அய்யய்யோ நெஞ்சு அலையுதடி.. முத்துப்பாண்டி, இசக்கி இடையே நடந்த ரொமான்ஸ்.. அண்ணா சீரியல்!
சென்னை: பரணி, உயிருக்கு போராடியை குழந்தையை காப்பாற்றிய நிலையில், அந்த குழந்தையின் பெற்றோர். பரணி அமெரிக்கா போய் படிப்பதற்கு ஆகும் செலவை நானே ஏற்றுக்கொள்கிறேன் என்கிறார். இதைக்கேட்டு பரணி ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும் குடும்பத்தை விட்டு எப்படி போவது என நினைத்து வருத்தப்படுகிறாள். இதைத்தொடர்ந்து,சனியன் மற்றும் சௌந்தரபாண்டி இருவரும் பேசிக்கொண்டு இருக்க அப்போது,சௌந்தரபாண்டி எப்படியாவது, பரணியை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்து, அந்த சண்முகத்திடம் இருந்து பரணியை பிரித்துவிட வேண்டும் என சொல்கிறான்.
அப்போது சனியன், பரணி அம்மா,அமெரிக்கா போகலானா என்ன பண்றது என்று கேட்க, சௌந்தரபாண்டி பரணி அமெரிக்கா போனால் அந்த சண்முகம் குடும்பத்தை பிரிப்பேன். அவ அமெரிக்கா போகவில்லை என்றாலும், அதையே காரணமா வச்சி அந்த குடும்பத்தை பிரிப்பேன்.. எது நடந்தாலும் அந்த குடும்பத்தை பிரிப்பேன் என்று சொல்கிறான். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்

அண்ணா சீரியல்: ஷண்முகம் தனது குடும்பத்தினர் சிவராத்திரிக்காக கோவிலுக்கு செல்கின்றனர். அப்போது, முத்துப்பாண்டி வராத காரணத்தினால் இசக்கியை வீட்டில் இருக்கிறாள். நீங்க எல்லாம் போங்க நான் அவர் வந்ததும் வருகிறேன் என்கிறாள். இதனால், அனைவரும் கோவிலுக்கு கிளம்பி செல்ல, இசக்கி மட்டும் வீட்டில் இருக்கிறாள். அப்போது, முத்துபாண்டி கையில் காயத்துடன் இருக்க ஒரு கான்ஸ்டபிள் வீட்டில் டிராப் செய்து விட்டு கிளம்புகிறார். இதைப்பார்த்து இசக்கி பயந்து போக, இது சாதாரண அடி தான் என்று சொல்லி அவளை சமாதானப்படுத்துகிறான்
பாட்டுப்பாடும் கனி: கோவிலில் ஒரு சிறுமி அழகாக பாடி முடிக்க, அந்த சிறுமியின் அப்பா, அந்த ஊர்ல யாருக்கும் பாட்டுப்பாட தெரியாத என்று கேட்க, பரணி, கனி நீ போய் பாட்டுப்பாடு என்று சொல்ல கனி மேடைக்கு சென்று பாட்டுப்பாடுகிறாள். கனி அழகாக பாடி முடிக்க அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்துகின்றனர். கனி பாடியதைப்பார்த்த வைகுண்டம் மற்றும் சண்முகம் கனி இவ்வளவு அழகாக பாடுவானு எங்களுக்கு தெரியாமல் போய்டுச்சு என்று, கனி பாடியதைப்பார்த்து சந்தோசப்படுகின்றனர்.
சந்தோஷமா இருக்கட்டும்: அடுத்து பரணிக்கு போன் செய்யும் இசக்கி, முத்துப்பாண்டிக்குகையில் அடிபட்டு இருக்கு, இந்த நிலைமையில் நான் எப்படி அவரைவிட்டு வரமுடியும், நாங்க வரல.. நீங்க பொறுமையாக காலையில் வாங்க என்று சொல்லி போனை வைக்க முத்துபாண்டிக்கு அடிபட்டு இருக்கும் விஷயம் அறிந்ததும் ஷண்முகம் நான் போய், இசக்கியை கூட்டிட்டு வரேன் என்று கிளம்புகிறான். அப்போது, பரணி சண்முகத்தை தடுத்து நிறுத்தி, வீட்டில் இன்னைக்குத்தான் ஆள் இல்ல,ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கட்டுமே என்று சொல்லி, சண்முகத்தை தடுத்து நிறுத்துகிறாள்.
இசக்கி, முத்துப்பாண்டி ரொமான்ஸ்: வீட்டில், இசக்கி முத்துப்பாண்டிக்கு சாப்பாடு ஊட்டி விட இருவருக்குள்ளும் ரொமான்ஸ் நடக்கிறதஅப்போது, முத்துபாண்டி வீட்டில் யாரும் இல்லையா என்று கேட்க, இசக்கி ஆமாம் மாமா என்று சொல்கிறாள். இதையடுத்து, இருவருக்கும் முதலிரவு நடந்து முடிகிறது, அடுத்த நாள் காலையில் இசக்கி கோலம் போட்டு கொண்டிருக்க முத்துப்பாண்டி அவளிடம் ரொமான்ஸ் செய்கிறான். இந்த நேரம் பார்த்து கோவிலில் இருந்து அனைவரும் வீட்டிற்கு வந்து விடுகின்றனர், முத்துப்பாண்டி கையில் கட்டு இல்லாமல் இருக்க எங்க அடிபட்டு இருக்குனு சொன்னாங்க என்று கலாய்க்கின்றனர். மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருப்பதை பார்த்த சௌந்திரபாண்டி பரணியை அமெரிக்காவிற்கு அனுப்பி விட்டு இந்த குடும்பத்தை பிரிக்கணும் என்ற திட்டத்துடன் ஷண்முகம் வீட்டிற்குள் நுழைகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











