குடும்பத்தை பிரிக்க வெங்கடேஷன் போடும் புது பிளான்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: பத்திரிகையாளர்கள் சண்முகத்தை பேட்டி எடுக்க சூழ்ந்து கொள்கின்றனர். உறியடிச்சதுக்காக இத்தனை பேர் பேட்டி எடுக்க வந்து இருக்கீங்க என்று கேட்க, அவர்கள் இல்ல உங்க ஐடியாலஜி பிடித்து போய் பேட்டி எடுக்க வந்திருக்கோம் என்று சொல்கின்றனர். அதாவது மாப்பிள்ளைகளை உங்க வீட்டில் வச்சிட்டு இருக்கீங்க.. அந்த முயற்சிக்கு என்ன காரணம் என்று கேட்க என் தங்கச்சிங்க என் கண்ணு முன்னாடியே நல்லபடியாக வாழனும்.. அதுக்காக தான் இந்த முடிவு என்று சொல்கிறான்.
முத்துப்பாண்டி நான் எங்க வீட்டை விட இங்க ரொம்ப சந்தோசமாக இருக்கேன். என்னை ரொம்ப மரியாதையோடு தான் நடத்துறாங்க என்று சொல்கிறான். இதை பார்த்து வெங்கடேஷ் நானும் சந்தோசமாக தான் இருக்கேன். என் பொண்டாட்டி கூட வாழனும் என்பதற்காக வாத்தியார் வேலையை விட்டு வந்து இருக்கேன் என்று சொல்ல இதை கேட்டு ரத்னா கடுப்பாகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுத்துக் கொண்டு இருக்க, அப்போது வீரா, நானும் இப்படித்தான் வீட்டோட இருக்கும் மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்ய போகிறேன் என்கிறார். அதேபோல கனி நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன். எப்போதும் அண்ணன், அக்காவுடனே இருந்து விடுவேன் என்று சொல்ல, பத்திரிக்கையாளர்கள் அனைவரும் எப்போதும் இப்படியே சந்தோஷமாக இருங்கள் என்று சொல்லிவிட்டு அனைவரும் செல்கின்றனர்.
வன்மத்தை விதைத்த வெங்கடேஷ்: இதையடுத்து, அனைவரும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது சண்முகம், பத்திரிக்கையாளர்கள் எப்போதுமே இதே போன்று சந்தோஷமாக இருப்பீர்களா என்று கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டு விட்டது. இதே மாதிரியே சந்தோஷமாக கூட்டு குடும்பமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று சொல்ல. அனைவரும், அதுல உனக்கு என்ன சந்தேகம், நாம எப்பவுமே இதே போல தான் இருப்போம் வீராக்கு இதே மாதிரி வீட்டோட ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிடு என்று பரணி சொல்கிறாள். அப்போது, வன்மத்தை மனதில் வைத்துக்கொண்டு பேசும் வெங்கடேஷ், மாப்பிள்ளை பார்க்கும் போது, ஒத்த பையனா இருக்கிற வீடா பார்க்காதீங்க... நாலு பையனா இருக்குற வீட்ட பாத்தா தான், மாப்பிள்ளை வீட்டோட வந்து குடும்பம் நடத்த முடியும் என்று சொல்ல சண்முகம் மற்றும் அனைவரும் கடுப்பாகின்றனர்.

இப்படி ஒரு நாடகமா: மறுநாள் காலையில் முத்துப்பாண்டிக்கு மட்டும் ரத்னா டீயை கையில் கொடுத்துவிட்டு, வெங்கடேஷூக்கு டீயை தரையில் வைத்து விட்டு செல்கிறாள். இதைப்பார்த்து, இருடி உனக்கு சரியான ஆப்பு இருக்கு என்று மனதிற்குள் திட்டிக்கொண்டு இருக்க, அப்போது முத்துப்பாண்டி, டிஎஸ்பிஐ இன்று பார்த்தே ஆக வேண்டும் அவருக்கு தாமதமாக சென்றால் டிஸ்மிஸ் கூட செய்து விடுவார். அவ்வளவு கோவக்காரர் என்று குளிப்பதற்காக அவசர அவசரமாக ரெடியாகிக் கொண்டு இருக்க, அவரை பழித்திருக்க வேண்டும் என்பதற்காக வெங்கடேசன் வேண்டும் என்றே பாத்ரூமிற்கு சென்றுகுளிப்பது போல நாடகமா ஆடுகிறார் இந்த பிரச்சனையை பார்த்துவிட்டு அனைவருக்கும் கடுப்பாகின்றது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











