ரத்தவெள்ளத்தில் கிடக்கும் சௌந்தரபாண்டி.. இசக்கி செய்யப்போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: சண்முகம் குடும்பத்தினர் கோவிலில் பொங்கல் வைத்து கிடா வெட்டுவதற்காக அனைவரும் கோவிலுக்கு வந்து இருக்கின்றனர். இந்த இடத்தில், சௌந்தரபாண்டி, பாண்டியம்மா மாறுவேடத்தில் இருக்கின்றனர். மேலும், கருப்பு என்ற ரவுடி ஒருவனை சமையல்காரன் கெட்டப்பில் கோவிலுக்குள் அழைத்து வருகிறான் சௌந்தரபாண்டி. இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா: இன்றைய எபிசோடில், குலதெய்வ கோவிலில் கிடா வெட்டி பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்க, அப்போது பாக்யம் அங்கே வந்து பூஜை செய்வதற்கான வேலைகளை செய்து கொண்டு இருக்கிறாள். பொங்கல் வைக்கும் இடத்தை சுத்தம் செய்து கோலம் போடும் என்று சொல்ல இசக்கி தனியாக செல்கிறாள். அவள் தனியாக போவதைப்பார்த்த கனி, நானும் அக்காவுடன் செல்கிறேன் என்று சொல்ல, அந்த நேரம் பார்த்து பாண்டியம்மாள், அங்கு வந்து, அவளை திசை திருப்பி விடுகிறாள்

zee tamil anna

சௌந்தரபாண்டியின் திட்டம்: இதுதான் இசக்கியை பழி தீர்க்க சரியான சந்தர்ப்பம் என்று காத்திருந்த, சௌந்தரபாண்டி, ரவுடி இடம், முத்துப்பாண்டி அழைப்பதாக சொல்லி அவளை தனியாக வரவைக்கிறான். இசக்கியும் முத்துப்பாண்டியை தேடி செல்ல, இவளின் பின்னால் மறைந்து இருக்கும் சௌந்தரப்பாண்டி அருவாளை எடுத்து, பிச்சைக்காரிக்கு என மகன் கேட்குதா, அன்னைக்கே உன்னை மண்ணெண்ணை ஊத்தி கொளுத்த பாத்தேன், அப்போ என் பொண்டாட்டி தடுத்துட்டா, இன்னைக்கு யாருமே இல்லாத இடத்துல வந்து வசமா மாட்டி இருக்க உன்னை நான் சும்மாவிடமாட்டேன். என்று சொல்லி இசக்கியை வெட்டவர, அவள் கீழே இருந்த கட்டையை எடுத்து தடுத்துவிட்டு, இது மட்டும் பாண்டி மாமாவிற்கு தெரிஞ்சா அவ்வளவு தான் என்று சொல்கிறாள்.=

இசக்கிக்கு வரும் ஆபத்து: யாருக்குமே நீ செத்தா என் மேல சந்தேகம் வராது, அப்படி ஒரு பிளான் பண்ணி இருக்கேன். உன் குடும்பத்தையே அழிக்கணும் அதுதான் என் ஆசை, இது எல்லாத்துக்கும் காரணம் யார் தெரியுமா? உன் அண்ணன் சண்முகம், உன் அண்ணன் என் மகளை என்கிட்ட இருந்து பிரிச்சான், அடுத்து நீ என் மகனை என்கிட்ட இருந்து பிரிக்கிற உன் குடும்பத்தை விட்டு உன்ன பிரிச்சா தான் எனக்கு நிம்மதி, என்று கோபத்துடன் சௌந்தரபாண்டி மறுபடியும் இசக்கியை வெட்டவர, இசக்கி தடுமாறி கீழே விழுகிறாள். ஆனால்,கடைசியில் சௌந்தரபாண்டி ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடக்க, இசக்கி கையில் அருவாள் இருக்கிறது.

zee tamil anna

ரத்த வெள்ளத்தில் சௌந்தரபாண்டி: கையில் அருவாளும் இசக்கி நிற்பதை பார்த்த ஒருவன், அய்யாவை வெட்டிவிட்டார்கள் என்று கத்த, அனைவரும் ஓடி வருகின்றனர். அப்போது இசக்கி கையில் அருவாளுடன் பித்து பிடித்தது போல நிற்கிறாள். இதை பார்த்த சண்முகம், இசக்கி என்ன ஆச்சு என்று கேட்டும் அவள் எந்த பதிலும் சொல்லாமல் நிற்கிறாள். அப்போது, அங்கு வரும் பாக்கியம் வெட்டுப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடக்கும் சவுந்தர பாண்டியனை பார்த்து கதறி அழுகிறாள். இசக்கி கையில் அருவாள் இருப்பதை பார்த்து பாக்கியம், இப்படி துடிக்க துடிக்க என் புருஷன கொன்னுட்டியே என்று கதறி அழுகிறாள்.இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X