நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால.. முத்துப்பாண்டி, இசக்கி ரொமான்ஸ்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், சௌந்தரபாண்டி மீது எண்ணெய் ஊற்றி மிரட்டிய முத்துப்பாண்டி, எனக்கு என் பொண்டாட்டி இசக்கி முக்கியம், இந்த வீட்டில் தான் அவ வாழ்வா, ஆனால், இனி மேல் என் பொண்டாட்டி கையால உனக்கு தண்ணிக்கூட கிடைக்காது என்று சொல்லி விட்டு, இசக்கியை அழைத்து வருவதற்கான சண்முகம் வீட்டிற்கு கிளம்புகிறான் முத்துப்பாண்டி.

இந்த விஷயத்தை பாக்கியம், பரணிக்கு போன் செய்து முத்துப்பாண்டி இங்கே தான் வந்துக்கிட்டு இருக்கிறான் என்று சொல்ல. நீண்ட நாள் கழித்து புருஷனை பார்க்கும் ஆசையில் இருக்கும், இசக்கி, ரூமுக்கு போய் இந்த புடவை கட்டிக்கவா? அந்த புடவை கட்டிக்கவா? என்று ஆசையாக ரெடியாகிறாள். சண்முகத்திற்கும் போன் போட்டு முத்துப்பாண்டி வீட்டிற்கு வரும் விஷயத்தையும் வீட்டில் நடந்த விஷயத்தையும் சொல்கிறாள் பரணி இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், முத்துப்பாண்டி எப்போது வருவார் என ஆசையோடு இசக்கி வாசலிலேயே காத்துக்கொண்டிருக்க. முத்துப்பாண்டி வந்ததும் ஆசையாக ஓடிப்போய் கட்டி அணைத்து கதறி அழுகிறாள். இதை பார்த்த முத்துப்பாண்டி, ஏன் அழுற நான்தான் வந்துட்டேனே. இனிமே உனக்கு எந்த பிரச்சினையும் வராது, நான் இனிமே உன்னை பார்த்துக்கிறேன் என்று சொல்லிட்டு இசக்கிய சமாதானப்படுத்தி, வாங்கி வந்த மல்லி பூ கொடுக்கிறான். இசக்கி நீங்களே எனக்கு வெச்சி விடுங்க என்று சொல்ல, முத்துப்பாண்டி இசக்கிக்கு மல்லி பூ வச்சி விடுகிறான். இத வீட்டுக்குள்ள இருந்து பரணி, ரத்னா, கனி, வீரா என அனைவரும் கிண்டல் அடிக்கின்றனர்.

மொத்தமாக மாறிய முத்துப்பாண்டி: இதையடுத்து, சண்முகம் வெளியே வர, முத்துப்பாண்டி வந்ததை பார்த்து வாங்க மாப்பிள்ளை என்று நலம் விசாரித்து அழைக்கிறான். உடனே முத்துப்பாண்டி, சண்முகம் நீங்க செஞ்சது உண்மையிலேயே நல்ல விஷயம் தான் சண்முகத்தை பாராட்டி கட்டி பிடிக்கிறான். பின் வைகுண்டம் காலில் விழுந்து அசீர்வாதம் வாங்குகிறான்.இதைப் பார்த்த பரணி, எப்படி இருந்த என் அண்ணனை இசக்கி எப்படி மாத்திவிட்டாள் என்று மனசுக்குள்ள பூரிப்பு அடையுறாங்க.

அனுப்ப முடியாது: இதனை தொடர்ந்து முத்துப்பாண்டி, இசக்கியை வீட்டிற்கு அழைத்து செல்வதாக சொல்ல ஷண்முகம் அந்த வீட்டிற்கு அனுப்ப முடியாது என மறுப்பு தெரிவிக்கிறான். இதனால், ஷண்முகம் மற்றும் முத்துப்பாண்டி இடையே வாக்குவாதம் உருவாகிறது. இத்தனை நாள் நான் வீட்டில் இல்ல, இப்போ தான் நான் வந்துவிட்டேனே. இனி மேல், இசக்கியை நான் நல்லபடியா பார்த்துப்பேன் என்று சொல்கிறான். உடனே ஷண்முகம் 24 மணி நேரமும் உன்னால காவல் காக்க முடியுமா? நீ என் தங்கச்சியை பார்ப்பியா? இன்ஸ்பெக்டர் வேலையை பார்ப்பியா? என்று கேள்வி கேட்கிறான்.

இசக்கி என்ன முடிவு எடுப்பாள்: அன்னைக்கு மட்டும் ஒரே ஒரு தீக்குச்சியை உரசி இருந்தா.. இன்னைக்கு என் தங்கச்சி உயிரோடவே இருந்திருக்க மாட்டா என்று ஆவேசப்படுகிறான். நான் உன்னை என் தங்கச்சியோட வாழ வேண்டாம்னு சொல்லல, அந்த வீட்டில் வேண்டாம். என் தங்கச்சி வேணும்னா இந்த வீட்டில் வந்து வாழு என்று சொல்கிறான். இதையடுத்து, முத்துபாண்டி, இசக்கி அவளோட முடிவை சொல்லட்டும் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X