கொண்டே இருக்க அப்போது வரும் ரத்னா. இப்படியே அழுதுகிட்டு இருந்தா என்ன அர்த்தம். முத்துப்பாண்டி மாமா, எத்தனை முறை உன்ன கூப்பிட்டாரு. நீ போயிருக்கணும் தானே, ஆனா நீ போகாம வீம்பு புடிச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம் இசக்கி, என்று கேட்க. என்ன, ரத்னா நீயும் இப்படி பேசுற, அண்ணன் சொல்லாம நான் எப்படி போக முடியும். அண்ணன் பேச்சை மீறி நான் ஏதாவது செய்ய முடியுமா? அண்ணன் எனக்கு எது செஞ்சாலும் அது என் நல்லதுக்குத்தான் செய்யும் என்று சொல்ல, ரத்னா என்னமோ பண்ணு என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறாள்.

முத்துப்பாண்டிக்கு 2வது திருமணம்: மறுநாள் காலையில், சௌந்தரபாண்டி ஷண்முகம் வீட்டுக்கு வந்து, என் புள்ளை முத்துப்பாண்டிக்கு கல்யாணம் வச்சிருக்கேன். என் சொந்த பந்தங்கள் முன்னாடி நடந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன் என்று பேச சொல்ல. சண்முகம் தாராளமா நடக்கட்டும்.. தாய்மாமன் சீரு எங்க வீட்ல இருந்து தான் வரும், அத நீங்க தடுக்கக்கூடாது என சொல்கிறான். அப்போது, பரணி குறுக்கிட்டு அவர் என்ன சொல்லுறாரு என்னமோ சீர் கொண்டுவரேனு சொல்ற என்று சண்டை போட, இரு பரணி கல்யாணம் நடக்கட்டும் என்று சொல்ல, இதைக் கேட்டு சௌந்தரபாண்டி குழப்பம் அடைகிறார்.

அண்ணன் இருக்கேன்: சௌந்தரபாண்டியன் சொல்லிட்டு போன விஷயத்தை நினைத்து இசக்கி, சாப்பிடாமல் அழுதுக்கொண்டு இருக்கிறாள். குடும்பத்தில் உள்ள எல்லோரும் சண்முகத்தின் முடிவால் அதிருப்தியில் இருக்க சண்முகம் எல்லோருக்கும் புது துணி வாங்கி வந்து கொடுக்கிறான். இசக்கி சண்முகத்தை தனியாக கூப்பிட்டு, நாளைக்கு நீ முத்துப்பாண்டி கல்யாணத்துக்கு இந்த புடவையை தான் கட்டிக்கிட்டு வரணும் என புடவையை கொடுக்கிறான். இது முத்துப்பாண்டி யாருன்னு அவன் நிரூபிக்க போற நேரம். அவன் உன்னை உண்மையா காதலிச்சா நம்ம வீட்டுக்கு வருவான்.. இல்லனா அந்த பொண்ணுக்கு வீட்டுல தாலி கட்டுவான்.. அப்படி இன்னொருத்தி கழுத்துல தாலி கட்ட தயாராகி விட்டவன் உன் வாழ்க்கைக்கு தேவையா? என்பதை நீயே முடிவு பண்ணு என அறிவுரை வழங்குகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X