இத யாரும் எதிர் பாக்கல? அடுத்து நடக்க போவது என்ன? இன்று அண்ணா சீரியலை மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை: சண்முகம் வீட்டுக்கு வரும் அறிவழகன், அனைவருக்கும் வாழ்த்து அட்டையை கொடுத்து பொங்கல் வாழ்த்து சொல்கிறான். பின் அனைவரும், ஜோடி ஜோடியாக சாப்பிட உட்கார வெங்கடேஷ், ரத்னா பக்கத்தில் உட்கார போக அறிவழகன் உள்ளே புகுந்து ரத்னா பக்கத்தில் உட்காருகிறான். பரீட்சைனாலும் பந்தினாலும் அன்றிலிருந்து ரத்னா பக்கத்தில் தான் நான் உட்காருவேன். பரீச்சையில அவளை பார்த்து எழுதுவேன்.. பந்தினா அவ இலையில் இருக்கிற பாதியை நான் தான் எடுத்து சாப்பிடுவேன் என்று சொல்கிறான். இதைப் பார்த்து வெங்கடேஷ் கடுப்பாகிறான். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.
அண்ணா சீரியலில் இன்றைய எபிசோடில், பொங்கல் பண்டிகைக்கு உறியடி திருவிழா நடைபெற இருக்கும் இடத்தில சௌந்தரபாண்டியனுக்கு பெரிய பேனர் வைத்து இருப்பதை பார்த்த சண்முகம். சனியை கூப்பிட்டு யார் இந்த மாதிரி எல்லாம் உனக்கு எழுதி கொடுத்து பேனர் வைக்க சொன்னது என கேட்க, நான் தான் எங்க ஐயா மேல இருக்குற பாசத்துல வெச்சேன் என்று சொல்ல, சண்முகம் சனியன அடிச்சு கிண்டல் பண்ணி நாளைக்கு உறியடில உங்க உங்க ஐயாவை வந்து வீரத்தை காட்ட சொல்லு என்று கிண்டலடித்து அனுப்புகிறான்.

உறியடி விளையாட்டு: விளையாட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு வரும், சௌந்தரபாண்டியன், அக்கா நான் பேனர் வைக்க வேண்டாம்னு தான் சொன்னேன், இந்த சனியன் தான் கேட்கவே இல்ல அவனுக்கு என் மேல ரொம்ப பாசம் அக்கா, என் மேல ரொம்ப மரியாதையானவன் ஆசைப்பட்டு கேட்டான் சரி வெச்சுக்கோ என்று சொல்லிட்டேன் என்கிறான். திருவிழாவிற்கு வந்த சௌந்தரபாண்டியின் பேனர் கிழிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். இதைப்பார்த்த, சௌந்தரபாண்டி, சனியை அழைத்து, பேனர் வைக்க சொன்ன, எல்லாரும் என் மூஞ்சில மதிக்கிற மாதிரி கீழப்போட்டு வெச்சி இருக்க என்று சனியனை திட்டுகிறான்.
கடுப்பேத்தும் சண்முகம்: இதையடுத்து சண்முகம் தனது குடும்பத்தோட விழா நடைபெறும் இடத்திற்கு வருகிறார். அனைவருமே கூலிங் கிளாஸ் போட்டுட்டு வருவதை பார்த்து, கடுப்பான சவுந்தர பாண்டி, அல்பனுக்கு வாழ்வு வந்த அத்த ராத்திரியில் குடைபிடிப்பான், அதுபோலத்தான் சண்முகம் உனக்கு இப்ப வாழ்க்கை வந்து இருக்கு அதனால நீ கண்ணாடியை போட்டுக்கிட்டு இருக்க என்று சொல்ல, சண்முகம் இதைப்பார்த்ததும் என் வயித்தெரிச்சல் வருதா அதுக்குத்தான் நாங்க கண்ணாடி போட்டுக்கிட்டு வந்தோம் என்று சொல்கிறான்.
இசக்கியை அடிக்கும் பிளான்: இதையடுத்து, உறியடி திருவிழாவிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது வேறு ஒரு ஊரில் இருந்து, மிகவும் பிரபலமான உறியடி வீரர் ஒருவர் வருவதாக சொல்ல, அனைவரும் யார் அவர் என்று ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். அவன் நேராக சௌந்தரபாண்டியனிடம் சென்று யாரை அடிக்க வேண்டும் என்று கேட்க அவன் இசக்கி கட்டிஇருக்கும் புடவையின் நிறத்தை சொல்லி அவளை தான் அடிக்க வேண்டும். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன். நீ அடிக்கிற அடியில அவ செத்தா கூட பரவால்ல பல மடங்கு பணத்தை தருகிறேன் என்று புதிதாக ஒரு திட்டம் போடுகிறான் சௌந்தரபாண்டி. இதை தெரிந்து கொண்ட சண்முகம் எத்தனை வாட்டி சொன்னாலும் நீ திருந்த மாட்டியா என்று மனசுக்குள்ள நினைத்துக்கொண்டு, இன்னைக்கு உனக்கு சரியான பாடத்தை நான் கற்று தருகிறேன் என்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











