ஷண்முகம் குடும்பத்தை கலைக்க சபதம் எடுக்கும் சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: முத்துப்பாண்டிக்கு மட்டும் ரத்னா டீயை கையில் கொடுத்துவிட்டு, வெங்கடேஷுக்கு டீயை தரையில் வைத்து விட்டு செல்கிறாள். முத்துப்பாண்டி, டிஎஸ்பிஐ இன்று பார்த்தே ஆக வேண்டும் அவருக்கு தாமதமாக சென்றால் டிஸ்மிஸ் கூட செய்து விடுவார். அவ்வளவு கோவக்காரர் என்று குளிப்பதற்காக அவசர அவசரமாக ரெடியாகிக் கொண்டு இருக்க, அவரை பழித்திருக்க வேண்டும் என்பதற்காக வெங்கடேசன் வேண்டும் என்றே பாத்ரூமிற்கு சென்று குளிப்பது போல நாடகம் ஆடுகிறார். இந்த பிரச்சனையை பார்த்துவிட்டு அனைவரும் கடுப்பாகின்றனர். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்
இன்றைய எபிசோடில், வெங்கடேஷ், வேண்டும் என்றே பாத்ரூமுக்குள் காதல் பாட்டு பாடி கொண்டே தாமதப்படுத்த முத்துப்பாண்டி வேறு வழியின்றி குளிக்காமல் ட்ரெஸ் மாத்தி கொண்டு கிளம்புகிறான். அப்போது, வெங்கடேஷ் வெளியே வந்து,வேண்டும் என்றே முத்துப்பாண்டியை பார்த்து குளிக்காமலே, ஸ்டேஷன் போறீங்க போல என்று கிண்டலாக கேட்க, அதற்கு முத்துப்பாண்டி அதான் நீங்க போய்ட்டீங்களே அதன் நான் போகவில்லை என்று சொல்லிவிட்டு நேரம் ஆகிவிட்டது என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள். அப்போது, சண்முகம், நேத்துத்தான் முத்துப்பாண்டி, காலையில் சீக்கிரமாக போக வேண்டும் என்று சொன்னானே, நீங்க வீட்டில் சும்மாத்தானே இருக்கீங்க, பொறுமையா குளிச்சா என்ன என்று கேட்டு வெங்கடேஷை திட்டுகிறார். இதையடுத்து, வெங்கடேஷ், சாரி கேட்கிறான்.

அப்பாவின் ஐடியா: இசக்கி ரத்னாவிடம் சென்று எதுக்கு இவர் இப்படி பண்ணனும்? பொறுமையா குளிக்க வேண்டியது தானே.. அவர் தான் சீக்கிரம் போகணும்னு நேத்தே சொன்னாரே, வெங்கடேஷ் செய்றது எல்லாம் சரியா இல்ல என்று சொல்ல ரத்னா நான் அப்பவே அவரை உள்ளே விட வேண்டாம்னு சொன்னேன். நீங்க தான் யாரும் கேட்கல என்று சொல்கிறாள். வீட்டில் நடந்த இந்த பிரச்சனையால் வைகுண்டம் இனி அனைவரும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிக்கலாம் என்று ஐடியா கொடுக்க ஷண்முகம் கொத்தனாரை வர வைத்து இன்னொரு பாத்ரூம் கட்ட ஏற்பாடு செய்கிறான்.
பேப்பரில் குடும்ப போட்டோ: உறியடி போட்டியில் அடி வாங்கிய பாண்டியம்மா, வலி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருக்க அப்போது வரும் சௌந்தரபாண்டி, சின்ன அடி தானே அக்கா, ஏன் இவ்ளோ சீன் போடுற என்று கேட்கிறான். அப்போது பாண்டியம்மாள், இசக்கிய வெட்டும்போது உன் பையன் வந்துட்டான், சரி உறியடி போட்டியில் அவ மண்டையை உடைப்பேனு பார்த்தா... நீ என் மண்டைய உடைச்சிட்ட, உண்மையில நீ யாருக்கு தான் பகையானு தெரியலையே எனக்கு ஏதோ சந்தேகமா இருக்கு என்று இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது, சிவபாலன், சண்முகத்தின் குடும்ப போட்டோ பேப்பரில் வந்திருப்பதாக சொல்ல அந்த போட்டோவை பார்த்து பாக்கியம் மகிழ்ச்சி அடைகிறாள்.
இதையடுத்து, சிவபாலன், பேப்பரை எடுத்து கொண்டு ஷண்முகம் வீட்டிற்கு கிளம்ப சௌந்தரபாண்டி பேப்பர்ல வர அளவுக்கு பெரிய ஆளா ஆகிட்டானா? அந்த குடும்பத்தை நாசமாக்கி காட்டுறேன் என்று சபதம் எடுக்கிறார். ஷண்முகம் குடும்பத்தினர் பேப்பரில் போட்டோ வந்து இருப்பதை பார்த்து சந்தோசப்பட ஷண்முகத்திற்குள் ஒரு வித பயம் உருவாகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











