ஒழுக்கம் கெட்டவளே.. ரத்னாவை தகாத வார்த்தையால் பேசிய வெங்கடேஷ்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: முத்துப்பாண்டிக்கும் இசக்கிக்கும் சாந்திமுகூர்த்தத்திற்கு ஏற்பாடுகள் நடந்த நிலையில்,இசக்கி மாலை போட்டதால், முத்துப்பாண்டி இனிமேல் நான் நைட் டியூட்டிக்கு செல்கிறேன் என்று வேலைக்கு கிளம்பி விடுகிறான். மறுநாள் காலையில் முத்துபாண்டிக்கு, வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பார்த்து பார்த்து கவனித்து கொள்ள முத்துப்பாண்டி இவர்களின் அன்பைப் பார்த்து கண்கலங்குகிறான். முத்துப்பாண்டி கண்கலங்குவதைப் பார்த்த பரணி, என்னடா ஆச்சு என்று கேட்க, இவர்களின் அன்புக்கு நான் தகுதியானவனா என்று தோன்றுகிறது. நான் ரத்னாவை எவ்வளவு கொடுமைப்படுத்தி இருப்பேன் என்று சொல்கிறான். அவனை பரணி சமாதானப்படுத்துகிறாள்.

இன்றைய எபிசோடில், ரத்னா ஸ்கூலுக்கு சீக்கிரமாக செல்ல வேண்டுமென ரெடியாகி கொண்டிருக்க ஆட்டோ வர லேட்டாகிறது. சண்முகமும் வீட்டில் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் ரத்னா நின்று கொண்டு இருக்கிறாள். இதே நேரத்தில் முத்துப்பாண்டி டுயூட்டிக்கு கிளம்பி கொண்டிருக்கிறான். இப்போது வீரா, முத்துப்பாண்டி மாமா அந்த பக்கம் தானே போகிறார், அக்கா நீ மாமா கூடபோ என்கிறாள். ரத்னா வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஆட்டோக்காரருக்கு போன் போட, ஆட்டோ வர லேட் ஆகும் என்று சொல்கிறான்.

zee tamil anna

ரோஸ் கொடுத்த முத்துப்பாண்டி: முத்துப்பாண்டி, ரத்னாவை டிராப் செய்யலாமா? வேண்டாமா? என யோசித்து கொண்டிருக்க இசக்கி நீங்க அந்த பக்கமாக தானே வேலைக்கு போறீங்க.. நீங்க டிராப் பண்ணிட்டு போங்க என்று சொல்கிறாள். மேலும் எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு நீ ரத்னாவை உங்க பொண்டாட்டியோட அக்காவாக தான் பார்க்கறீங்க என்று சொல்கிறாள். ரத்னா, முத்துபாண்டியுடன் செல்ல தயக்கம் காட்ட இசக்கி அவளை அனுப்பி வைக்கிறாள். மேலும் தலையில் வைத்து கொள்ள ஒரு ரோஜா பூவையும் கொடுக்கிறாள். பிறகு இசக்கி முத்துபாண்டியுடன் பைக்கில் செல்ல, இசக்கி ஆசையாக கொடுத்த ரோஸ் கீழே விழ முத்துப்பாண்டி அதை எடுத்து கொடுக்க, இதை டீக்கடையில் இருந்த வெங்கடேஷ் பார்த்து விடுகிறான்.

ஒழுக்கம் கெட்டவளே: உடனே ஆத்திரத்தோடு ஸ்கூலுக்கு வந்த அவன் என்னடி அந்த முத்துப்பாண்டி கூட வண்டியில் வர அவன் ரோசை கொடுக்க நீ வாங்கிக்கிற, ஒழுக்கம் கெட்டவளே, நீ யார் எப்படிபட்டவள் என்று இந்த ஸ்கூலுக்கே தெரியட்டும், அதனால் தான், நான் இங்கே வந்து நியாயம் கேட்கிறேன் என்று தப்பாக பேச, கோவப்படும் ரத்னா, நீ ஒழுங்கா சொன்னா கேட்க மாட்ட உன்புத்தி கேவலமாக இருக்கு என்று சொல்ல, உடனே வெங்கடேஷ் நான் கேவலமானவன் இல்ல நீ தான் அடுத்தவன் கூட ரோட்டுல கொஞ்சிக்கிட்டு வர என திட்ட அங்கு வந்த அறிவழகன் இவன் தான் ரத்னா புருஷன் என அறிந்து அவனை திட்டி அடிக்கிறான்.

நீ யாருடா: வெங்கடேஷ் என்னை அடிக்க நீ யாருடா என கேட்க நான் ரத்னாவோட நண்பன்.. அவளுடன் ஸ்கூல் படித்தவன், இப்போ உனக்கு மாற்றா இந்த ஸ்கூலில் வேலை செய்கிறேன் என்று சொல்ல வெங்கடேஷ் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டவன் கூட வண்டியில் வர, கூட படிச்சவனை வேலைக்கு வச்சிருக்க என சத்தம் போடுகிறான். அப்போது அறிவழகன், ஒழுங்கா போய்டு, இது ஸ்கூல் என்பதால் லைட்டா அடிச்சி இருக்கேன், இல்லனா அடிஇடிமாதிரி இருந்து இருக்கும் என்று சொல்லி சட்டையை பிடித்து இழுத்து வெளியில் விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X