பரணியை அவமானப்படுத்த சௌந்தரபாண்டியுடன் கூட்டு சேரும் தோழி.. நடக்கப் போகும் என்ன? அண்ணா சீரியல் !
சென்னை:ரத்னா, வெங்கடேசுக்கு வேலை போட்டு கொடுக்கிறாள். வெங்கடேஷ் நினைத்ததை சாதித்து விட்ட சந்தோஷத்தில் இருக்க சௌந்தரபாண்டி வீட்டுக்கு ஸ்ருதி என்ற பெண் வருகிறாள். பரணிக்கு விருது கொடுத்த இருப்பதாகவும் அவளை பார்க்க வந்ததாகவும் சொல்ல சௌந்தரபாண்டி அவ வெறும் பையனை கட்டிக்கிட்டு அந்த வீட்ல இருக்கா.. அங்க போ என்று அலுத்துக் கொள்கிறார். பிறகு ஸ்ருதி எனக்கும் பரணியை பிடிக்காது.. அவளை அவமானப்படுத்த தான் உங்களை பார்க்க வந்தேன் என்று சொல்கிறாள்.
அதாவது, கல்யாண பத்திரிக்கை கொண்டு வந்த சுருதி பரணியிடம் கொடுத்து நீ, என்ன இந்த வேட்டி கட்டுறவுன் கூடவா வாழற, உனக்கெல்லாம் இவன் சரியா பொருத்தம் இல்ல என்று சொல்கிறாள். மேலும் என் கல்யாணத்துக்கு நீ மட்டும் வந்தா போதும், உன் புருஷனை கூட்டிட்டு வராதே என்று சொல்ல கோபமான பரணி பத்திரிக்கையை தூக்கி அவள் முகத்தில் வீசி திட்டி அனுப்பிய விஷயத்தை சௌந்தரபாண்டியிடம் சொல்கிறாள். என்னை அவமானப்படுத்தின பரணியை அவமானப்படுத்த தான், இந்த விருது விழாவிற்கு கூப்பிட வந்திருக்கேன். நீங்களும் வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அவமானப்படுத்தலாம் என்று சௌந்தரபாண்டியை கூட்டு சேர்கிறாள். அதைத்தொடர்ந்து சுருதி பரணியை சந்தித்து விருது விழாவிற்கு வரவேற்கிறாள்.

செள்ந்தரபாண்டி போடும் பிளான்: டாக்டருக்கு படிச்சிட்டு காசு வாங்காம ஏழை மக்களுக்கு மருத்துவம் பார்க்கிற உனக்கு தான் இந்த விருது கொடுக்கிறாங்க. அதனால நீ கண்டிப்பா வரணும் உன் புருஷனையும் கூட்டிட்டு வா என்று சொல்ல பரணிக்கு ஸ்ருதி மீது ஒரு சின்ன சந்தேகம் உருவாகிறது. அதன் பிறகு சண்முகம் வீட்டிற்கு வரும் சௌந்தரபாண்டி என் பொண்ணு விருது வாங்க போறா. அவன படிக்க வச்சது நான் தான் அதனால அந்த விருதை நானே வாங்கிக்கிறேன். நீங்க யாரும் வரக்கூடாது என்று சொல்லிவிட்டு கிளம்பி செல்கிறார்.
இதனை தொடர்ந்து வைகுண்டம் என் மருமகள் விருது வாங்குறா.. இதுக்கு வரக்கூடாதுன்னு சொல்ல அவன் யாரு? நாம எல்லாரும் குடும்பத்தோட சென்னையில் நடக்கிற விருது விழாவுக்கு போறோம் என்று சொல்ல இதை வெளியில் இருந்து ஒட்டு கேட்ட சௌந்தரபாண்டி தன்னுடைய திட்டம் சரியாக நிறைவேறியதாக நினைத்து சிரிக்கிறார். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறதுஎன்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











