ரத்னா ஏன் பொண்டாட்டி.. வெங்கடேஷுக்கு VS அறிவழகன்.. நடக்கப்போவது என்ன? அண்ணா சீரியல்!
சென்னை: டாக்டருக்கு படிச்சிட்டு காசு வாங்காம ஏழை மக்களுக்கு மருத்துவம் பார்க்கிற உனக்கு தான் இந்த விருது கொடுக்கிறாங்க. அதனால நீ கண்டிப்பா வரணும் உன் புருஷனையும் கூட்டிட்டு வா என்று சொல்ல பரணிக்கு ஸ்ருதி மீது ஒரு சின்ன சந்தேகம் உருவாகிறது. அதன் பிறகு சண்முகம் வீட்டிற்கு வரும் சௌந்தரபாண்டி என் பொண்ணு விருது வாங்க போறா. அவன படிக்க வச்சது நான் தான் அதனால அந்த விருதை நானே வாங்கிக்கிறேன். நீங்க யாரும் வரக்கூடாது என்று சொல்லிவிட்டு கிளம்பி செல்கிறார்.
இதனை தொடர்ந்து வைகுண்டம் என் மருமகள் விருது வாங்குறா.. இதுக்கு வரக்கூடாதுன்னு சொல்ல அவன் யாரு? நாம எல்லாரும் குடும்பத்தோட சென்னையில் நடக்கிற விருது விழாவுக்கு போறோம் என்று சொல்ல இதை வெளியில் இருந்து ஒட்டு கேட்ட சௌந்தரபாண்டி தன்னுடைய திட்டம் சரியாக நிறைவேறியதாக நினைத்து சிரிக்கிறார்
.

இன்றைய எபிசோடில்: ரத்னா அறிவழகனுக்கு போன் செய்து நாளைக்கு நான் ஸ்கூலுக்கு வர மாட்டேன்.. சென்னை போறேன், ஒழுங்கா ஸ்கூலை பார்த்துக்கோ என்று சொல்கிறாள். அறிவழகன் அப்படியா அப்போ ஒரு நாள் ப்ரின்சிபலா இருந்து பார்த்துக்கறேன் என்று சொல்கிறான். பிறகு அறிவழகன் நானும் சென்னை வரவா என்று கேட்க ரத்னா நீ என்ன என் பேமிலில ஒருத்தனா? நீ எதுக்கு வரணும் என்று சொல்லி விடுகிறாள்.
என் பொண்டாடிக்கு போன் பண்ண நீ யாருடா: வெங்கடேஷ் இவன் யார்கிட்ட பேசிட்டு இருக்கான் என்று குழப்பமடைந்து போனை பார்க்க ரத்னாவுடன் பேசி கொண்டிருப்பதை பார்த்து கடுப்பாகிறான். நீ எதுக்கு டா என் பொண்டாட்டிக்கு போன் செய்து பேசுற என பிரச்சனை செய்ய அறிவழகன் நான் ஒன்னும் போன் பண்ணல.. அவங்க தான் போன் பண்ணி ஒரு நாள் ப்ரின்ஸிபலா இருந்து ஸ்கூலை பார்த்துக்க சொன்னா என்று சொல்கிறான். உடனே, வெங்கடேஷ் நீ பிரின்சிபல் இல்ல பியூன் என்று சொல்ல அறிவழகன் நானும் உங்க கூட சென்னை வந்து காட்டுறேன். அதுவும் ரத்னாவுக்கு மேட்ச்சா ட்ரெஸ் போட்டுட்டு வரேன் என்று சவால் விடுகிறான்.

நடக்கப்போவது என்ன: அடுத்து வீட்டில் அனைவரும் சாப்பிட உட்கார பரணி, எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருக்கிறாள். கனி என்ன அண்ணி விருது வாங்க போறீங்க என்று பேச உங்களுக்கு எப்படி தெரியும் என கேள்வி எழுப்புகிறாள். சௌந்தரபாண்டி வந்து அவமானப்படுத்தி விட்டு சென்ற கதையை சொல்ல பரணி அதனால் தான் எல்லாரும் போக வேண்டாம்னு நினைக்கிறேன் என்று தனியாக சென்று வருவதாக சொல்கிறாள். அடுத்த நாள் பரணியை அவனமானப்படுத்த ஸ்ருதி எல்லா வேலைகளையும் பார்க்க சௌந்தரபாண்டி வித்தியாசமான கெட்டப்பில் வந்து இறங்குகிறார். பரணி தனியாக வந்து இறங்க அதை பார்த்து இருவரும் ஷாக் ஆகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











