ஜூஸில் சரக்கு கலந்த சௌந்தரபாண்டி.. மேடையில் தூள் கிளப்பிய ஷண்முகம்..அண்ணா சீரியல்!
சென்னை: பரணிக்கு விருது வழக்கும் விழாவில், சௌந்தரபாண்டி வித்தியாசமான கெட்டப்பில் இருப்பதை பார்த்து பரணி, என்ன அப்பா இது என்று கேட்டு ஆச்சரியமடைகிறாள். உடனே, சௌந்தரபாண்டி ஏன் நான் இப்படியெல்லாம் டிரஸ் பண்ண மாட்டேனா என்று பதில் கூறுகிறார். இதையடுத்து, ஸ்ருதி சண்முகத்தை கூட்டிட்டு வரலையா என்று கேட்க இல்ல அவங்களுக்கு வேலை இருக்கு, அதனால் கூட்டிட்டு வரல என்று சொல்கிறாள்.
அடுத்ததாக பரணி நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைய எல்லாரும் குடும்பத்துடன் வந்திருப்பதை பார்த்து பீல் ஆகிறாள். உடனே ஷண்முகத்திற்கு போன் செய்து நான் உங்களை விட்டு கொடுத்து இருக்க கூடாது. உங்க கூட நின்னு இருக்கனும். நீங்க என் கூட இருக்கனும் என்று வருத்தப்படுகிறாள். ஷண்முகம் இப்போ என்ன? நாங்க உன் கூட இருக்கனும் அவ்வளவு தானே.. வெளியே வா என்று சொல்ல பரணி வெளியே ஓடி வருகிறாள். அவ சந்தோஷத்தை பார்த்த சௌந்தரபாண்டி அந்த வெறும் பையன் தான் வந்திருக்கணும். வேட்டி கட்டிட்டு வருவான், செக்யூரிட்டியை வைத்து அவமானப்படுத்தி துரத்த ஏற்பாடு செய்ய நினைக்கிறான். ஆனால், சண்முகம், காரில் வந்து ஜம்முனு இறங்கியதைப்பார்த்து அதிர்ச்சி அடைகிறான்

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில் விருது வாங்கிய பரணி, என்னுடைய இந்த வெற்றிக்கு காரணம் என் கணவர் ஷண்முகம் தான் என்று சொல்கிறாள் என்னுடைய கணவர் ஷண்முகம் தான் எனக்காக ஹாஸ்பிடல் கட்டி கொடுத்தார், ஹாஸ்பிடல் கட்டுவதற்காக வீட்டை அடகு வைத்தார். எனவே அவர் கையால், இந்த விருது வாங்க ஆசைப்படுவதாக சொல்லி மேடைக்கு வர வைக்கிறாள். இதனையடுத்து ஷண்முகம் கோட் சூட்டில் மேடைக்கு வர, பரணி எனக்கு எப்பவும் வேட்டி சட்டையில் இருக்க சண்முகத்தை தான் பிடிக்கும், அது தான் அவருடைய அடையாளம் என்று சொல்ல எல்லாரும் கை தட்ட ஷண்முகம் வேட்டி சட்டையை அணிந்து கொண்டு மேடை ஏறுகிறான். எல்லாரும் அவனிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க சௌந்தரபாண்டி அவனுக்கு ஆங்கிலம் தெரியாது என அவமானப்படுத்த ஷண்முகம் ஆங்கிலத்தில் பேச முயற்சி செய்து ஆரம்பத்தில் தடுமாறினாலும் அசால்டாக பேசி முடித்து பாராட்டுகளை அள்ளுகிறான்.

ஸ்ருதி போட்ட பிளான்: இதனால் பல்பு வாங்கும் சௌந்தரபாண்டி மற்றும் சுருதி,எப்படியாவது அனைவரின் முன்னும் சண்முகத்தின் குடும்பத்தை அவமானப்படுத்த வேண்டும் என நினைத்து ஜூஸில் சரக்கை கலந்து வைகுண்டத்திற்கு கொடுக்க, அவர் அட்ராசிட்டி செய்ய தொடங்குகிறார். ஷண்முகத்திற்கும் சரக்கை கலந்து ஜூஸ் கொடுக்க இதை கண்டு பிடித்து விடும் ஷண்முகம் அதை ஸ்ருதியின் கணவருக்கு கொடுத்து குடிக்க வைக்கிறான். பிறகு விருது வாங்கும் ஸ்ருதி கஷ்டப்பட்டு ஹாஸ்பிடல் கட்டி மக்களுக்கு சேவை செய்வதாக சொல்ல அவளது கணவர் போதையில் நீ அதுக்காகவா ஹாஸ்பிடல் திறந்த, இவ சொல்லுறது எல்லாமே பொய், காசு வாங்காம யாருக்கும் வைத்தியமே பாக்க மாட்டா என உண்மையை உடைக்க ஸ்ருதி அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.



Click it and Unblock the Notifications











