ரத்னாவுக்கு ரூட் விடும் வாத்தியார்.. யார் இவன்?அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: கோவிலில் வைத்து சௌந்தரப்பாண்டியை இசக்கி வெட்டிவிட, முத்துப்பாண்டி இசக்கியை கைது செய்து சிறையில் அடைத்துவிடுகிறான். சண்முகம், என் தங்கை இசக்கி நிச்சயம் இப்படி செய்து இருக்கமாட்டாள், உண்மையில் இதை யார் செய்தார்கள் என்பதை நான் வெளியில் கொண்டு வந்த இசக்கியை வெளியில் கொண்டு வருகிறேன் என்கிறான். மறுபக்கம், பரணி சௌந்தரபாண்டியை காப்பாற்ற பரபரப்பாக வேலை செய்கிறாள். சௌந்தரபாண்டியை காப்பாற்ற, ரத்தம் தேவை என்பதால், சண்முகம் பாண்டியம்மாளை கண்டுபிடித்து ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து வர, பாண்டியம்மா ரத்தத்தை கொடுத்து சௌந்தரபாண்டியை காப்பாற்றுகிறாள்.
சௌந்தரபாண்டி கண் முழித்து பாண்டியம்மாவிடம் சிவபாலன் தான் தன்னை அரிவாளால் வெட்டியதாகவும், இசக்கி அவனை காப்பாற்ற தன்னை வெட்டியதாக சொல்கிறான். இதையடுத்து, பிளாஷ்கட்டில் சிவபாலன் வெட்டிய பயத்தில் ஓடி விட இசக்கி அவனை காப்பாற்ற பழியை ஏற்றுக் கொண்டிருக்கிறாள் என்பது தெரிய வருகிறது. அதை தொடர்ந்து இசக்கி மீது எந்த தவறும் இல்லை என தெரிய வர இசக்கி வெளியே வருகிறாள். இன்று நடக்கப் போவது என்ன என்பதை பார்க்கலாம்.

அண்ணா: இன்றைய எபிசோடில், வெங்கடேஷ் தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து எப்படியாவது சண்முகம் வீட்டுக்குள் நுழைந்து அந்த ரத்னா மற்றும் சண்முகம் குடும்பத்தோட சந்தோஷத்தை அழிக்கணும் என திட்டம் போடுகிறான். அடுத்ததாக ஸ்கூலில் வெங்கடேஷ்க்கு பதிலாக புதியதாக ஒரு வாத்தியார் வர இருக்க அவரை வரவேற்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ரத்னா ஆட்டோவில் வந்து இறங்க எல்லோரும் எதுக்கு நின்னுகிட்டு இருக்கீங்க என்று கேட்க வெங்கடேஷ்க்கு பதிலாக வரவேண்டிய வாத்தியார் இன்னும் வரவில்லை என சொல்கின்றனர்.
அறிவழகன் வாத்தியார்: அப்போது ரத்னா, ஒரு வாத்தியார் சரியான நேரத்துக்கு வர வேண்டாமா என கோபப்பட, பியூன் அவர் ஏற்கனவே வந்து வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டு இருப்பதாக க சொல்கிறார். அதன் பிறகு கிளாசுக்கு வந்து பார்க்க அறிவழகன் என்ற வாத்தியார் பிள்ளைகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் வழக்கமான வாத்தியார் போல இல்லாமல் செம ஸ்டைலாக இருப்பதை பார்த்து ஸ்கூலுக்கு இப்படியா வருவது என கேள்வி கேட்கிறாள் ரத்னா.
பாடம் எடுக்கும் வாத்தியார்: ஏன் வாத்தியார் என்றால் கோடு போட்ட சட்டை போட்டு இன் பண்ணிட்டு தான் இருக்கணுமா? என்று அறிவழகன் கேட்க ரத்னா சரி கிளாஸ் எடுங்க பார்க்கலாம் என சொல்கிறாள். புத்தகப் படிப்பு என்பது ஒரு சப்ஜெக்ட் தான் அதை மட்டும் தெரிஞ்சுக்க கூடாது என வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டிய மற்ற விஷயங்களை எடுத்து சொல்லி கிளாஸ் எடுக்க ரத்னா தன்னை ஹெட் மாஸ்டர் ரூமில் வந்து சந்திக்குமாறு சொல்லி அங்கிருந்து கிளம்புகிறாள்.
அப்படி போகுதா கதை: இதையடுத்து அறிவழகன், ரத்னா ரூமுக்குள் வந்து அவளைப் பார்த்து முருங்கைக்காய், முண்டக்கண்ணி என கூப்பிட ரத்னா என் பட்ட பெயர் உனக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறாள். நீ இந்த ஸ்கூல்ல எட்டாவது படிக்கும் போது நான் ஒன்பதாவது படிச்சிட்டு இருந்தேன் என்று சொல்கிறான். இதையடுத்து ப்ளாஷ்கட்டில் ரத்னா படிக்கும்போது அவளுக்கு அறிவழகன் லவ் லெட்டர் கொடுக்க ரத்னா அதை சண்முகத்திடம் சொல்ல சண்முகம் அறிவழகனை கூப்பிட்டு வார்னிங் செய்து அனுப்பி விட்டது தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











