பரணிக்கு சண்முகம் கொடுத்த வாக்கு.. சௌந்தர பாண்டிக்கு சவால் விட்ட வீரா.. அண்ணா சீரியல்!
சென்னை: அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில், சண்முகத்தை போலீசார் கைது அழைத்து சென்று விசாரணை செய்கின்றனர், விசாரணையில் சண்முகம் இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று வாக்கு கொடுக்கிறான். மறுபக்கம் ஊர் காரர்கள் பூமி பூஜை போடும் போதே தடங்கல் ஏற்பட்டு இப்படி அபசகுணமாக பாதியில் நின்றுவிட்டது. இதனால், மருத்துவமனை கட்டுவதை பற்றி இப்போதைக்கு பேச வேண்டாம் என்கின்றனர். இதைக்கேட்டு, சண்முகம் அதிர்ச்சி அடைகிறான்.
பரணி வீட்டிற்கு சென்று இதற்கெல்லாம் காரணமான சௌந்தரபாண்டியிடம் சத்தம் போட சௌந்தரபாண்டி இந்த ஹாஸ்பிடலை கட்ட விட மாட்டேன் என்று சொல்ல பரணி கண்டிப்பாக காட்டுவோம் என சவால் விடுகிறாள். இவர்கள் இருவரும் பேசுவதை கேட்ட வேதவள்ளி இது வெறும் ஆரம்பம் தான், இனிமே தான் முழு ஆட்டத்தை பார்க்க போறீங்க என்று சொல்கிறாள். மறுபக்கம் ரத்னாவும் அறிவழகனும் சாப்பிடாமல் இருக்கும் வைகுண்டத்தை சமாதானப்படுத்தி சாப்பிட வைக்கின்றனர்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், ஹாஸ்பிடல் கட்டுவதில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக சண்முகம் கவலையுடன் வீட்டுக்கு வர, அனைவரும் அவரை சாப்பிட சொல்ல சண்முகம் சாப்பிட மறுத்து ரூமுக்கு சென்று விடுகிறான். பிறகு அம்மாவாக நினைக்கும் மரத்தடியில் வந்து சண்முகம் பரணிக்காக ஹாஸ்பிடல் கட்டணும்னு ஆசைப்பட்டேன், ஆனால், கட்ட முடியல என்று வருத்தப்படுகிறான். இதைக் கேட்டு பரணி நீ எனக்காக ஹாஸ்பிடல் கட்டணும் என்று நினைத்ததே எனக்கு சந்தோஷம் தான் என அவனுக்கு ஆறுதல் சொல்ல சண்முகம் கண்டிப்பாக நான் ஹாஸ்பிடல் கட்டுவேன் என வாக்கு கொடுக்கிறான்.
நடக்கப்போவது என்ன: மறுபக்கம் சௌந்தரபாண்டியன் வீட்டில், அனைவரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது, வீரா டேபிள் மீது பணத்தை வைத்து, இது நானும் சிவபாலனும் இந்த வீட்டில் சாப்பிடுவதற்காக கொடுக்கும் பணம் என்று சொல்கிறாள். சௌந்தரபாண்டி கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் சிவபாலன் சாப்பிட்ட தண்டசோத்துக்கு இதை எடுத்துக்கிறேன். இனிமே மாதா மாதம் என் அக்கவுண்டுக்கு பணம் வந்தாகணும் என்று சொல்ல இருவரும் கோபித்துக் கொண்டு சண்முகம் வீட்டிற்கு வருகின்றனர். நடந்ததை கேட்ட சண்முகம், நீ அந்த வீட்ல தான் இருக்கணும் அங்கு இருந்து தான் உன் புருஷனை ஜெயிக்க வைக்கணும் என்று சொல்ல இருவரும் மீண்டும் கிளம்பி வீட்டுக்கு வருகின்றனர். சௌந்தரபாண்டி என்ன சண்முகம் வீட்டுக்குள்ள சேர்க்காமல் துரத்திட்டானா என்று நக்கல் அடிக்க வீரா என் புருஷன நான் ஜெயிக்க வச்சு காட்டுறேன் என சவால் விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்


Click it and Unblock the Notifications











