இன்று முதல் இரவு.. இசக்கி செய்த வேலை.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: இசக்கி கைது செய்யப்பட்டதை கேள்விப்பட்ட சிவபாலன், தானாக முன்வந்து நான் தான் அப்பாவை வெட்டினேன். அவர் இசக்கியை கொல்வதற்காக கோவிலுக்கு அரிவாளுடன் வந்தார். விஷயம் தெரிஞ்சு தான், நான் கோவிலுக்கு வந்தேன். அப்போது இசக்கியை அப்பா அரிவாளால் வெட்டி கொல்ல பார்த்தாரு, அந்த நேரத்துல நான்தான் அப்பாவை வெட்டினேன். ஆனால், இசக்கி என்னை காப்பாத்துறதுக்காக பழியை ஏற்றுக்கொண்டாள் என அனைத்து உண்மையையும் சொல்கிறான்.
அப்போது முத்துப்பாண்டி, இசக்கி உங்க அண்ணன் எவ்வளவு சொன்னார். என் தங்கச்சி யாரையும் அரிவாளால் வெட்டி இருக்க மாட்டா என்று, ஆனால் நான் தான் நம்பல, ஆனா சிவபாலனை காப்பாற்ற, நீ பழியை ஏத்துக்கிட்டு என்னோட குடும்பத்தையும் காப்பாத்திட்ட என்னுடைய மானத்தையும் காப்பாத்திட்ட, உன்ன போல ஒரு மனைவி கிடைக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கணும் என்கிறார் முத்துப்பாண்டி. அப்போது இசக்கி, நாமெல்லாம் ஒரே குடும்பம், மாமா ஒன்னாத்தானே வளர்ந்தோம், நான் எப்படி சிவபாலனை விட்டுக்கொடுப்பேன். அவரும் நம்ம குடும்பம் தானே மாமா என்று சொல்ல முத்துப்பாண்டி, இசக்கியை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்கிறான். இதையடுத்து, இசக்கியை வீட்டிற்கு அழைத்து செல்கின்றனர்.

புதிய வாத்தியார்: மறுபக்கம் பள்ளிக்கூடத்தில் புதிதாக வந்த வாத்தியார் அறிவழகன் ரத்னா ரூமுக்கு வந்து முட்டைக்கண்ணு முருங்கைக்காய் என்று கலாய்க்க அதை பார்த்து ரத்னா ஷாக்காக, 9-வது படிக்கும் போது உனக்கு லவ் லெட்டர் கொடுத்து உன் அண்ணன் கிட்ட அடி வாங்கினவன் தான் நான் என்று சொல்ல அதைக்கேட்டு ரத்னா கோபப்படுகிறாள். மேலும், ரத்னாவிற்கு அந்த வாத்தியாரை பிடிக்கவில்லை என்பதால், ரத்னா அவனிடம் கோபப்பட்டு பேசினாலும், அவன் சென்றதும் அவன் மீது ஒரு சாப்ட் கார்னர் இருப்பதை வெளிப்படுத்துகிறாள்.
இன்று சாந்திமுகூர்த்தம்: மறுநாள் காலை, பரணி மற்றும் சண்முகம் கோவிலில் ஜோசியரை பார்த்து, முத்துப்பாண்டிக்கும் இசக்கிக்கும் சாந்திமுகூர்த்தம் நடித்துவதற்காக ஜாதகத்தை எடுத்துக் கொண்டு செல்கின்றனர். அப்போது ஜோசியர் இன்று இரவு 8 மணிக்கு நேரம் நன்றாக இருக்கிறது என்று நேரத்தை குறித்து கொடுக்க, பரணி அண்ணன் முத்துப்பாண்டிக்கு போன் செய்து, இன்னைக்கு எட்டு மணிக்கு உனக்கும் இசக்கிக்கும் சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்து இருக்கிறோம். நீ 7 மணிக்குள் வீட்டுக்கு வந்துவிடு என்று சொல்ல, முத்துப்பாண்டி சந்தோஷத்தோட வீட்டுக்கு சீக்கிரமாக வருகிறான்.
இசக்கி செய்த வேலை: வீட்டில் அனைவரும் சாந்திமுகூர்த்தத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்க, இசக்கி, முருகனுக்கு மாலை போட்டுக்கொண்டு நிற்கிறாள், இதைப்பார்த்த முத்துப்பாண்டி கடுப்பாகி இன்னையில் இருந்து ஒரு மண்டலத்திற்கு நான் நைட் ஷிப்ட் போகிறேன் என்று சொல்ல அனைவரும் சிரிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











