வீட்டிற்குள் நுழையும் வெங்கடேஷ்.. பரணிக்கு வந்த வார்னிங்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: வெங்கடேஷ், ரத்னாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக சொல்ல, சண்முகம் வீட்டிற்கு வரும் முத்துப்பாண்டி, வெங்கடேஷ் நல்லவன் தான்.. அவங்க அப்பா அம்மா தான் சரியில்லை.. வெங்கடேஷ் ரத்னாவுடன் திருந்தி வாழ ஆசைப்படுறான், ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று சொல்ல ஷண்முகம் வெங்கடேஷை நம்ப மறுக்கிறான். பிறகு முத்துபாண்டி மற்றும் பரணி வெங்கடேஷை சந்தித்து பேச அவன் பரணி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான். ரத்னாவை நான் ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணேன், ஆனால் இப்போ அவளோட வாழ முடியல. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க என்று கெஞ்சுகிறான். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

இன்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்த பரணி, முத்துப்பாண்டி ஆகியோர் மீண்டும் ஷண்முகத்திடம் வெங்கடேஷ் குறித்து பேசுகின்றனர், அவனுக்கு ஒரு வாய்ப்பு தரலாம் என்று சொல்ல ஷண்முகம், எனக்கு அவன் மேல நம்பிக்கை இல்லை என்று சொல்லி மறுக்கிறான். உடனே பரணி,ரத்னாவை அவங்க வீட்டிற்கு அனுப்ப வேண்டாம்.. வெங்கடேஷ் இங்கே வந்து ரத்னாவோட சேர்ந்து வாழட்டும், உன்னுடைய ஸ்டைல் அது தானே என்று சொல்ல ஷண்முகம் சம்மதம் சொல்கிறான். அதே நேரத்தில் நீ செய்தது தப்புனு ஒரு நாள் உனக்கு புரியும் என பரணியிடம் சொல்கிறாள்.

zee tamil anna

இன்றைய எபிசோட்: ஷண்முகம் வெங்கடேஷை நம்பாமல் இருக்க பரணி, ரத்னா வாழ்க்கை நல்லபடியாக இருக்கனும் என்பதற்காக இப்படியொரு முடிவை எடுக்கிறாள். அடுத்து போகி பண்டிகை நெருங்க முத்துப்பாண்டி ஆகியோர் வீட்டை சுத்தம் செய்யும் வேலையில் இறங்குகின்றனர். முத்துப்பாண்டி முகத்தை எல்லாம் கட்டி கொண்டு வேலை செய்ய அங்கு வந்த முப்பிடாதி இன்ஸ்பெக்டரை பார்க்கணும் வர சொல்லுங்க என்று கேட்க முத்துப்பாண்டி வந்து நிற்க அடையாளம் தெரியாத காரணத்தால் முப்பிடாதி இன்ஸ்பெக்டர் ஐயா கிட்ட தான் பேசணும், அவரை வர சொல்லுங்க என்று சொல்ல முத்துப்பாண்டி வேஷத்தை கலைக்கிறான்.

இதை பார்த்த முப்பிடாதி ஐயா நீங்களா? உங்களை எப்படி பார்த்து இருக்கோம். நீங்க இப்படி இருக்கீங்க என்று ஷாக் ஆகிறான், பிறகு ஷண்முகம் குடும்பத்தினர் எல்லாரும் ஒன்று சேர்ந்து தாளம் தட்டி ஆட்டம் போட்டு போகியை கொண்டாடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X