தாலிகட்டியது நான் குடும்பம் நடத்த அவனா.. கலங்கி நின்ற ரத்னா.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: ரத்னா ஸ்கூலுக்கு போக ஆட்டோ வராததால், முத்துப்பாண்டி அவளை ஸ்கூலில் ட்ராப் செய்கிறான். அப்போது, ரத்னா தலையில் இருந்து விழுந்த ரோசை எடுத்து முத்துப்பாண்டி கொடுப்பதை வெங்கடேஷ் பார்த்துவிட்டு ஆத்திரப்படுகிறார். ஸ்கூலுக்கு வரும் வெங்கடேஷ், ரத்னாவிடம் என்னடி அந்த முத்துப்பாண்டி கூட வண்டியில் வர அவன், ரோசை கொடுக்க நீ வாங்கிக்கிற, ஒழுக்கம் கெட்டவளே, நீ யார் எப்படிபட்டவள் என்று இந்த ஸ்கூலுக்கே தெரியட்டும், அதனால் தான், நான் இங்கே வந்து நியாயம் கேட்கிறேன் என்று தப்பாக பேசுகிறான்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் சண்டை முற்றிப்போக வெங்கடேஷ், ரத்னாவை அடிக்க வருகிறான். அப்போது, புது வாத்தியார் அறிவழகன் தடுத்து, வெங்கடேஷை பளார் என்று அடித்து பள்ளிக்கூடத்தை விட்டு வெளியில் அனுப்புகிறான். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், பள்ளிக்கூடத்தில் அடி வாங்குன வெங்கடேஷ், அதே கோபத்தோட சண்முகம் வீட்டிற்குவந்து, கத்த, அனைவரும் வெளியே வருகின்றனர். அப்போது, தங்கச்சியை எப்படி வளர்த்து வச்சிருக்க, கட்டுன புருஷன் உயிரோட இருக்கும் போது, அடுத்தவன் கூட ஊரு சுத்துறா என்று சொல்ல, கோபப்பட்ட சண்முகம், வார்த்தையை நிதானமா பேசு, என்ன செய்வேனு எனக்கு தெரியாது என்று சொல்கிறான்.
அப்போது வெங்கடேஷ், முத்துப்பாண்டி ரத்னாவிற்கு ரோஸ் கொடுக்கிறான் அதை உன் தங்கச்சி வாங்கி தலையில வெச்சுகிட்டு மினிகிட்டு போறா, தாலிகட்டுவது ஒருத்தன் குடும்பம் நடத்துவது இன்னொருத்தனா என்று சொன்னதும், சண்முகம் , வெங்கடேஷ் கன்னத்தில் பளார் என்று அறை விடுகிறாள். இதுக்கு மேல இந்த இடத்தில் நின்று என் தங்கச்சி பத்தி தப்பா பேசினா அவ்வளவுதான் என்கிறான்.
ஓங்கி அடித்த சண்முகம்: சண்முகத்தை தடுக்கும் பரணி, வெங்கடேஷ் நீங்க தப்பாபுரிஞ்சிக்கிட்டீங்க, ஆட்டோ இன்னைக்கு வரல, ரத்னா ஸ்கூலுக்கு சீக்கிரமா போகவேண்டும் என்பதற்காகத்தான் முத்துப்பாண்டி கூட அனுப்பி வெச்சோம் இது எல்லாருக்குமே தெரியும் என்று சொல்கிறான். அப்போதும் சமாதானம் ஆகதா வெங்கடேஷ், வீட்டுல முத்துப்பாண்டி, ஸ்கூல்ல எவனோ புதுசா வந்த வாத்தியார் என்று மீண்டும் தப்பாக பேச, கோவத்தின் உச்சத்திற்கு சென்ற சண்மும், மேல இங்க நின்னேனா அவ்வளவுதான் அடிச்சி கொன்னுடுவேன் என்று சொல்ல வெங்கடேஷ் அங்கிருந்து கிளம்பி செல்கிறான்.
முத்துப்பாண்டிக்கு ரத்னா மீது காதல்: இந்த நேரம் பார்த்து சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மா ரெண்டு பேரும் டீக்கடையில டீ குடித்துக்கொண்டு இருக்க, அந்த வழியா வந்த வெங்கடேஷ் சோகமா நடந்து வருவதை பார்த்து, என்ன ஆச்சி என்று விசாரிக்கிறான். அப்போது, வெங்கடேஷ் நடந்த விஷயத்தை சொல்ல. உடனே சௌந்தரபாண்டி, அந்த சண்முகம் ஒரு முரட்டு பையன், என்கிட்ட இருந்து என் குடும்பத்தையே பிரிச்சுட்டான். என் மகன் முத்துப்பாண்டிக்கு, இன்னும் ரத்னா மேல காதல் இருக்கு. அதனால் தான், சண்முகம் வீட்ல வந்து வாழ்றதுக்கு அவன் சம்மதிச்சான் என்று வெங்கடேசை ஏத்திவிடுகிறான். இதைக்கேட்ட வெங்கடேஷ் எனக்கு ரத்னா வேணும், ரத்னாக்காக நான் எது வேணாலும் செய்வேன் என்று சொல்ல, சௌந்தரப்பாண்டின ஒரு திட்டம் போடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











