குழந்தையை காப்பாற்ற போராடும் பரணி... நடக்கப்போவது என்ன? அண்ணா சீரியல்!
சென்னை: வீராவும் சிவபாலனும் பேசியதால், இவனும் சண்முகம் வீட்டுக்கு மாப்பிள்ளையாகி விடுவான் என்று பயந்து போன, சௌந்தரபாண்டி ஒரு பெண்ணை பார்த்து பேசி வீட்டுக்கு வரவழைக்க, அந்த பெண் வீட்டார் சிவபாலனை வீட்டோட மாப்பிள்ளையாக கேட்க, சிவபாலன் எனக்கு ஓகே தான் அப்பா, நான் வீட்டோட மாப்பிள்ளையாக போயிடுறேன்.. நீங்க மட்டும் தனியாக சந்தோசமா இருங்க என்று சொல்ல கடுப்பான சௌந்தரபாண்டி இனிமே யாராவது வீட்டோட மாப்பிள்ளையாக கேட்டு வந்தீங்க அவ்வளவு தான் என சத்தம் போட்டு அவர்களை அனுப்பி வைக்கிறார்.
இதை தொடர்ந்து திருச்செந்தூரை பூர்வீகமாக கொண்டு அமெரிக்காவில் செட்டிலான ஒரு குடும்பம் கோவிலில் பரிகாரம் செய்வதற்காக திருச்செந்தூர் வருகின்றனர். அப்போது கணவனும் மனைவியும் கோவில் கடற்கரையில் தலை மூழ்கி வருவதற்காக செல்கின்றனர், தங்களது குழந்தையை மட்டும் காரில் உட்கார வைத்து விட்டு டிரைவரை பார்த்து கொள்ள சொல்கின்றனர். திடீரென குழந்தைக்கு ஃபிட்ஸ் வர டிரைவர் பதறி போய் கடற்கரைக்கு வந்து தேடுகிறார்.அங்கு யாரும் இல்லாததால் அதிர்ச்சி அடைகிறார். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

அண்ணா: இன்றைய சீரியலில், கடற்கரையில் பெற்றோரை தேடிய டிரைவர், இப்படியே விட்டால் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகி விடும் என பயந்து வேறு வழியில்லாமல், குழந்தையை மருத்துவமனையில் சேர்க்க செல்கிறார். அந்த நேரத்தில் பரணியின் கிளினிக் இருக்க அங்க அழைத்து செல்கிறார். குழந்தையை பரிசோதனை செய்த பரணி, காய்ச்சல் மிகவும் அதிகமாக இருக்கு, எப்போதில் இருந்து குழந்தைக்கு இப்படி இருக்கு என்று கேட்க, டிரைவர் இது என்னுடைய குழந்தை இல்லை, நான் டிரைவர் என் வண்டியில் வந்தவர்களின் குழந்தை என்று சொல்கிறான்.
குழந்தையை காப்பாற்ற போராடும் பரணி: இதையடுத்து, குழந்தைக்கு மருத்துவ உதவி செய்யும் பரணி, இந்த வியாதி இந்தியாவிலேயே இல்லை, இந்த வியாதிக்கு மருந்து மதுரை மருத்துவமனையில் தான் இருக்கிறது. இதனால், உடனே குழந்தையை மதுரைக்கு அழைத்து கொண்டு செல்ல வேண்டும் என்கிறாள். இதையடுத்து, ஆம்புலன்சுக்கு பரணி ஏற்பாடு செய்ய, எங்கேயும் ஆம்புலன்ஸ் இல்லாததால் பரணி என்ன செய்வது, இன்னும் இரண்டு மணி நேரத்தில் இந்த குழந்தைக்கு சிகிச்சை கொடுத்தால் தான் குழந்தையை காப்பாற்ற முடியும் என்கிறாள். இதையடுத்து, டிரைவர், எதுக்கு ஆம்புலன்சுக்காக காத்து இருக்க வேண்டும் மேடம், என்னால் நிச்சயமாக இரண்டு மணி நேரத்திற்குள் மதுரை மருத்துவமனைக்கு செல்ல முடியும் என்று சொல்ல, பரணி அந்த குழந்தையை அழைத்துக்கொண்டு மதுரைக்கு கிளம்புகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
அமெரிக்காவில் இருந்து திருச்செந்தூர் வரும் பிரபலங்களாக தெய்வம் தந்த பூவே ஸ்ரீநிதி மற்றும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஜமீலா என்ற சீரியலில் நாயகனாக நடித்த அஜய் ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் குழந்தை நட்சத்திரமாக நினைத்தேன் வந்தாய் சீரியல் அஞ்சலி பாப்பா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











