ரத்னாவை அழிக்க நினைக்கும் வெங்கடேஷ்.. நாடகத்தை உண்மை என நம்பும் பரணி.. அண்ணா சீரியல்!

சென்னை: முத்துப்பாண்டி பாக்யத்தை பார்க்க வீட்டுக்கு வருகிறான். அப்போது, சௌந்தரப்பாண்டி, அக்கா, நான் இசக்கிய கொல்ல பார்த்த விஷயம் தெரிஞ்சும் முத்துப்பாண்டி இன்னும் அமைதியா இருக்கிறான். அதான் எனக்கு ஒண்ணுமே புரியல என்று சொல்கிறான். அப்போது பாண்டியம்மாள், இல்லடா தம்பி, சண்முகம் பாக்கியத்தை குத்தினதும், முத்துப்பாண்டிக்கு பாக்கியம் மேல பாசம் வந்துச்சு.

அதேபோல உன்னோட ரத்தத்தை பார்த்ததும் உன்மேலயும் பாசம் வந்து இருக்குடா. இந்த பாசத்தை வச்சே நம்ம அவனை நம்ம வழிக்கு கொண்டு வரவேண்டும் என்று சொல்கிறான். அந்த நேரம் பார்த்து முத்துப்பாண்டி வர, சௌந்தரபாண்டி உடம்பு முடியாதது போல, பெட்டில் படுத்து நாடகம் ஆடுகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil anna

அண்ணா சீரியல்: தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் வெங்கடேஷ் சோகத்துடன் அமர்ந்திருப்பதை பார்த்து, இவனை இப்படியே விட்டால், இவன் வாழ்க்கை நாசம் ஆகிவிடும் என்று அவனது பெற்றோர் அவனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கின்றனர். இதைத்தொடர்ந்து, பெண்வீட்டார், வெங்கடேசனை மாப்பிள்ளை பார்ப்பதற்காக வீட்டில் வந்து அமர்ந்திருக்கின்றனர். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ், நான் வாழ்ந்தால் ரத்னாவுடன் தான் வாழ்வேன் எனக்கு இரண்டாவது திருமணம் எல்லாம் தேவை இல்லை.

நீங்க தான் காரணம்: ஏதேதோ காரணம் சொல்லி, எனக்கும் ரத்னாவுக்கும் இடையே சண்டையை வரவைத்து கடைசியில் அவளை என்னிடம் இருந்து பிரித்துவிட்டீர்கள். இப்போது, நிரந்தரமாக நானும் ரத்னாவும் பிரிய வேண்டும் என்பதற்காக இரண்டாவது திருமணத்தை செய்ய பாக்கறீங்களா? என்று கோபத்தோடு இருந்த வெங்கடேஷ், அப்பா அம்மாவை அடி அடி என்று அடிக்கிறான். பலர் வெங்கடேசனை தடுக்கப் பார்த்தும் அவனை கட்டுப்படுத்த முடியாததால், உறவினர் ஒருவர் முத்துப்பாண்டிக்கு போன் போட்டு வெங்கடேஷ், அவருடைய அப்பா அம்மாவை அடிக்கிறான் ஏதாவது விபரீதம் ஆகி விடுமோ என்று பயமாக இருக்கிறது தயவு செய்து வாருங்கள் என்று அழைக்க முத்துப்பாண்டி பரணியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறான்.

பரணியின் காலில் விழுந்த வெங்கடேஷ்: அப்போது வெங்கடேஷ், நான் செய்தது எல்லாம் தப்புத்தான், ஆனால், எல்லாம் என்னை அறியாமல் நடந்துவிட்டது. இனி மேல் அப்படி நடக்காது. நான் ரத்னாவுடன் வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன் தயவு செய்து என்னையும் ரத்னாவையும் சேர்த்து வையுங்கள் பரணியின் காலில் விழுகிறான். அப்போது பரணி நான் உங்களை சேர்த்து வைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X