வாழ்க்கையை மாற்றிய பரணி.. மனைவியை கௌரவிக்கும் சண்முகம்.. அண்ணா சீரியல்!
சென்னை: ஸ்ருதி என்ற பெண் பரணிக்கு விருது கொடுப்பதாக சொல்லி வீட்டுக்கு வருகிறாள். ஆனால், இதில் ஏதோ பிரச்சனை இருப்பதை பரணி புரிந்து கொள்கிறாள். அதற்கு ஏற்ற மாதிரி, சண்முகம் வீட்டிற்கு வரும் சௌந்தரபாண்டி என் பொண்ணு விருது வாங்க போறா. அவன படிக்க வச்சது நான் தான் அதனால அந்த விருதை நானே வாங்கிக்கிறேன். நீங்க யாரும் வரக்கூடாது என்று சொல்லிவிட்டு கிளம்பி செல்கிறார்.
இதனை தொடர்ந்து வைகுண்டம் என் மருமகள் விருது வாங்குறா.. இதுக்கு வரக்கூடாதுன்னு சொல்ல அவன் யாரு? நாம எல்லாரும் குடும்பத்தோட சென்னையில் நடக்கிற விருது விழாவுக்கு போறோம் என்று சொல்ல இதை வெளியில் இருந்து ஒட்டு கேட்ட சௌந்தரபாண்டி தன்னுடைய திட்டம் சரியாக நிறைவேறியதாக நினைத்து சிரிக்கிறார். இதையடுத்து நடப்பதை பார்க்கலாம்.

விருது வழக்கும் விழாவில், சௌந்தரபாண்டி வித்தியாசமான கெட்டப்பில் இருப்பதை பார்த்த பரணி, என்ன அப்பா இது என்று கேட்டு ஆச்சரியமடைகிறாள். உடனே, சௌந்தரபாண்டி ஏன் நான் இப்படியெல்லாம் டிரஸ் பண்ண மாட்டேனா என்று பதில் கூறுகிறார். ஸ்ருதி சண்முகத்தை கூட்டிட்டு வரலையா என்று கேட்க இல்ல அவங்களுக்கு எல்லாம் வேலை இருக்கு, அதனால் கூட்டிட்டு வரல என்று சொல்கிறாள். இதனை தொடர்ந்து சௌந்தரபாண்டி ஸ்ருதியை தனியாக அழைத்து சென்று, அவமானப்பட கூடாதுனு தான் இப்படி விட்டுட்டு வந்திருக்கா என்று சொல்கிறார்.

மாறு வேடத்தில் சௌந்தரபாண்டி: அடுத்ததாக பரணி நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைய எல்லாரும் குடும்பத்துடன் வந்திருப்பதை பார்த்து பீல் ஆகிறாள். உடனே ஷண்முகத்திற்கு போன் செய்து நான் உங்களை விட்டு கொடுத்து இருக்க கூடாது. உங்க கூட நின்னு இருக்கனும். நீங்க என் கூட இருக்கனும் என்று வருத்தப்படுகிறாள். ஷண்முகம் இப்போ என்ன? நாங்க உன் கூட இருக்கனும் அவ்வளவு தானே.. வெளியே வா என்று சொல்ல பரணி வெளியே ஓடி வருகிறாள். அவ சந்தோஷத்தை பார்த்த சௌந்தரபாண்டி அந்த வெறும் பையன் தான் வந்திருக்கணும். வெட்டி கட்டிட்டு வருவான், செக்யூரிட்டியை வைத்து அவமானப்படுத்தி துரத்த ஏற்பாடு செய் என்று சொல்கிறார்.

கணவரின் கையால் விருது வாங்கிய பரணி: ஆனால், ஒரு கார் வந்து நிற்க பெரிய பணக்காரன் வந்திருப்பதாக நினைத்து சௌந்தரபாண்டி குனிந்து கையெடுத்து கும்பிட்டு நிற்க செம ஸ்டைலாக வந்து இறங்குகிறான் ஷண்முகம். என்ன சௌந்தரபாண்டி என்று கூப்பிட ஆள் புதுசா இருக்கு குரல் பழசா இருக்கே என்று குழப்பம் கொள்கிறார். ஷண்முகம் கண்ணாடியை கழட்டியதும் அடையாளம் கண்ட சௌந்தரபாண்டி வெறும் பயலே நீயா என்று கடுப்பாகிறார். பிறகு பரணிக்கு விருது கொடுக்க, அப்போது பரணி என் கணவர் கையால் விருதை வாங்க ஆசைப்படுவதாக சொல்லி, பின் சண்முகம் கையால் பரணி விருது கொடுத்து கௌரவிக்க ஷண்முகம் குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











