இசக்கி வாழ்க்கை என்னவாகும்? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: சௌந்தரபாண்டி ஷண்முகம் வீட்டுக்கு வந்து, என் புள்ளை முத்துப்பாண்டிக்கு கல்யாணம் வச்சிருக்கேன். என் சொந்த பந்தங்கள் முன்னாடி நடந்த ரொம்ப சந்தோஷப்படுவேன் என்று பேச சொல்ல. சண்முகம் தாராளமா நடக்கட்டும்.. தாய்மாமன் சீரு எங்க வீட்ல இருந்து தான் வரும், அத நீங்க தடுக்கக்கூடாது என சொல்கிறான்.
சண்முகம் இசக்கி புடவை வாங்கி கொடுத்து, நாளைக்கு நீ முத்துப்பாண்டி கல்யாணத்துக்கு இந்த புடவையை தான் கட்டிக்கிட்டு வரணும் என புடவையை கொடுக்கிறான். இது முத்துப்பாண்டி யாருன்னு அவன் நிரூபிக்க போற நேரம். அவன் உன்னை உண்மையா காதலிச்சா நம்ம வீட்டுக்கு வருவான்.. இல்லனா அந்த பொண்ணுக்கு வீட்டுல தாலி கட்டுவான்.. அப்படி இன்னொருத்தி கழுத்துல தாலி கட்ட தயாராகி விட்டவன் உன் வாழ்க்கைக்கு தேவையா? என்பதை நீயே முடிவு பண்ணு என அறிவுரை வழங்குகிறான். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்

அண்ணா: இன்றைய எபிசோடில், முத்துப்பாண்டி திருமணம் செய்து கொள்ளும் அந்த பெண்ணுக்கு ஒரு அண்ணன், அப்பா, அம்மா என அந்த குடும்பம் காட்டப்படுகிறது. இந்த குடும்பமே முத்துபாண்டிக்காக கல்யாண மேடையில் நடிக்க ஒப்பு கொண்ட குடும்பம் தான் என தெரிய வருகிறது. ஆனால் இது எதுவும் தெரியாத சௌந்தரபாண்டி தனது மகனுக்கு எப்படியாவது இந்த கல்யாணத்தை நடத்தி வைத்து சண்முகத்தை பழி தீர்த்து விட வேண்டும் என்று கனவு காண்கிறான்.
சீருடன் வரும் சண்முகம்: அதே போல் ஷண்முகம் தங்கச்சி புருஷனுக்கு இன்னொரு கல்யாணம் என்ற பதைபதைப்பு எதுவும் இல்லாமல் தாய் மாமன் சீர் கொண்டு வருகிறான். இதை பார்த்து சௌந்தரபாண்டி, என்ன சண்முகம் கல்யாணத்திற்கு இவ்வளவு தைரியமா வந்து இருக்க, அதுவும் தங்கச்சியையும் கூட்டிக்கிட்டு வந்து இருக்க, பாத்து சண்முகம் கல்யாணம் முடிஞ்சதும் உன் தங்கச்சி தூக்கில் தொங்கிட போறா, அவள் உயிர் போச்சுனா அதுக்கு நான் காரணம் இல்லை என்று சொல்ல, அப்போது , சண்முகம், மாமனாரே இது என் தங்கச்சி என் தங்கச்சிக்கு தைரியத்தை ஊட்டித்தான் வளர்த்து இருக்கிறேன் என்று சொல்கிறான். சண்முகத்தின் திமிரான பேச்சை பேட்ட சௌந்தரப்பாண்டி குழப்பம் அடைகிறார், ஷண்முகம் இந்த கல்யாணத்தை நடத்த விடுவானா? மாட்டானா? என்று சந்தேகம் கொள்கிறார்.
மறுபக்கம் இசக்கி தனது வாழ்க்கை என்னவாகும்? முத்துப்பாண்டி இரண்டாவது திருமணம் செய்து கொள்வானா? என்ற உச்சகட்ட பதற்றத்தில் தவிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











