அண்ணா சீரியலை விட்டு விலகிய நடிகர்… இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன?
சென்னை: நேற்றைய எபிசோடில், முத்துப்பாண்டி வீட்டுக்கு வர, இசக்கி எங்கே என்று கேட்க, பாக்கியம், உன் அப்பா, இசக்கியை எண்ணெய் ஊத்தி கொளுத்தப் பார்த்தார். இதனால், சண்முகம் அவளை வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டான் என்று சொல்கிறாள். இதைக்கேட்ட முத்துப்பாண்டி, சௌந்தரபாண்டியை விளாசு விளாசு என்று விளாசுகிறான். இதையடுத்து, முத்துப்பாண்டி இசக்கியை கூட்டிட்டு வருவதாக சொல்லிவிட்டு ஷண்முகம் வீட்டிற்கு கிளம்பி வருகிறார்.
அப்போது, பாக்கியம் மற்றும் சிவபாலன் என இருவரும் சௌந்தரபாண்டியை கலாய்கின்றனர். என்னமோ. உங்க பையன் வந்தா கிழிச்சிடுவானு சொன்னீங்க.. இப்போ உங்களை தானே கிழிச்சி தொங்க விட்டுட்டான் என்று கலாய்க்கின்றனர். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

அண்ணா: இன்றைய எபிசோடில், பாக்கியம் பரணிக்கு போன் போட்டு, பேச, பரணி வேலை செய்து கொண்ட இருப்பதால், பரணி போனை ஸ்பீக்கரில் போட்டு பேச இசக்கி அத்தை என்று குரல் கொடுக்க பாக்கியம் யார் அது.. எனக்கு காது கேட்கல என்று சொல்கிறாள். இசக்கி திரும்பவும் என்ன அத்தை ரெண்டு நாள்ல என்னை மறந்துடீங்களா ... என்று கேள்வி கேட்கிறாள். உடனே பாக்கியம் என் பேச்சை கேட்காதவ கிட்ட நான் பேசவிரும்பவில்லை என்று சொல்ல, இசக்கி இது தான் மாமியார் குசும்பா.. சரி நீங்க பேச வேண்டாம் என்று சொல்லிவிடுகிறாள் இதையடுத்து, பரணி ஸ்பீக்கரை ஆப் செய்து விடுகிறாள்.
மகிழ்ச்சியில் இசக்கி:முத்துப்பாண்டி திரும்பி வந்ததையும் சௌந்தரபாண்டியை மிரள விட்ட விஷயத்தையும் சொல்ல பரணி, என்னம்மா சொல்லுற நம்ப முத்துப்பாண்டிய இப்படி செய்தான் ஆச்சரியப்பட்டு பேச, இசக்கி என்ன பேசுறாங்க என்று தெரியாமல் தவிக்கிறாள். பிறகு முத்துப்பாண்டி வந்த விஷயம் அறிந்து சந்தோசப்படுகிறாள். அதோடு முத்துப்பாண்டி இங்கே தான் வாரான் என்று தெரிந்ததும் இன்னும் ஆவலாகிறாள். உடனே ரூமுக்கு போய் இந்த புடவை கட்டிக்கவா? அந்த புடவை கட்டிக்கவா? என்று ஆசையாக ரெடியாகிறாள். சண்முகத்திற்கும் போன் போட்டு முத்துப்பாண்டி வீட்டிற்கு வரும் விஷயத்தையும் வீட்டில் நடந்த விஷயத்தையும் சொல்கிறாள்.
சண்முகம் எடுக்கும் முடிவு என்ன: வீட்டிற்கு வரும் சண்முகம் முத்துப்பாண்டி நடந்துக்கிட்டது சரி தான் என்று பேச சண்முகம் இசக்கியை முத்துபாண்டியுடன் அனுப்பி விடுவானோ.. என்று பரணி நம்ப தொடங்குகிறாள். அடுத்து முத்துப்பாண்டி வீட்டிற்கு வர சண்முகம் அவனை வரவேற்க இசக்கி மற்றும் முத்துப்பாண்டி என இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு காதலுடன் பார்த்துக் கொள்கின்றனர். ஷண்முகம் முதல்ல சாப்பிடுங்க என்று முத்துபாண்டியை உட்கார வைத்து சாப்பாடு பரிமாற சொல்கிறான். முத்துப்பாண்டி இசக்கியை வீட்டிற்கு அழைத்து செல்வதாக சொல்கிறான். இந்த நேரத்தில் சண்முகம் எடுக்க போகும் முடிவு என்ன? அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
இவருக்கு பதில் இவர்: இந்த சீரியலில் இத்தனை நாள் முத்துப்பாண்டியாக நடித்த நடிகர் சத்யா,பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பதால், அவருக்கு பதிலாக, , N4 என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்த அப்சல் ஹமீத் இனி முத்துப்பாண்டி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. இவரது காட்சிகள் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது


Click it and Unblock the Notifications











