ஜவ்வுபோல இழுக்கும் அண்ணா சீரியல்.. முடிச்சிவிடுங்கப்பா பார்க்க முடியல.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: உறியடி திருவிழாவிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது வேறு ஒரு ஊரில் இருந்து, மிகவும் பிரபலமான உறியடி வீரர் ஒருவர் வருவதாக சொல்ல, அனைவரும் யார் அவர் என்று ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். அவன் நேராக சௌந்தரபாண்டியனிடம் சென்று யாரை அடிக்க வேண்டும் என்று கேட்க அவன் இசக்கி கட்டிஇருக்கும் புடவையின் நிறத்தை சொல்லி அவளை தான் அடிக்க வேண்டும். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன். நீ அடிக்கிற அடியில அவ செத்தா கூட பரவால்ல பல மடங்கு பணத்தை தருகிறேன் என்று புதிதாக ஒரு திட்டம் போடுகிறான் சௌந்தரபாண்டி.இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்
இன்றைய எபிசோடில், சௌந்தரபாண்டி உறியடிக்கும் போட்டியில் கலந்து கொண்டு உறியடிக்க சென்று கடைசியில் பாண்டியம்மா மண்டையில் அடித்து விடுகிறார். இதனை தொடர்ந்து இந்த ஊரில் உறியடி போட்டியில் கலந்து கொண்டு ஜெயிக்க யாருமே இல்லையா என்று கேள்வி எழுப்ப வெட்டுக்கிளி ஏன் இல்ல.. என் அண்ணன் இருக்காரு என்று சண்முகத்தை கோர்த்து விடுகிறான். சண்முகம் அமைதியா இருடா என்று சொல்ல வெட்டுக்கிளி போட்டியில் கலந்து கொண்டு அண்ணிக்கு தங்க செயினை ஜெயித்து கொடு என்று சொல்ல பரணிக்காக போட்டியில் கலந்து கொள்ள முடிவெடுக்கிறான்.

அண்ணா சீரியல்: தான் ஜெயிக்காத இந்த போட்டியில் சண்முகம் ஜெயிக்க கூடாது என நினைக்கும் வெங்கடேஷ் கயிறு இழுக்கும் இடத்தில நின்று கொண்டு சண்முகம் சரியாக அடிக்க வரும் நேரத்தில் பானையை இழுத்து சதி செய்கிறான். இரண்டு முறை இப்படியே மிஸ்ஸாக மூன்றாவது முறை சரியாக பானையை அடித்து வெற்றிவாகை சூடுகிறான். பானையில் இருந்த தங்க செயினும் பறந்து போய் பரணி கழுத்தில் விழுகிறது. பிறகு சண்முகத்திற்கு விழா குழுவினர் கோப்பை கொடுக்க ஷண்முகம் அதை முன்னாள் கமிட்டி தலைவர் கையால் வாங்க ஆசைப்படுவதாக சொல்லி சௌந்தரபாண்டி கையால் வாங்குகிறான்.
ஜெயித்த சண்முகம் பிறகு பத்திரிகையாளர்கள் சண்முகத்தை பேட்டி எடுக்க சூழ்ந்து கொள்கின்றனர். உறியடிச்சதுக்காக இத்தனை பேர் பேட்டி எடுக்க வந்து இருக்கீங்க என்று கேட்க அவர்கள் இல்ல உங்க ஐடியாலஜி பிடித்து போய் பேட்டி எடுக்க வந்திருக்கோம் என்று சொல்கின்றனர். அதாவது மாப்பிள்ளைகளை உங்க வீட்டில் வச்சிட்டு இருக்கீங்க.. அந்த முயற்சிக்கு என்ன காரணம் என்று கேட்க என் தங்கச்சிங்க என் கண்ணு முன்னாடியே நல்லபடியாக வாழனும்.. அதுக்காக தான் இந்த முடிவு என்று சொல்கிறான்.

முடிச்சிவிடுங்கப்பா முடியல: முத்துப்பாண்டி நான் எங்க வீட்டை விட இங்க ரொம்ப சந்தோசமாக இருக்கேன். என்னை ரொம்ப மரியாதையோடு தான் நடத்துறாங்க என்று சொல்கிறான். இதை பார்த்து வெங்கடேஷ் நானும் சந்தோசமாக தான் இருக்கேன். என் பொண்டாட்டி கூட வாழனும் என்பதற்காக வாத்தியார் வேலையை விட்டு வந்து இருக்கேன் என்று சொல்ல இதை கேட்டு ரத்னா கடுப்பாகிறாள். இப்படியான இன்றைய எபிசோட் முடிகிறது. முதலில் இன்று வந்த ப்ரோமோவைப் பார்த்த ரசிகர்கள், பொங்கல் போய் ஒரு வாரம் ஆச்சு இன்னுமா அதே எபிசோட் என்றும், அண்ணா சீரியல் ஜவ்வுபோல இழுத்துக்கிட்டே போகுது முடிச்சிவிடுங்கப்பா என்று கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











