சண்முகம், பரணியை பிரிக்க சௌந்தரபாண்டி போட்ட திட்டம்.. நடக்கப்போவது என்ன? அண்ணா சீரியல்!

சென்னை: பரணி அமெரிக்காவிற்கு சென்று படிப்பதற்கு ஆசையாக இருக்க, அந்த நேரம் பார்த்து சண்முகம் வீட்டுக்கு வர, அனைவரும் விஷயத்தை சொல்ல, அப்போது, பரணி, சண்முகம் நீ பேனாவை எடுத்து கொடுத்தால் தான் நான் கையெழுத்து போடுவேன் என்று சொல்ல, சண்முகம், பேனாவை கொடுக்காமல், நான் எது சொன்னாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும், நீ இந்த வீட்டுக்கும், இந்த ஊருக்கும் ரொம்ப முக்கியம், இந்த ஊருக்கு நீ செய்ய வேண்டியது நிறைய இருக்கு, இதனால் நீ அமெரிக்கா போக வேண்டாம் என்று சொல்ல, வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பரணி அழுது கொண்டு இருக்க, அப்போது, சண்முகம், நான் அமெரிக்கா போக வேண்டாம் என்று சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கு என்று சொல்ல எந்த காரணத்தையும் நான் கேட்க விரும்ப வில்லை, உன் தங்கச்சிங்க மட்டும் ஆசை பட்டதை செய்ய வேண்டும் ஆனால், நான் வெளிநாடு போய் படிக்கக்கூடாதா என்று சொல்லிவிட்டு இனி மேல் என்னிடம் பேசாதே என்கிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்றுபார்க்கலாம்.

Zee tamil Anna

அண்ணா: இன்றைய எபிசோடில்,முத்துப்பாண்டி, பரணியிடம் நீ இந்த குடும்பத்தை விட்டு போய்விட்டால், இந்த குடும்பத்தை உன்னை விட யாரும் பொறுப்பாக பார்த்துக் கொள்ள மாட்டார்கள். அதற்காகத்தான் சண்முகம் போக வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார் என்று சொல்ல, அதற்கு பரணி எனக்கு எல்லா விஷயமும் நல்லா தெரியும். ஆனால், என்னோட வாழ்க்கையில எனக்கு படிப்பு ரொம்ப முக்கியம். அதுக்காக கண்டிப்பா நான் வெளிநாடு போகத்தான் போகிறேன். ரெண்டு வருஷம் தானே அது வரைக்கும் எல்லாரும் பொறுத்துதான் ஆகணும்.யார் என்ன சொன்னாலும் நான் வெளிநாடு போய் படிப்பேன் என்று சொல்கிறாள்

முத்துப்பாண்டி எடுக்கும் சபதம்: மறுபக்கம், பரணி தனது முடிவில் உறுதியாக இருப்பதைப்பார்த்த முத்துப்பாண்டி, பரணி படிக்க போகவேண்டும் என்று சொல்றா, சண்முகம் வேண்டாம் என்கிறான். இது எங்க போய் முடியபோகுதே என்று சொல்ல, அப்போது இசக்கி, அண்ணா ஏதோ ஒரு காரணத்துக்காக தான் இப்படி சொல்லி இருக்கு கண்டிப்பா பரணியை வெளிநாடு அனுப்பி வைக்கும் என்று சொல்ல முத்துப்பாண்டி அவன் அனுப்பவில்லை என்றாலும், நான் அனுப்பி வைப்பேன் என் தங்கச்சி ஆசைப்பட்டது நடக்க வேண்டும், இதுவரைக்கும் அவ எதற்கும் இப்படி ஆசைப்பட்டது இல்லை என்கிறான்.

கவலையில் வைகுண்டம்: இதையெல்லாம் தாண்டி அடுத்த நாள் எந்த ஒரு சலனமும் இல்லாமல் பரணி வழக்கம் போல எல்லாவிதமான வேலைகளையும் செய்து அனைவருக்கும் தேவையானதை செய்து கொடுக்க வைகுண்டம் இதை பார்த்து சந்தோஷப்படுகிறான். சூடாமணிக்கு அடுத்தபடியாக பரணி தான் இந்த குடும்பத்தை நல்லபடியா பார்த்துக்கொள்கிறாள்.. அவ இல்லனா என்ன ஆகிறது என யோசிக்கிறார்.

பரணி சண்முகம் இடையே விரிசல்: அப்போது சண்முகம், பரணியிடம் எலே உனக்கு கிளினிக் கொண்டு போய் விடணுமா என்று கேட்க, இத்தனை நாளா நீதானே கொண்டு போய் விடுவ இன்னைக்கு நீதான் கொண்டு போய் விடனுமா என்று கேட்கிற என்று சொல்கிறாள். சண்முகம், இந்த நேரத்துக்கு ஒரு சண்டை வெடித்து இருக்கணுமே இவ என்ன இப்படி எதுவுமே பேசமால் அமைதியா இருக்கா, பொண்டாட்டி பேசுவதைவிட பேசாமல் இருப்பது தான் ஆபத்து என்று மனதிற்குள் பேசிக்கொண்டு இருக்கிறான். அப்போது சண்முகம், பரணி நான் உன்னிடம் முக்கியமான விஷயத்தை பற்றி பேச வேண்டும் என்று சொல்ல, வெளியில் நோயாளிகள் இருக்கிறார்கள், இப்போது பேச முடியாது என்று அனுப்பி விடுகிறாள்.

சௌந்தரபாண்டி பரணியை அமெரிக்க அனுப்பி வைத்து சண்முகம் குடும்பத்தை பிரிக்க வேண்டும் என திட்டம் போட்டு இருந்ததை அறிந்ததால் சண்முகம் இப்படி போக வேண்டாம் என்று சொன்னான் என்பது தெரியவருகிறது. ஆனால் இதை எப்படி பரணியிடம் சொல்வது என புரியாமல் தவிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.‌

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X