முதலிரவில் ஷாக் கொடுத்த இசக்கி.. கடுப்பான முத்துப்பாண்டி .. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: பரணி மற்றும் சண்முகம் கோவிலில் ஜோசியரை பார்த்து, முத்துப்பாண்டிக்கும் இசக்கிக்கும் சாந்திமுகூர்த்தம் நடத்துவதற்காக ஜாதகத்தை எடுத்துக் கொண்டு செல்கின்றனர். அப்போது ஜோசியர் இன்று இரவு 8 மணிக்கு நேரம் நன்றாக இருக்கிறது என்று நேரத்தை குறித்து கொடுக்க, பரணி, அண்ணன் முத்துப்பாண்டிக்கு போன் செய்து, இன்னைக்கு எட்டு மணிக்கு உனக்கும் இசக்கிக்கும் சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்து இருக்கிறோம். நீ 7 மணிக்குள் வீட்டுக்கு வந்துவிடு என்று சொல்ல, முத்துப்பாண்டி சந்தோஷத்தோட வீட்டுக்கு சீக்கிரமாக வருகிறான்.
வீட்டில் சாந்தி முகூர்த்தத்திற்காக கட்டில் பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருப்பதைப்பார்த்த முத்துப்பாண்டி வெட்கப்பட்டுக் கொண்டு, ரூமுக்குள் இசக்கிக்காக காத்துக் கொண்டிருக்க இசக்கி பால் கொண்டு வந்து கொடுக்க அதை முத்துப்பாண்டி மேலே சிந்தியபடி குடிக்க இசக்கி என்ன மாமா பாலை இப்படியா குடிப்பீங்க என்று இசக்கி தனது புடவையால் துடைத்து விடுகிறாள். அப்போது, ஏய் குட்டச்சி எப்படி நீ இவ்வளவு அழகாக இருக்க என்று கேட்டுவிட்டு அவளை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்கிறான். கடைசியில் இது முத்துபாண்டியின் கனவு என தெரிய வருகிறது.

மாலைபோட்டு இருக்கும் இசக்கி: அதன் பிறகு உண்மையாகவே முத்துப்பாண்டி இசக்கிக்காக ரூமில் காத்திருக்க இசக்கியும் உள்ளே வருகிறாள். முத்துப்பாண்டி சுவற்றை பார்த்தபடி நின்று கொண்டு இருக்க. இது திடீர் முடிவு தான், உனக்கும் விருப்பம் இருக்கும்னு நினைக்கிறேன் என முத்துப்பாண்டி ஆசையோடு திரும்ப. இசக்கி மஞ்சள் புடவையுடன் முருகனுக்கு மாலை போட்டு வந்து நிற்க அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். அப்போது இசக்கி, நீங்க இந்த வீட்டிற்கு நல்லபடியாக வந்ததால் முருகனுக்கு மாலை போட்டு இருக்கேன் என்று சொல்கிறாள்.
கோவப்படும் முத்துப்பாண்டி: அப்போது, முத்துப்பாண்டி கடுப்பாகி எதுக்கு இந்த சாந்திமுகூர்த்தத்துக்கு எல்லாம் நாள் குறிச்சீங்க, நான் கேட்டனா என கோபப்படுகிறான். அப்போது உள்ளே வரும் பரணி, யாருக்குமே சொல்லாமல் இசக்கி மாலை போட்டு வந்து இருக்காடா என்று சொல்கிறாள். உடனே ஆளவிடுங்கப்பா சாமி நான் வேலைக்கு போறேன் என்று முப்பிடாதிக்கு போன் செய்து அந்த திருட்டு கும்பலை பிடிக்க தனிப்படை அமைச்சோம்ல அதுக்கு நானே தலைமையா இருக்கேன். இன்னும் 1 மாசத்துல அவனை கண்டு பிடிக்கலாம். ஒரு மாசத்துக்கு எனக்கு நைட் டியூட்டி தான் என்று சொல்லி கிளம்பி செல்கிறான்.
கண்கலங்கும் முத்துப்பாண்டி: மறுநாள் காலையில் முத்துபாண்டிக்கு ஒருவர் காபி கொண்டு வந்து கொடுப்பது, சுடு தண்ணி ஏற்பாடு செய்வது, துணியை அயர்ன் செய்து வைப்பது என அனைவரும் பார்த்து பார்த்து கவனித்து கொள்ள முத்துப்பாண்டி இவர்களின் அன்பைப்பார்த்து கண்கலங்குகிறான். முத்துப்பாண்டி கண்கலங்குவதைப் பார்த்த பரணி, என்னடா என்ன ஆச்சு என்று கேட்க, இவர்களின் அன்புக்கு நான் தகுதியானவனா என்று தோன்றுகிறது. நான் ரத்னாவை எவ்வளவு கொடுமைப்படுத்தி இருப்பேன் என்று சொல்கிறான். அவனை பரணி சமாதானப்படுத்தி இது நம்ம குடும்பம்டா எல்லாம் உன்னை அப்படித்தான் பார்க்கிறார்கள் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











