ரத்னாவிடம் எல்லை மீறும் வெங்கடேஷ்.. அடித்து வெளுத்த முத்துப்பாண்டி.. அண்ணா சீரியல்!

சென்னை: சண்முகத்தின் குடும்பத்தை அவமானப்படுத்த வேண்டும் என நினைத்து ஜூஸில் சரக்கை கலந்து வைகுண்டத்திற்கு கொடுக்க, அவர் அட்ராசிட்டி செய்ய தொடங்குகிறார். ஷண்முகத்திற்கும் ஜூஸ் கொடுக்க இதை கண்டு பிடித்து விடும் ஷண்முகம் அதை ஸ்ருதியின் கணவருக்கு கொடுத்து குடிக்க வைக்கிறார். பிறகு விருது வாங்கும் ஸ்ருதி கஷ்டப்பட்டு ஹாஸ்பிடல் கட்டி மக்களுக்கு சேவை செய்வதாக சொல்ல அவளது கணவர் போதையில் நீ அதுக்காகவா ஹாஸ்பிடல் திறந்த, இவ சொல்லுறது எல்லாமே பொய், காசு வாங்காம யாருக்கும் வைத்தியமே பாக்க மாட்டா என உண்மையை உடைக்க ஸ்ருதி அதிர்ச்சி அடைகிறாள். அதன்பின்னர், சௌந்தரபாண்டி பரணியை வெளிநாட்டுக்கு அனுப்பி ஷண்முகத்திற்கு வேட்டு வைக்க திட்டம் போடுகிறார்.

இதையடுத்து, இன்றைய எபிசோடில், ரத்னா ஸ்கூலில் இருந்து நடந்து வர வெங்கடேஷ் பைக்கில் உட்கார சொல்ல, ரத்னா, இதோபாருங்க வெங்கடேஷ் எனக்கு உங்களை சுத்தமா பிடிக்கல, பரணிக்கும் அண்ணனுக்கும் சண்டை வரக்கூடாதுனு நினைத்துதான், ஸ்கூல்ல உங்களுக்கு வேலை போட்டு கொடுத்தேன். உங்களை எனக்கு பிடிக்கல, இனிமேல் இப்படி செய்யாதீர்கள் என்று மறுக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது. இந்த சண்டையை சௌந்தரபாண்டி பார்த்து பிரித்து விட்டு வெங்கடேஷை தனியாக கூப்பிட்டு பொண்டாட்டியை கண்ட்ரோலில் வச்சுக்கணும். அதுக்கு முதலிரவு நடக்கணும் என்று சொல்கிறான்.

zee tamil anna

பைக்கில் வந்த ரத்னா: இதையடுத்து ரத்னா நடந்து வந்து கொண்டிருக்கும்போது ரத்னாவின் செருப்பு அறுந்து விட, அவள் நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டு இருக்கிறார். இதை பார்த்த, அறிவழகன் வண்டியை நிறுத்திவிட்டு என்ன மேடம் என்ன ஆச்சு ஏன கேட்க, ரத்னா செருப்பு அறுந்து விட்டது என்று சொல்ல சரி வாங்க நான் உங்களை வீட்டில் டிராப் பண்ணுகிறேன் என்கிறார். அதற்கு ரத்னா, உன் உதவியை நான் கேட்கவே இல்லை, உன் வேலையை பார்த்துக்கொண்டு போ என்றுசொல்ல, உடனே அறிவழகன் ஆட்டோவில் போனாலும் கண்டிப்பா காசு கொடுத்து தான் போவீங்க, அதேபோல என்னை நெனச்சு என் வண்டியில ஏறுங்க எனக்கு காசு கொடுத்திடுங்க என்று சொல்ல ரத்னா அறிவழகன் வண்டியில் ஏறுகிறாள்.

ரத்னாவிடம் அத்துமீறிய வெங்கடேஷ்: வீட்டில் வந்த வெங்கடேஷ், ரத்னா திட்டியதையே நினைத்துக்கொண்டு இருக்க, அந்த நேரம் பார்த்து அறிவழகனும் ரத்னாவும் ஒன்றாக பைக்கில் இறங்குவதை பார்த்து ஆத்திரம் அடைகிறான். இப்படியே விட்டால், ரத்னா நமக்கு கிடைக்க மாட்டாள் என்று முடிவு செய்த வெங்கடேஷ், சௌந்தரபாண்டியன் சொன்னது போல முதல் இரவை நடத்திட வேண்டும் என்று ரத்னா, குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு இருக்கும் போது, அவளிடம் அத்துமீறி நடந்து கொள்கிறான். அந்த இடத்திற்கு வரும் முத்துபாண்டி மனைவியாக இருந்தாலும் அவளின் அனுமதியில்லாமல் தொடக்கூடாது என்று வெங்கடேஷசை அடிக்கிறான். இதையடுத்து இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X