மானமே இல்லையா? காலில் விழணுமா? இசக்கி எடுக்கும் முடிவு என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: சனிக்கிழமை எபிசோடில், முத்துப்பாண்டி, இசக்கியை வீட்டிற்கு அழைத்து செல்வதாக சொல்ல ஷண்முகம் அந்த வீட்டிற்கு அனுப்ப முடியாது என மறுப்பு தெரிவிக்கிறான். இதனால், ஷண்முகம் மற்றும் முத்துப்பாண்டி இடையே வாக்குவாதம் நடக்கிறது. இத்தனை நாள் நான் வீட்டில் இல்ல, இப்போ தான் நான் வந்துவிட்டேனே. இனி மேல், இசக்கியை நான் நல்லபடியா பார்த்துப்பேன் என்று சொல்கிறான். உடனே ஷண்முகம் 24 மணி நேரமும் உன்னால காவல் காக்க முடியுமா? என்று கேள்வி கேட்கிறான்.

அன்னைக்கு மட்டும் ஒரே ஒரு தீக்குச்சியை உரசி இருந்தா.. இன்னைக்கு என் தங்கச்சி உயிரோடவே இருந்திருக்க மாட்டா என்று ஆவேசப்படுகிறான். நான் உன்னை என் தங்கச்சியோட வாழ வேண்டாம்னு சொல்லல, அந்த வீட்டில் வேண்டாம். என் தங்கச்சி வேணும்னா இந்த வீட்டில் வந்து வாழு என்று சொல்கிறான். இதையடுத்து, முத்துபாண்டி, இசக்கி அவளோட முடிவை சொல்லட்டும் என்று சொல்கிறான் இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil Anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், இசக்கியின் முடிவுக்காக அனைவரும் காத்துக் கொண்டிருக்க இசக்கியோ அண்ணன் என்ன சொல்றாரோ அதன்படி தான் நான் கேட்பேன் என்று என்று சொல்கிறாள் இதைக் கேட்டு ஆத்திரமடையும் முத்துப்பாண்டி, நான் இல்லாத போது நடந்த ஒரு பிரச்சனைக்காக,
நான் வந்து கூப்பிட்ட பிறகு, இனி வரமாட்டேனு சொல்லுவது சரியில்லை, இத பாரு டி இசக்கி உன் மேல எனக்கு பாசமும் இருக்கு, காதலும் இருக்கு, பொண்டாட்டி என்றால் நீ மட்டும் தான். என் கூட வாழ உனக்கு விருப்பம் இருக்கா? இல்லையா? அதை மட்டும் சொல்லு என்கிறான் முத்து பாண்டி.

உனக்காக வந்து இருக்கேன்: இதைக்கேட்ட இசக்கி, என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க, நீங்கதான் என் உலகம் நீங்க இல்லாம நான் எப்படி இருப்பேன் என்றாள். அப்படினா இப்பவே என் கூட கிளம்பி வா, வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல, இசக்கி, அண்ணா சொல்லாமல் வரமாட்டேன் என்கிறாள். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த முத்துப்பாண்டி வெட்கம், மானம் எல்லாத்தையும் விட்டுட்டு நீதான் வேணும்னு, நான் இந்த வீட்டுக்கு வந்து நின்னா, நீ என்ன வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டியா? இனிமே நீயும் எனக்கும் தேவையில்லை என்று சொல்லிவிட்டு பைக் எடுத்துகொண்டு வேகமாக கிளம்பி விடுகிறான்.

இனி வரமாட்டாள்: வீட்டில் பாக்கியம், முத்துப்பாண்டியின் வருகைக்காக காத்துக் கொண்டு வாசலிலேயே நின்று கொண்டிருக்கிறாள். அப்போது முத்துப்பாண்டி தனியாக வருவதை பார்த்து, இசக்கி வரவில்லையா என்று கேட்க, முத்துப்பாண்டி பாக்கியத்திடம் நடந்த விஷயத்தை சொல்லி விட்டு, இனிமேல் இசக்கி அந்த வீட்டிலேயே இருக்கட்டும் என்று சொல்கிறான். இதைக் கேட்டு சிவபாலன் மற்றும் பாக்கியம் அதிர்ச்சி அடைய, சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மா சந்தோஷப்படுகின்றனர். நாம நினைச்ச மாதிரியே நடந்துடுச்சு.. இனிமே முத்துபாண்டியை வச்சு அவங்கள பழிவாங்க வேண்டியது தான் என திட்டம் போடுகின்றனர்.

கால்ல விழனுமா?: இது ஒரு பக்கம் இருக்க பாக்கியம், சண்முகம் வீட்டிற்கு வந்து முத்துப்பாண்டி கூப்பிட்டும் ஏன் இசக்கியை அனுப்பல, ஊருக்கு முன்னாடி உன் கால்ல விழுந்தால் தான் இசக்கியை வீட்டுக்கு அனுப்புவியா என்று கேட்க, சண்முகம் என் தங்கச்சியை எங்கையும் அனுப்ப மாட்டேன். முத்துப்பாண்டி என் வீட்டுல வந்து என் தங்கச்சியோட என் கண்முன்னாடியே சந்தோஷமாக வாழ்வதாக இருந்தால் வாழட்டும் என தனது முடிவில் உறுதியாக இருக்கிறான். இதைக்கேட்ட பாக்கியம் இரண்டு ஆம்பளைங்களும் வீம்பு புடிச்சி ஒரு பெண்ணோட வாழ்க்கையில விளையாடுறீங்க என்று சொல்கிறாள்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X