குழந்தையை நெருங்கும் ஆபத்து.. போராடும் பரணி.. உடைந்து விழுந்த பாலம்.. அண்ணா சீரியல்!
சென்னை: குழந்தைக்கு மருத்துவ உதவி செய்யும் பரணி, இந்த வியாதி இந்தியாவிலேயே இல்லை, இந்த வியாதிக்கு மருந்து மதுரை மருத்துவமனையில் தான் இருக்கிறது. இதனால், உடனே குழந்தையை மதுரைக்கு அழைத்து கொண்டு செல்ல வேண்டும் என்கிறாள். இதையடுத்து, ஆம்புலன்சுக்கு பரணி ஏற்பாடு செய்ய, எங்கேயும் ஆம்புலன்ஸ் இல்லாததால் பரணி என்ன செய்வது, இன்னும் இரண்டு மணி நேரத்தில் இந்த குழந்தைக்கு சிகிச்சை கொடுத்தால் தான் குழந்தையை காப்பாற்ற முடியும் என்கிறாள்.
இதையடுத்து, டிரைவர், எதுக்கு ஆம்புலன்சுக்காக காத்து இருக்க வேண்டாம் மேடம், என்னால் நிச்சயமாக இரண்டு மணி நேரத்திற்குள் மதுரை மருத்துவமனைக்கு செல்ல முடியும் என்று சொல்ல, பரணி அந்த குழந்தையை அழைத்துக்கொண்டு மதுரைக்கு கிளம்புகின்றாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், பரணி தன்னுடைய புரொபஸருக்கு போன் செய்து, குழந்தையின் நிலைமையை பற்றி சொல்ல, இது ஒரு அறிய வகை டிசீஸ்.. இதற்கான மருந்து மதுரையில் தான் கிடைக்கும் என்று சொல்லி வேகவேகமாக செல்கிறாள். இன்னொரு பக்கம், பரணி, சண்முகத்திற்கு போன் செய்து, மூத்த மருத்துவர் சொன்ன மருந்தை வாங்க மெடிக்கல் ஷாப்பில் வாங்கும்படி சொல்ல, அந்த மருந்தை தேடி, மெடிக்கல் மெடிக்கலாக ஏறி இறங்குகிறான்.
பதறிய பெற்றோர்: கடற்கரையில் குளித்துவிட்டுவந்த பெற்றோர், காரும், குழந்தையும் இல்லாததைப்பார்த்து, பல இடத்தில் தேடுகின்றனர். பின் அந்த பெற்றோர் சௌந்தரபாண்டிக்கு போனை போட்டு, விஷயத்தை சொல்கின்றனர். உடனே, சௌந்தரபாண்டி என் பையன் இந்த ஊரில் தான் இன்ஸ்பெக்டராக இருக்கிறார்.அவன் நிச்சயம் உங்களுக்கு உதவி செய்வான், நீங்க பயப்படாமல் இருங்க என்று சொல்கிறார். இதையடுத்து, சௌந்தரபாண்டி, முத்துப்பாண்டிக்கு போன் போட்டு, விஷயத்தை சொல்ல, அந்த டிரைவர் யார் என்று விசாரிக்கிறான். மேலும் வந்தவர் ஆக்டிங் டிரைவர் என சொல்லி கார் நம்பர், டிரைவரின் போட்டோ உள்ளிட்ட விஷயங்களையும் சேர் செய்கின்றனர்.
நடக்கப்போவது என்ன: மறுபக்கம், இங்கே ஷண்முகம் கடை கடையாக ஏறி இறங்கியும் மருந்து கிடைக்காத நிலையில் ஒரு மெடிக்கல் ஷாப்பில் முருகன் சிரித்து கொண்டிருப்பது போல் இருக்கும் போட்டோவை பார்த்து நம்பிக்கையுடன் விசாரிக்க மருந்தும் கிடைக்கிறது. ஷண்முகம் மருந்து கிடைத்து விட்டதாக பரணிக்கு தகவல் கொடுக்க இருவரும் லொகேஷனை ஷேர் செய்து நெருங்கி செல்கின்றனர். இன்னொரு பக்கம் முத்துப்பாண்டி நம்பரை வைத்து ட்ரேஸ் செய்து கார் மதுரை நோக்கி செல்வதை அறிந்து கொண்டு அனைத்து சோதனை சாவடிகளுக்கும் தகவல் கொடுக்கிறான்.
ஷண்முகம் மற்றும் பரணி என இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் வர இடையில் இருக்கும் பாலம் உடைந்து விட்டதாகவும் கார் போக முடியாது எனவும் சொல்கிறான். பாலத்திற்கு ஒரு பக்கம் பரணி இன்னொரு பக்கம் ஷண்முகம் என நிற்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











