பரணி - சண்முகம் இடையே வந்த விரிசல்.. குடும்பம் பிரியுமா? அண்ணா சீரியல்!
சென்னை: இசக்கி முத்துப்பாண்டிக்கு சாப்பாடு ஊட்டி விட இருவருக்குள்ளும் ரொமான்ஸ் நடக்கிறது அப்போது, முத்துபாண்டி வீட்டில் யாரும் இல்லையா என்று கேட்க, இசக்கி ஆமாம் மாமா என்று சொல்கிறாள். இதையடுத்து, இருவருக்கும் முதலிரவு நடந்து முடிகிறது, அடுத்த நாள் காலையில் இசக்கி கோலம் போட்டு கொண்டிருக்க முத்துப்பாண்டி அவளிடம் ரொமான்ஸ் செய்கிறான். இந்த நேரம் பார்த்து கோவிலில் இருந்து அனைவரும் வீட்டிற்கு வர, முத்துப்பாண்டி கையில் கட்டு இல்லாமல் இருக்க எங்க அடிபட்டு இருக்குனு சொன்னாங்க என்று கலாய்க்கின்றனர். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில், பரணி குழந்தையின் உயிரை காப்பாற்றியதால், அமெரிக்காவில் படிக்க வைப்பதற்கு ஆகும் செலவு, அனைத்தையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்ன அந்த அமெரிக்க காரரிடம் இருந்து, பரணிக்கு மெயில் வர, அந்த மெயிலை எடுத்துக்கொண்டு சௌந்தரபாண்டி, சண்முகம் வீட்டிற்கு செல்கிறான். அந்த மெயிலை பார்த்த, முத்துப்பாண்டி மிகப்பெரிய விஷயம் இந்த யுனிவர்சிட்டியில் படிப்பதற்கு பத்து லட்சம் ரூபாய் வரை செலவாகும், இந்த இடத்தில் படிப்பதற்கு இடம் கிடைப்பதே மிகப்பெரிய விஷயம் என்று சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.

நடக்கப்போவது என்ன: அப்போது சனியன் அனைவருக்கும் பரணி அமெரிக்க சென்று படிப்பதில் சம்மதம். ஆனால், சண்முகம் என்ன நினைக்கிறான் என்று தெரியவில்லை என்று சொல்கிறான். அப்போது, வீரா, அண்ணன் எங்களையே படிப்படி என்று எப்போதுமே சொல்லிக்கிட்டே இருக்கும். அண்ணிய படிக்க அமெரிக்கா அனுப்பாதா, பெண்கள் எப்பவும், அவங்க கால்ல நிக்க வேண்டும், நல்லா படிக்கணும்னு நினைக்கிறவரு எங்க அண்ணன். இதனால், அண்ணியை அமெரிக்கா போறதுக்கு கண்டிப்பா எங்க அண்ணன் சம்மதிக்கும் என்கிறாள். இதையடுத்து, பேசிய ரத்னா, பரணி அமெரிக்கா போவது எல்லாம் சந்தோஷம்தான். ஆனால் அண்ணன் பரணி இல்லாமல் எப்படி இருக்க போகுதுன்னு நினைச்சா தான் வருத்தமா இருக்கு என்கிறாள்.
சண்முகத்திற்காக காத்திருக்கும் பரணி: இதையடுத்து, சௌந்தரபாண்டி, சரி நான் கிளம்புகிறேன் பரணி, நீ அமெரிக்கா போவதற்கு ரெடியாகு. நான் போகுற வழியில் சண்முகத்தை பார்த்து ஒருவார்த்தை சொல்லிவிட்டு போகிறேன் அது தான் மரியாதையாக இருக்கும் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான். இதையடுத்து, அந்த அப்ளிகேஷனை ரத்னா, வீராவும் நிரப்பி விட்டு, பரணியை நல்ல நேரம் போவதற்குள் கையெழுத்து போடு என்று சொல்ல அவள், சண்முகம் வந்து நீ அமெரிக்கா போகலாம் என்று சொல்லாமல் நான் கையெழுத்து போட மாட்டேன் என்கிறாள்.
கணவன் மனைவி உரவில் விரிசல்: அந்த நேரம் பார்த்து சண்முகம் வீட்டுக்கு வர, அனைவரும் விஷயத்தை சொல்ல, அப்போது, பரணி, சண்முகம் நீ பேனாவை எடுத்து கொடுத்தால் தான் நான் கையெழுத்து போடுவேன் என்று சொல்ல, சண்முகம், பேனாவை கொடுக்காமல், நான் எது சொன்னாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும், நீ இந்த வீட்டுக்கும், இந்த ஊருக்கும் ரொம்ப முக்கியம், இந்த ஊருக்கு நீ செய்ய வேண்டியது நிறைய இருக்கு, இதனால் நீ அமெரிக்கா போக வேண்டாம் என்று சொல்ல, வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதையடுத்து, பரணி அழுது கொண்டு இருக்கிறாள். அப்போது, சண்முகம், நான் அமெரிக்கா போக வேண்டாம் என்று சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கு என்று சொல்ல எந்த காரணத்தையும் நான் கேட்க விரும்ப வில்லை என்று சொல்லிவிட்டு இனி மேல் என்னிடம் பேசாதே என்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











