சண்முகம் போட்ட பிளான்.. ஒரே கல்லில் ரெண்டு மாங்கா.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: சண்முகம் தங்கச்சியின் புருஷனுக்கு இன்னொரு கல்யாணம் என்ற பதைபதைப்பு எதுவும் இல்லாமல் தாய் மாமன் சீர் கொண்டு வருகிறான். இதை பார்த்து சௌந்தரபாண்டி, என்ன சண்முகம் கல்யாணத்திற்கு இவ்வளவு தைரியமா வந்து இருக்க, அதுவும் தங்கச்சியையும் கூட்டிக்கிட்டு வந்து இருக்க, பாத்து சண்முகம் கல்யாணம் முடிஞ்சதும் உன் தங்கச்சி தூக்கில் தொங்கிட போறா என்று கிண்டல் அடிக்கிறான்.

மறுபக்கம் இசக்கி தனது வாழ்க்கை என்னவாகும்? முத்துப்பாண்டி இரண்டாவது திருமணம் செய்து கொள்வானா? என்ற உச்சகட்ட பதற்றத்தில் தவிக்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil anna

அண்ணா: மணமேடையில் இருந்த முத்துப்பாண்டி, இசக்கியை பார்த்ததும் அப்படியே எழுந்து வந்து இசக்கி நீ தான் என்னுடைய பொண்டாட்டி, நான் தப்பு பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிரு, நீ தான் எனக்கு வேணும், உன் விருப்பப்படி நான் உன் வீட்டிலேயே வந்து வாழ்றேன். உன்னை நான் என்னைக்குமே விட்டு தர மாட்டேன். இந்த ஜென்மத்துல நீதான் என்னுடைய பொண்டாட்டி, வா இசச்கி நம்ம வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல, சௌந்தரப்பாண்டி, பதறிப்போய் , டேய் முத்துப்பாண்டி என்னடா பண்ற என்று கேட்கிறார்.

திருந்துங்க மாமா:அப்போது சண்முகம் குறுக்கிட்டு, மாமா பாத்தீங்களா ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிச்சுட்டேன். நீங்க என்ன பண்ணாலும் அதுக்கு நான் ரிப்பீட் கொடுப்பேன். அதனாலத்தான் சீருடைல நான் வந்து அமைதியாக உக்காந்துட்டு இருந்தேன். பாத்தீங்களா என் மாப்பிள்ளை என்ன பண்ணாருன்னு. இனிமேலாவது திருந்துங்க, அடுத்தவங்க குடும்பத்தை கெடுக்கணும்னு நினைக்காதீங்க என்று சொல்லிவிட்டு அனைவரும் வீட்டுக்கு கிளம்புகிறார்கள்.

சத்தியம் கேட்கும் முத்துப்பாண்டி: வீட்டுக்கு வரும் முத்துப்பாண்டி, இசக்கியிடம் நீ எனக்கு ஒரு சத்தியம் செஞ்சு தரணும் உனக்காக யாருமே செய்யாததை நான் செஞ்சிருக்கேன். இந்த வீட்ல உனக்காக நான், வாழ வந்து இருக்கேன். இந்த வீட்ல எனக்கு எந்தவிதமான அவமானமும் நடக்கக்கூடாது அப்படி நடந்ததுன்னா அடுத்த நிமிஷம் நீ என் கூட என் வீட்டுக்கு வந்துடனும் என்று சத்தியம் செய்து தரும்படி கேட்கிறாள். உடனே இசக்கி உங்கள நான் எந்த இடத்திலும் எப்போதும் விட்டு தர மாட்டேன் மாமா. இந்த வீட்ல உங்களுக்கு எந்த விதமான அவமானமும் நடக்காது, அப்படி நடந்ததுனா நீங்க அடுத்த நிமிஷம் நான் உங்களோட வந்துருவேன் என்று சத்தியம் செய்து கொடுக்கிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X