முத்துப்பாண்டியை காதலிக்கும் வேதா.. மருமகளாக்க திட்டமிடும் சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல்!
சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், ஸ்கூல் லைசன்ஸ் கேன்சலான அதிர்ச்சியில் ரத்னா மயங்கி கீழே அவளை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்து அட்மிட் செய்கின்றனர். ஹாஸ்பிடல் ரத்னாவை பரிசோதனை செய்த டாக்டர் அவளுக்கு அபார்ஷனாகி விட்டதாக சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும் இந்த விஷயம் பாக்கியம் மற்றும் இசக்கிக்கு தெரியவில்லை அதிர்ச்சி அடைந்து ஹாஸ்பிடலுக்கு ஓடி வருகின்றனர். சௌந்தரபாண்டி மற்றும் வேதவள்ளி ஆகியோர் நடக்கிறது எல்லாம் நமக்கு சாதகமா நடக்குது என சந்தோஷப்படுகின்றனர். இதையடுத்து என்ன நடந்தது என்றுபார்க்கலாம்.
சண்முகம் ரத்னாவுக்கு ஆறுதல் சொல்லி என்ன நடந்துச்சு? யார் மேலயாவது சந்தேகம் இருக்கா என்று விசாரிக்க ஒரு பையன் ஸ்கூலில் கஞ்சா அடிச்சானு அவங்க அப்பாவை கூப்பிட்டு கண்டிச்சேன். அவங்க அப்பா பையனை திட்டாமல் என்கிட்ட சண்டை போட்டார், அவர் மேல தான் சந்தேகமா இருக்கு என்று சொல்கிறாள்.

அண்ணா சீரியல்: மறுபக்கம், வீட்டில் சௌந்தரபாண்டி, அக்கா பாண்டியம்மா, உனைத்தான் முத்துப்பாண்டிக்கு கல்யாணம் செய்துவைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுச்சு, ஆனால், நீ யாரையோ காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒத்துப்போகவில்லை என்று வெட்டியும் விட்டுட்டு இப்போ வாழ வெட்டியா இருக்க, இதுக்கு மேலயும் உனக்கு ஒரு வாய்ப்பு இருக்க, என் மகன் நீ முத்துப்பாண்டியை காதலில் விழவை என்கிறார்.
சௌந்தரபாண்டியின் பிளான்: இதைக்கேட்ட வேதா, நடக்குற விஷயத்தை சொல்லுங்க மாமா என்று சொல்ல, ஏன் ஆம்பளைங்கதான் விவாகரத்து ஆனதும் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க வேண்டுமா பெண்கள் பண்ணிக்க கூடாதா என்று சொல்ல, அப்போது வேதா, முத்துப்பாண்டி இசக்கியை தலையில் தூக்கி வெச்சி இருக்கான், இதெல்லாம் நடக்காது என்கிறாள். அப்போது, அது எல்லாம் நடக்கும், நீ முத்துப்பாண்டி மனசுல இடம் பிடிச்சிட்டா, நீ இந்த வீட்டு மருமகளாகி விடலாம் என்று சொல்ல வேதா அதற்கான வேலைகளை கவனிக்க செய்வதாக சொல்கிறாள். சனியனும் ஜெயிலில் இருந்து வெளியே வருகிறாள். அதை தொடர்ந்து கல்வித்துறை அலுவலகத்தில் ரத்னாவை அழைத்து ஸ்கூலில் நடந்தது என்ன என்பதை குறித்து விசாரிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











