இரவு முழுக்க அறிவழகனுடன் ரத்னா.. வெங்கடேசனின் சதி.. அண்ணா சீரியல்!
சென்னை: அறிவழகனுடன் ரத்னாவை பார்த்து கடுப்பான வெங்கடேசன் ஆத்திரத்தோடு இருக்க, அப்போது அங்கு வரும் சௌந்தரபாண்டி, ரத்னா உன் கூட சேர்ந்து வாழ வேண்டும் என்றால், அறிவழகனுக்கும் ரத்னாவிற்கும் கள்ளக்காதல் என்று இந்த ஊரை நம்பவை, அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சி இந்த ஊர் தப்பா பேசணும்.. அந்த நேரம் பார்த்து, நீ வந்து, என் மனைவி ரத்னா அப்படிபட்டவள் இல்லை, அவளை பத்தி எனக்கு நல்லா தெரியும் என்று சொல்லி அவளுக்கு வாழ்க்கை கொடுக்கணும். இதுமட்டும் நடந்தா, அந்த ரத்னா காலம் முழுக்க உன் காலடியில் கிடப்பா. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்று ஐடியா கொடுக்கிறான். இதையடுத்து இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.
சௌந்தரபாண்டியன் சொன்னதை யோசித்துக்கொண்டு இருந்த வெங்கடேஷ், தெரிந்த மெடிக்கல் ஷாப் ஒன்றில் வேலை பார்க்கும் நண்பரிடம் மயக்க மருந்துவேண்டும் என்று சொல்ல, அவனும் எடுத்து கொடுக்கிறார். அந்த மயக்க மருந்தை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடத்தில் வேலை செய்பவரிடம் கொடுத்து, ரத்னாவும் அறிவழகனும் டீ குடிக்கும் போது, அந்த டீயில் இந்த மருந்தை கலந்து விடு என்கிறான். ஆனால், அறிவழகனும் ரத்னாவும் பிரின்ஸ்பல் அறையில் இருக்கும் போது தான், நீ மயக்க மருந்து கலந்த டீயை கொடுக்க வேண்டும் என்று சொல்ல, அவனும் சரி சார், இதில் எனக்கு எந்த பிரச்சனையும் வராதே என்று கேட்க, அதெல்லாம் ஒன்னும் வராது என்கிறான்.

நீங்க ஒன்னும் நல்லவர் இல்ல: ரத்னாவின் மானம் போகப்போவதை நினைத்து மகிழ்ச்சியில் வெங்கடேசன், வீட்டுக்கு வர, அப்போது இசக்கி, மாமா உங்களுக்குத்தான் உடம்பு சரியில்லைன்னு சொன்னீங்க, அப்புறம் வீட்டில் இல்லாமல் எங்க போனீங்க, ஆளையே காணோம் என்று கேட்க. வீட்டுக்குள்ளே இருந்து தலைவலியே வந்துவிட்டதால், வெளியில போயி தலைவலி மருந்து வாங்கி தேச்சிட்டு வந்தேன் என்று சொல்கிறார். அதற்கு எதற்கு வெளியில போனீங்க, என் கடையிலேயே தலைவலி மருந்து இருக்கே, உடம்பு முடியலனா வீட்டில் இருக்க வேண்டியதுதானே. எது வேணும்னாலும் நான் வாங்கித் தரப்போறேன் என்று சொல்ல, உங்களுக்கு எதுக்கு சிரமம் என்பதற்காக தான் நானே கடைக்கு போய் தலைவலி மருந்து வாங்கிட்டு வந்தேன் என்று சொல்ல. அப்போது இசக்கி, நீங்க ஒன்னும் அவ்வளவு நல்லவர் இல்லையே வெங்கடேசனை குத்திபேசுகிறாள்.
மயங்கி விழுந்த ரத்னா: இதையடுத்து, பள்ளிக்கூடத்தில் ரத்னாவும் அறிவழகனும் பிரின்ஸ்பல் அறையில் இருக்கும் போது, மயக்க மருந்து கலந்த டீயை அந்த நபர் கொண்டு வந்து கொடுக்க, இருவரும் அது தெரியாமல் டீயை குடித்துவிட்டு அப்படியே மயங்கி விழுகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











