சௌந்தரபாண்டி போடும் நாடகம்.. முத்துப்பாண்டி எடுக்கும் முடிவு.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மா ரெண்டு பேரும் டீக்கடையில டீ குடித்துக்கொண்டு இருக்கும்போது, வெங்கடேஷ் சோகமாக நடந்து வருவதை பார்த்து, என்ன ஆச்சு என்று விசாரிக்கிறான். அப்போது, வெங்கடேஷ் நடந்த விஷயத்தை சொல்ல. உடனே சௌந்தரபாண்டி, அந்த சண்முகம் ஒரு முரட்டு பையன், என்கிட்ட இருந்து என் குடும்பத்தையே பிரிச்சிட்டான்.
என் மகன் முத்துப்பாண்டிக்கு, இன்னும் ரத்னா மேல காதல் இருக்கு. அதனால் தான், சண்முகம் வீட்ல வந்து வாழ்றதுக்கு அவன் சம்மதிச்சான் என்று வெங்கடேசை ஏத்திவிடுகிறான். இதைக்கேட்ட வெங்கடேஷ் எனக்கு ரத்னா வேணும், ரத்னாவுக்காக நான் எது வேணாலும் செய்வேன் என்று சொல்கிறான். இதையடுத்து, இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், சண்முகம் குடும்பத்தோடு கோவிலில் சாமி கும்பிட வர அப்போது, அறிவழகனும் கோவிலுக்கு வருகிறான். அப்போது, அறிவழகன் ரத்னாவை பார்த்து முட்ட கண்ணு, முருங்கைகாய் என்று கலாய்க்க அதை பார்த்து இசக்கி, கனி நீ யாரு,எங்க அக்காவ பாத்து கலாய்க்கிறீங்க என கோபப்படுகின்றனர். உங்க அக்காக்கு மட்டும் இல்ல உனக்கும் ஒரு பட்டப்பெயர் இருக்கு, கனிக்கு ஒரு பட்டப்பெயர் இருக்கு என்று சொல்லி கலாய்க்கிறான். நாங்க யாரு தெரியமா எங்க கிட்ட விளையாடுறியா என்று சொல்லிவிட்டு, இசக்கி சண்முகத்திடம் விஷயத்தை சொல்லி அழைத்து வருகிறாள். சண்முகம், அறிவழகனை பார்த்ததும் இருவருக்கும் கட்டிப்பிடித்துக்கொண்டு நலம் விசாரிக்கின்றனர்.
லவ் லெட்டர் கொடுத்த கதை: அப்போது இசக்கி, யார் இவர் என்று கேட்க, அறிவழகன் , ரத்னாவிற்கு லவ் லெட்டர் எழுதிக் கொடுத்த கதையை சொல்லி சிரிக்கிறான். இப்போது, கனி அந்த லெட்டர்ல அப்படி என்ன எழுதினீங்க என்று கேட்க, அறிவழகன் காமெடியான கவிதை ஒன்றை சொல்ல அதைக் கேட்டு அனைவரும் சிரிக்கின்றனர். ஆனால், ரத்னா மட்டும் கோபப்படுகிறாள். அப்போது, சண்முகம், இந்த ஊருக்கு எப்போ வந்த, எங்கே தங்கி இருக்க, எங்கே சாப்பிடுறா என்று கேட்க, அறிவழகன் ஓட்டலில் தான் தினமும் சாப்பிடுவதாக சொல்கிறான். உடனே,சண்முகம் நம்ப வீடு இருக்கும் போது எதற்கு ஓட்டலில் சாப்பிட வேண்டும், இனிமேல் நீ நம்ம வீட்டிலேயே சாப்பிடு என்று சொல்ல, இதை கேட்டு ரத்னா கோவப்படுகிறாள்.
எல்லாம் நாடகம்: மறுபக்கம் சௌந்தரபாண்டி, பாண்டியம்மா இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது, சௌந்தரப்பாண்டி, அக்கா, நான் இசக்கியை கொல்ல பார்த்த விஷயம் தெரிஞ்சும் முத்துப்பாண்டி இன்னும் அமைதியா இருக்கிறான். அதான் எனக்கு ஒண்ணுமே புரியல என்று சொல்கிறான். அப்போது பாண்டியம்மாள், இல்லடா தம்பி, சண்முகம் பாக்கியத்தை குத்தினதும், முத்துப்பாண்டிக்கு பாக்கியம் மேல பாசம் வந்துச்சு. அதேபோல உன்னோட ரத்தத்தை பார்த்ததும் உன்மேலயும் பாசம் வந்து இருக்குடா. இந்த பாசத்தை வச்சே நம்ம அவனை நம்ம வழிக்கு கொண்டு வரவேண்டும் என்று சொல்கிறான். அந்த நேரம் பார்த்து முத்துப்பாண்டி வீட்டுக்குள் வர, சௌந்தரபாண்டி உடம்பு முடியாதது போல, பெட்டில் படுத்து நாடகம் ஆடுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











