பரணி, சண்முகம் பிரிவார்களா? ரத்னா எடுக்கும் முடிவு.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: ரத்னா மதிய சாப்பாடு கொண்டு வராததால், அறிவழகன் தான் சமைத்ததை கொடுக்க இருவரும் சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் வெங்கடேஷ் சாப்பாடு கொண்டு வர ரத்னா தேவையில்லாத வேலையெல்லாம் செய்ய வேண்டாம் என்று திட்டுகிறாள். அறிவழகன் நாங்க இரண்டு பேரும் ஷேர் பண்ணி சாப்பிட்டுவிட்டோம் என்று சொல்ல வெங்கடேஷ் நான் இந்த ஸ்கூல்ல இல்லாததால் தானே இப்படியெல்லாம் நடக்குது. எப்படி இந்த ஸ்கூலுக்குள் மீண்டும் வரேன் என்று சவால் விட்டு செல்கிறான். இதையடுத்து இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.

ரத்னாவும் அறிவழகனும் ஒன்னா சாப்பிட்டதைப் பாத்து கடுப்பான, வெங்கடேசன், சண்முகத்திடம் எனக்கு மீண்டும் வேலை வாங்கி கொடுங்க, நான் பண்ணது தப்புதான், அதை நான் ஒத்துக்குறேன் இனிமே, நான் தப்பு பண்ண மாட்டேன், நானும் ரத்தினாவும் எப்படி காதலிச்சோம் என்று உங்களுக்கு நல்லாவே தெரியும், இப்ப கூட ரத்னா வேணும் என்று, அம்மா அப்பா எல்லாம் விட்டுட்டு இந்த வீட்ல வந்து வாழ்ந்துகிட்டு இருக்கேன். வேலை இல்லனா ரத்னா கூட நான் சேரவே முடியாதபடி ஆயிடும் தயவுசெய்து எனக்கு வேலை வாங்கி கொடுங்க என்று வெங்கடேசன் சண்முகத்தின் காலில் விழுந்து கெஞ்சுகிறான்

zee tamil anna

இன்றைய எபிசோட்: ஆனால், சண்முகம் நீ செஞ்ச வேலைக்கு மறுபடி, என்னால வேலை வாங்கி தர முடியாது. அதுவும் இல்லாம அது ரத்தினவோட விருப்பம். வெங்கடேஷ், வேலைக்கு வேணுமா வேணுமானு ரத்னா தான் முடிவு எடுக்கணும். நான் இல்ல என்று சொல்கிறான். அப்போ பரணி, நீ சொன்னா உன் தங்கச்சி கேப்பா என்று சொல்ல, அப்போது, ரத்னா குறுக்கிட்டு, அண்ணா, நீ எது சொன்னாலும் நான் கேட்பேன். ஆனா தயவுசெய்து வெங்கடேசனுக்கு மட்டும் வேலை போட்டு கொடுனு சொல்லிடாதே, அதை என்னால செய்யவே முடியாது என்கிறாள்.

ரணி, சண்முகம்: இதையடுத்து, வெங்கடேஷ் சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டு கோபித்துக்கொண்டு திண்ணையில் படுத்துக் கொள்கிறான். இதனால் வீட்டில், அனைவரும் சாப்பிடாமல் இருக்க சண்முகம் மட்டும் சாப்பிடுகிறான். இதை பார்த்து கடுப்பான பரணி, வீட்ல இவ்ளோ பிரச்சனை நடந்துட்டு இருக்கும்போது நீ மட்டும் நல்லா சாப்டிரியா என கேட்டு சண்டை போடுகிறார். நீ தான் உன் தங்கச்சி கிட்ட சொல்லி வெங்கடேஷ்க்கு வேலை வாங்கி தரணும். இசக்கியோட வாழ்க்கை மாறியது மாதிரி, ரத்னாவோட வாழ்க்கையும் நல்லா இருக்கணும். அதுக்காகத்தான், நான் இவ்ளோ போராடிகிட்டு இருக்கேன். ஆனால், அது உனக்கு புரியவே மாட்டேங்குது என்று சொல்ல, ரெண்டு பேருக்கு இடையில சண்டை வரா பரணி கோபித்துக்கு ஹாலில் வந்து படுத்துக்கொள்கிறாள்.

பரணி வெளியில வந்தது படத்த பார்த்த, வைகுண்டம் என்னம்மா என்ன பிரச்சனை என்று கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்லை மாமா என்கிறார். தூங்காமல் இருக்கும் ரத்னா, நம்மளால இவங்க ரெண்டு பேருக்குள் சண்டை வருது என்று வருத்தப்படுகிறாள். இதையடுத்து மறுநாள் காலை ரத்னா ஸ்கூலுக்கு கிளம்பி போகும் நேரத்தில், வெங்கடேஷ்க்கு நான் வேலை போட்டு கொடுக்கிறேன் வெங்கடேசனை ஸ்கூலுக்கு வர சொல்லுங்க என்கிறாள். இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X