சண்முகம் குடும்பமே எரியணும்..வன்மத்துடன் வீட்டிற்குள் நுழைந்த வெங்கடேஷ்.. அண்ணா சீரியல்!

சென்னை: பரணி, ஷண்முகத்திடம் வெங்கடேசுனுக்கு ஒரு வாய்ப்பு தரலாம் என்று சொல்ல ஷண்முகம், எனக்கு அவன் மேல நம்பிக்கை இல்லை என்று சொல்லி மறுக்கிறான். உடனே பரணி, ரத்னாவை அவங்க வீட்டிற்கு அனுப்ப வேண்டாம். வெங்கடேஷ் இங்கே வந்து ரத்னாவோட சேர்ந்து வாழட்டும், உன்னுடைய ஸ்டைல் அது தானே என்று சொல்ல ஷண்முகம் சம்மதம் சொல்கிறான். அதே நேரத்தில் நீ செய்தது தப்புனு ஒரு நாள் உனக்கு புரியும் என பரணியிடம் சொல்கிறாள்.

ஷண்முகம் வெங்கடேஷை நம்பாமல் இருக்க பரணி, ரத்னா வாழ்க்கை நல்லபடியாக இருக்கனும் என்பதற்காக இப்படியொரு முடிவை எடுக்கிறாள். அடுத்து போகி பண்டிகை நெருங்க முத்துப்பாண்டி ஆகியோர் வீட்டை சுத்தம் செய்யும் வேளையில் இறங்குகின்றனர். இதையடுத்து, இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், போகி கொண்டாடும் போது ஒருத்தருக்கு ஒருத்தர் கலர் பவுடர் பூசி கொண்டு சந்தோசமாக இருக்க பரணி ஷண்முகம் முகத்தில் கலர் பவுடர் பூசும் போது கண்ணில் பட்டு விட்டதாக சொல்லி நாடகமாடுகிறாள். பரணி என்னாச்சு நான் பார்க்குறேன் என்று கண்ணில் ஊத ஷண்முகம் தனியாக கூட்டிட்டு போங்க என்று சொல்கிறான். தனியாக அழைத்து சென்றதும் ஷண்முகம் கண்ணில் எதுவும் படல.. தனியா வரதுக்கு தான் இப்படி சொன்னேன் என்று சொல்கிறான். பரணி எனக்கும் அது தெரிந்து தான் வந்ததாக சொல்ல இருவருக்கும் இடையே ரொமான்ஸ் உருவாகிறது.

வன்மத்தில் வெங்கடேஷ்: அடுத்ததாக பரணி வெங்கடேஷூக்கு போன் செய்து ஷண்முகத்திடம் பேசிட்டேன்.. நாளைக்கு நீ வீட்டிற்கு வா என்று சொல்ல இங்கே வெங்கடேஷ் ரத்னாவின் பழைய துணிகள், சண்முகத்தின் குடும்ப போட்டோவை எரித்து தீயில் போட்டு கொளுத்திக்கொண்டு கொண்டிருக்கிறான். அப்போது, வெங்கடேஷனின் அம்மா, என்னடா, ரத்னா கூட சேர்ந்து வாழவேண்டும் என்று சொல்லிவிட்டு, இன்னைக்கு அவளோட போட்டோவை போட்டு எரிச்சிக்கிட்டு இருக்க என்று கேட்க, நான் ரத்னா கூட சேர்ந்து வாழ ஆசைப்படவில்லை. அவள் நிம்மதியாவே வாழக்கூடாது, இன்னைக்கு இந்த போட்டோ எரியுற மாதிரி ஒரு நாள் அந்த குடும்பமே எரியும் என வன்மத்தை காட்டுகிறான்.

அடுத்து நடக்கப்போவது என்ன: அடுத்த நாள் காலையில் ஷண்முகம் வீட்டில் பொங்கல் வைத்து கொண்டிருக்க வெங்கடேஷ் வந்து நிற்க பரணியை தவிர்த்து யாருக்கும் விருப்பம் இல்லாமல் அவன் வீட்டிற்குள் நுழைகிறான். வைகுண்டமும் எல்லாருக்கும் விபூதி வைத்து விடுகிறார். ஆனால் வெங்கடேஷுக்கு விபூதி வைக்க மட்டும் தயக்கம் காட்டுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X