மொத்த மானமும் போச்சா.. சண்முகம் போட்ட பிளான்..அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: சௌந்தரபாண்டி, பாக்கியத்தை வீட்டிற்குள் சேர்க்காமல் விரட்டி விடுகிறான். ஆனால், பாக்கியம் இரவு ஆகிவிட்ட போதும் வாசலில் நின்று கொண்டு இருக்கிறாள். இதையடுத்து, சிவபாலன், சண்முகம் வீட்டிற்கு வந்து, அப்பா, அம்மாவை வீட்டிற்குள் விடாத விஷயத்தை சொல்ல வைகுண்டம் அவனுக்கு இப்படி எல்லாம் சொன்னா புத்தி வராது.. எடுடா அந்த வேல் கம்பை என்று ஆவேசப்படுகிறான்.

அவரை தடுத்து நிறுத்திய சண்முகம், இதை வேற மாதிரி தான் டீல் பண்ணனும் என்று சொல்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil anna

இன்றைய எபிசோடில், ஷண்முகம், வைகுண்டம் என எல்லாரும் சௌந்தரபாண்டி வீட்டிற்கு வருகின்றனர். அப்போது பாக்கியம் வெளியே நின்று கொண்டிருப்பதை பார்க்கின்றனர். அப்போது சண்முகம், ஏன் அத்தை இவ்வளவு கஷ்டப்பட்டு நீ இந்த வீட்டில் இருக்கணுமா? என்கூட வந்துடு என்று சொல்லி வீட்டிற்கு அழைக்கிறான். ஆனால், பாக்கியம் நான் செத்தாலும் இந்த வீட்டை விட்டு வரமாட்டேன், நான் என் புருஷன் வீட்டில் தான் இருப்பேன் என்று சொல்கிறாள்.

அண்ணா சீரியல்: பாக்யம் சொன்னதை கேட்டு ஆத்திரப்பட்ட சண்முகம், பொம்பளைங்க என்ன நடந்தாலும் அடி வாங்கிட்டு புகுந்த வீட்டில் இருந்தது எல்லாம் அந்த காலம், இப்போ காலம் மாறிப்போச்சு அத்தை, இன்னமும் நீ, செத்தாலும் இங்கே தான் இருப்பேனு சொன்ன, இந்த ஆள் உன்னை கொன்னுடுவான் என்று சொல்கிறான். இதைக்கேட்ட பாக்கியம், நீ சொல்றதையெல்லாம் கேட்டுட்டு உன் கூட வந்தா.. நீ செய்ததெல்லாம் சரி என்று நானே சொல்ற மாதிரி ஆகிரும். நான் இந்த வீட்டை விட்டு வர மாட்டேன் என்று சொல்கிறாள்.

சண்முகத்தின் பிளான்: இதனால், சண்முகம் ஒரு திட்டத்தை போட்டு, உடன்குடி என தனக்கு தெரிந்த எல்லாருக்கும் போன் போட்டு ஏதோ சொல்கிறான். அடுத்து சௌந்தரபாண்டி தூங்கி கொண்டிருக்க ஏ.கே.எஸ் அண்ணாச்சி போனை போட்டு என்ன பண்றீங்க என்று கேட்க தூங்குவதாக சொல்ல திருநெல்வேலி முழுசும் உங்க மானம் சிரிப்பா சிரிக்க போகுது என்கிறான். இசக்கியை எப்படி மேளதாளத்துடன் சண்முகம் வீட்டுக்கு கூட்டிட்டு போனானே, அதைவிட இன்னும் பெரிய ஏற்பாடுகளுடன் உங்க பொண்டாட்டியை சண்முகம் வீட்டுக்கு அழைத்து செல்ல போகிறான் என்று சொல்ல சௌந்தரப்பாண்டி அதிர்ச்சி அடைகிறான்.

மொத்த மானமும் போக போது: இதையடுத்து, சௌந்தரபாண்டி வெளியே வர ஷண்முகம் அத்தையை கூட்டிட்டு போக யானையை வர சொல்லு என்று சொல்கிறான். 1000 வாலா 10 எல்லாம் பத்தாது, இன்னும் 10 சேர்த்து வாங்கு என்று சொல்கிறான். பாண்டியம்மா விடுடா கூட்டிட்டு போனா கூட்டிட்டு போகட்டும் என்று சொல்ல, கடுப்பான சௌந்தரப்பாண்டி போக போறது என் மானம் தானே சும்மா இரு என்று திட்டி விடுகிறான்.

இதையடுத்து, சௌந்தரபாண்டி வெளியே வந்து, பாக்கியத்தை உள்ளே போக சொல்ல, பாக்கியம் முடியாது என்று முரண்டு பிடித்துக்கொண்ட நிற்கிறாள். ஷண்முகம் நீ வெளியே போக சொன்னா போகணும், உள்ளே வர சொல்ல உடனே வந்துடணுமா? கையெடுத்து கும்பிட்டு உள்ளே கூப்பிடு என்று செக்மேட் வைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X