சௌந்தரபாண்டியன் செய்த சூழ்ச்சி.. ரத்னாவின் கருகலைந்தது.. கதறும் சண்முகம்.. அண்ணா சீரியல்!

சென்னை: சௌந்தரபாண்டியால் மனம் உடைந்துப்போன வீரா, அதே வீட்டில் இருந்து நாங்க ஜெயித்து காட்டுவோம் என்கிறாள். மேலும், ரத்னா நடத்தி வரும் ஸ்கூலுக்கு அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் பப்ளிக் எக்ஸாம் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகிறது. இதனால், ரத்னா கஷ்டப்பட்டு பள்ளியில் பப்ளிக் எக்ஸாம் நடப்பது போல செய்கிறாள். எக்ஸாமுக்கான கேள்வித்தாள்கள் ஸ்கூலுக்கு வந்து சேர சௌந்தரபாண்டி ரத்னாவால் அவமானப்படுத்தப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்களை வரவழைத்து அவர்கள் மூலம் கேள்வித்தாள்களை திருட வைக்க இந்த விஷயம் பெரிய பிரச்சினையாகி ஸ்கூலின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட அந்த அதிர்ச்சியில் ரத்னா மயங்கி விழுகிறாள். ரத்னாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

Zee
Photo Credit:

மறுபக்கம் இன்ஸ்பெக்டர் சண்முகத்தை கைது செய்து அழைத்துச் செல்ல முப்பிடாதி சண்முகத்தை வெளியே கொண்டு வருகிறான். சண்முகம் ஜெயில் இருந்து வெளியே வர அவனுக்கு ரத்னா மயங்கி விழுந்த விஷயம் தெரிய வர, சண்மும் ஹாஸ்பிடலுக்கு வருகிறான். ஹாஸ்பிடல் ரத்னாவை பரிசோதனை செய்த டாக்டர் அவளுக்கு அபார்ஷன் ஆகி விட்டது, மருத்துவமனைக்கு இவங்க வரும் போதே அபார்ஷன் ஆகிவிட்டது என்று சொல்கிறார். இதைக்கேட்டுஅனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ரத்னாவிற்கு கரு சிதைந்ததை நினைத்து சண்முகம் கண்கலங்க, அண்ணானை பார்த்த ரத்னா கட்டிப்பிடித்து கதறி அழுகிறாள். எனக்கு மட்டும் ஏன் அண்ணா இப்படி எல்லாம் நடக்குது. இப்போத்தான் என் வாழ்க்கையில் நான் சந்தோஷமா இருந்தேன். அதற்குள் இப்படியாகிவிட்டதே என கதறி அழுகிறாள். தங்கை சமாதானப்படுத்த முடியாத சண்முகமும் கதறி அழுகிறான். இருவரும் அழுவதைப்பார்த்த பரணி, சண்முகத்தையும் ரத்னாவையும் சமாதானப்படுத்துகிறாள்.பின் ரத்னா ஏற்கனவே உடைந்து போய் இருக்கா இந்த நேரத்தில் நீயும் அழுதா அவ உடைந்து போய்விடுவாள் என்று சொல்ல சண்முகம் சற்று நிதானமாகிறான்.

அண்ணா: மேலும் இந்த விஷயத்தை பரணி போன் செய்து பாக்கியத்திடம் சொல்ல பாக்கியம் மற்றும் இசக்கிக்கு இருவரும் பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு ஓடி வருகின்றனர். அவர்கள் இருவரும் பதற்றத்தோடு ஓடுவதைப்பார்த்த சௌந்தரபாண்டி மற்றும் வேதவள்ளி இருவரும் சந்தோஷப்படுகின்றனர். மேலும், எல்லாமே நமக்கு சாதகமா நடக்குது என சந்தோஷப்படுகின்றனர். மறுபக்கம் ஹாஸ்பிடலில் ரத்னாவுக்கு இப்படி நடந்த சோகத்தில் சண்முகம் குடும்பத்தினர் மொத்தமாக உடைந்து போய் கண் கலங்கிய நிற்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X