வெறும் பய சண்முகம் குடும்பத்தை சுக்கு நூறாக உடைப்பேன்.. சவால் விட்ட சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல்!

சென்னை: சண்முகத்தின் குடும்ப போட்டோ பேப்பரில் வந்ததைப்பார்த்து மகிழ்ச்சியில், சிவபாலன் பாக்கியாவிடம் காட்டி மகிழ்ச்சி அடைகிறான். பின் பேப்பரை எடுத்து கொண்டு ஷண்முகம் வீட்டிற்கு கிளம்ப சௌந்தரபாண்டி பேப்பர்ல வர அளவுக்கு பெரிய ஆளா ஆகிட்டானா? அந்த குடும்பத்தை நாசமாக்கி காட்டுறேன் என்று சபதம் எடுக்கிறார். ஷண்முகம் குடும்பத்தினர் பேப்பரில் போட்டோ வந்து இருப்பதை பார்த்து சந்தோசப்பட ஷண்முகத்திற்குள் ஒரு வித பயம் உருவாகிறது. இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடில், ஷண்முகம் மற்றும் பரணி என இருவரும் பைக்கில் வந்து கொண்டிருக்க எதிரே வந்து வழிமறிக்கும் சௌந்தரபாண்டி, என்ன பணத்தை கொடுத்து பேப்பரில் செய்தி வர வைக்கிறியா என்று கேட்கிறார். மேலும் இந்த ஊர் வழக்கத்தை மாற்ற பாக்குறியா? ஆம்பளைங்க எல்லாம் பொண்ணுங்க வீட்டில் போய் வாழணுமா? நான் பணத்தைக் கொட்டி என் மகனையும், மகளையும் படிக்க வச்சு அரசாங்க உத்தியோகம் வாங்கி கொடுத்தா? நீ அவங்க ரெண்டு பேரையும் உன் வீட்ல உட்கார வைத்து உன் குடும்பத்திற்கு சம்பாதித்து போட வைக்கிறியா? என்று கேட்க அப்போது பரணி, நீங்க எங்களை கஷ்டப்பட்டு படிக்க வைக்கல, நாங்க நல்லா படிக்க வேண்டும் என்று எங்க அம்மா எவ்ளோ கஷ்டப்பட்டாங்கனு எனக்கு தெரியும் என்று பதிலடி கொடுக்கிறார்கள்.

zee tamil anna

அண்ணா சீரியல்: இந்த கூட்டு குடும்பத்தை நான் உடைச்சி காட்டுறேன், அதுக்கு நான் கேரண்டி என்று பேப்பரில் வந்த அந்த போட்டோவை எடுத்து சண்முகத்தின் கண் முன்னேயே கிழித்து போடுகிறார் சண்மும். அப்போது சண்முகம், எங்கள் குடும்பம் கருங்கல்லில் கட்டிய கோட்டை அதுல முட்டணும்னு நினைச்சா உன் மண்ட தான் உடையும் என்று சொல்ல. என்னது கருங்கல் கோட்டையா... அது வெறும் செங்கல் கோட்டை, அந்த கோட்டையை உடைத்து உன்னை தரைமட்டமாக்கி, வெறும் பையலாக்கல, என் பேரு சவுந்தரபாண்டி இல்லடா என்று சவால் விடுகிறான். ஷண்முகம் சௌந்தரபாண்டி விட்ட சவாலை எதிர்த்து உன்னால் எதுவும் செய்ய முடியாது என்று சவால் விடுகிறான். இதையடுத்து, வெங்கடேஷ் சௌந்தரபாண்டி ஆளாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. ஆனால் பரணி அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை என்று சொல்கிறாள்.

சாவல்விடும் வெங்கடேஷ்: மறுபக்கம் ரத்னா மதிய உணவு வேளையில் டீ குடித்து கொண்டிருக்க அறிவழகன் என்னங்க சாப்பிடலையா என்று கேட்க ரத்னா சாப்பாடு கொண்டு வரவில்லை என்று சொல்கிறாள். அறிவழகன் டீ-யை வாங்கி கீழே கொட்டி ஈ இருந்ததாக சொல்கிறான். பிறகு தன்னுடைய சாப்பாட்டை கொடுத்து ரத்னாவை சாப்பிட சொல்ல அவள் மறுக்கிறாள். அறிவழகன் பேச்சுலர் சாப்பாடு எவ்வளவு மோசம் தெரியுமா? சாப்பிட்டு பார்த்து இது என்ன குழம்புனு ஒரே வாயில் சொல்லணும் என்று சொல்கிறான், அடுத்து ரத்னாவும் சாப்பிட்டு என்னவென்று சொல்ல முடியாமல் குழம்புகிறாள்.

இவர்கள் இருவரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் நேரத்தில் வெங்கடேஷ் சாப்பாடு கொண்டு வர ரத்னா தேவையில்லாத வேலையெல்லாம் செய்ய வேண்டாம் என்று திட்டுகிறாள். அறிவழகன் நாங்க ஷேர் பண்ணி சாப்பிட்டுகிறோம் என்று சொல்ல வெங்கடேஷ் நான் இந்த ஸ்கூல்ல இல்லாததால் தானே இப்படியெல்லாம் நடக்குது. எப்படி இந்த ஸ்கூலுக்குள் வரேன்னு மட்டும் பாரு என்று சவால் விட்டு செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X