ரத்னாவை பழிதீர்க்க காத்திருக்கும் வெங்கடேஷ்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: வெங்கடேஷ் ரத்னாவின் பழைய துணிகளையும், சண்முகத்தின் குடும்ப போட்டோவையும் தீயில் போட்டு கொளுத்திக் கொண்டிருக்கிறான். அப்போது, வெங்கடேஷனின் அம்மா, என்னடா, ரத்னா கூட சேர்ந்து வாழவேண்டும் என்று சொல்லிவிட்டு, இன்னைக்கு அவளோட போட்டோவை போட்டு எரிச்சிக்கிட்டு இருக்க என்று கேட்க, நான் ரத்னா கூட சேர்ந்து வாழ ஆசைப்படவில்லை. அவள் நிம்மதியாவே வாழக்கூடாது என்கிறான். இதையடுத்து, ஷண்முகம் வீட்டில் பொங்கல் வைத்து கொண்டிருக்க வெங்கடேஷ் வந்து நிற்க பரணி மட்டும் வெங்கடேசை வீட்டிற்குள் அழைக்க, அனைவரும் விருப்பம் இல்லாமல் உள்ளே சென்றுவிடுகின்றனர். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில் சிவபாலன், பொங்கல் சீரை எடுத்துக்கொண்டு சண்முகம் வீட்டுக்கு கிளம்ப, அப்போது, சௌந்தரபாண்டி என்னுடைய காசில் பொங்கல் சீரா என்று கேட்டு சண்டை போடுகிறான். உடனே சிவபாலன், இது ஒன்னும் உங்க காசுல வாங்கல, அண்ணன் காசுல வாங்கியது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே வருகிறான். அப்போது பாண்டியம்மாள், ஏல சௌந்தரபாண்டி, இந்த வீட்ல உன்னோட மரியாதையே போச்சு, இழந்த மரியாதையை நீ திரும்பி கொண்டு வரணும் டா தம்பி, இல்லனா உன்னோட நிலைமை ரொம்ப மோசமாயிடும் என்ற சொல்ல, இதைக்கேட்ட சவுந்தரபாண்டி உன் பேச்சைக் கேட்டு தான் இசக்கி மேல எண்ணையை ஊத்தினேன், அன்றையில் இருந்து, என் தலையில் நெருப்பு வைத்த மாதிரி ஒரே பிரச்சனை மேல பிரச்சனையா இருக்கு இனிமே உன் பேச்சை எதையுமே கேட்க கூடாது என்கிறான்.

தல பொங்கல் சீர்: இதையடுத்து, சண்முகம் வீட்டுக்கு வரும் சிவபாலன், அனைவருக்கும் பொங்கல் சீரை கொடுக்கிறான். இதை பார்த்த சண்முகம், பாக்கியம் அத்தை வரவில்லையா என்று கேட்க. அண்ணா, அந்த வீட்ல தல பொங்கலை கொண்டாடி இருக்கணும், அண்ணா இல்லாததால, அம்மா கோவிலுக்கு போயிட்டாங்க என்று சொல்லிவிட்டு,பொங்கல் சீரை அனைவருக்கும் கொடுக்கிறார் சிவ பாலன். அதன்பின், சண்முகமும், இசக்கி மற்றும் முத்துப்பாண்டியை அழைத்து தல பொங்கல் சீராக புது துணி,செயின் மற்றும் மோதிரத்தை கொடுத்து அழகு பார்க்கிறார். இதை பார்த்துக் கொண்டிருந்த சண்முகம் வெங்கடேஷ் நமக்கும் தல பொங்கல் தானே, நம்மை யாரும் கண்டு கொள்ளவில்லையே என்று வன்மத்துடன் இருக்கிறான்.
கடுப்பான ரத்னா: அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் வரும், அறிவழகனை பார்த்ததும் ரத்னா கடுப்பாகி, எதற்கு வீட்டிற்கு வந்த என்று கேட்க. அப்போது, அறிவழகன் எனக்கு பசி எடுத்தது அதனால், பொங்கல் வாழ்த்து சொல்லிட்டு சாப்பிட்டுவிட்டு போகலாம் என்று வந்தேன் என்று சொல்லி அனைவருக்கும் ஒவ்வொரு போட்டோக்களை பரிசாக கொடுக்கிறான். ரத்னாவிற்கு புத்தர் போட்டோவை கொடுத்து, உங்களுக்கு நிறைய கோபம் வருது அது குறைய வேண்டும் என்பதற்காக புத்தரின் போட்டோ கொடுக்கிறேன் என்று சொல்ல அனைவரும் சிரிக்கின்றனர். அதன்பின் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்


Click it and Unblock the Notifications











