வீட்டிற்கு வந்த சூடாமணி.. அடுத்தடுத்த திருப்பங்களுடன்.. அண்ணா சீரியலில் இன்று!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, பாக்கியத்திடம் சண்முகம் தானே உங்களை குத்தியது என்று கேட்க, சண்முகமா அவன் குத்தவில்லை குத்த வந்தவன் யார் என்று தெரியாது என்று சொல்கிறாள். இதையடுத்து சண்முகத்தை கோர்ட் நிரபராதி என்று விடுவித்து விடுகிறது.
மறுபக்கம் சிவபாலன், பரணி கேட்ட சர்டிபிகேட்டுகளை எடுத்துக்கொண்டு பரணி வீட்டிற்கு வருகிறான். கொடுத்துவிட்டு வெளியில் வரும் போது, சண்முகத்தை பார்க்க சிவபாலன், அக்கா சர்டிபிகேட் கேட்டா அதை கொடுக்க வந்ததாக சொல்கிறான். அப்போது பரணி, அமெரிக்கா போக போகும் விஷயத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், சௌந்தரபாண்டி பாக்கியத்திடம் நான் உன்கிட்ட என்ன சொல்ல சொன்னேன், நீ என்ன சொல்லி இருக்க என்று ஆவேசமாக கத்துகிறான். சும்மா இருங்க, கோவில் நகை நம்ம வீட்டில் தான் இருந்தது, அதையும் நீங்களும் சனியனும் தான் திருடி இருக்கீங்க... நீங்க தான் அதை இடமும் மாற்றி பாண்டியம்மா ரூமில் வச்சீங்க என்று கோர்ட்டில் சொல்லி இருந்தா என்ன ஆகி இருக்கும், சௌந்தரபாண்டியை எதிர்த்து பேச அவன் இவள் நம்மையே பயமுறுத்துகிறாளே என்று பயப்படுகிறான்.
அந்த பயம் இருந்தது: மறுபக்கம், ஷண்முகம் பாக்கியத்திற்கு போன் செய்து, என்னை காப்பாத்தியற்கு நன்றி, நானும் ஜெயிலுக்கு போய் இருந்தா என் குடும்பம் என்ன ஆகி இருக்கும் என்று கண்கலங்குகிறான். என்னை பரணி கூட ஏத்துக்கவில்லை என்று ஷண்முகம் சொல்ல, இல்ல சண்முகம் நீ பரணியை தப்பா புரிஞ்சிக்கிட்ட, அவ தான் கோர்ட்டில் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று சொன்னா என்று சொல்ல சண்முகம் அதிர்ச்சி அடைகிறான். இந்த விஷயத்தை சண்முகம் வீட்டில் சொல்ல அனைவரும் பரணியை தப்பா நினைத்தது குறித்து வருத்தப்படுகின்றனர்.

ஜெயிலில் சண்டை: அடுத்து சூடாமணிக்கு இறந்து போவது போல கனவு வந்ததால், அவள் வார்டனிடம் சொல்லி, போலீஸ் அதிகாரியை பார்க்க வேண்டும் என்று சொல்ல, அந்த வார்டன் அவளை அழைத்து செல்கிறான். அப்போது சூடாமணி, மேடம் கனவு வந்ததில் இருந்து என் பசங்களை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது, எனக்கு பரோல் வாங்கிக் கொடுங்க என்று கேட்கிறாள். இதுவரைக்கும் நீங்க எதுவுமே கேட்டது இல்ல.. முதல் முறையாக பரோல் கேட்டு இருக்கீங்க. நானே என் சொந்த முயற்சியால் பரோல் வாங்கி தருகிறேன் என்று சொல்கிறாள்.
என் புள்ள இருக்கான்: இதையடுத்து சூடாமணிக்கு பரோல் கிடைத்துவிட, அவள் வெளியே செல்வதை பார்த்து கடுப்பான, பாண்டியம்மா, என்னடி விளங்காதவளே எந்த மூஞ்சிய வெச்சிக்கிட்டு அந்த ஊருக்கு போற, உன்னை பார்த்தா ஊரில் இருக்குற அனைவரும் காரி துப்புவாங்க என்று சொல்கிறாள். அடி போடி, நான் சிங்கம் மாதிரி புள்ள வெச்சி இருக்கேன். அவன் நிரபராதி என்று நிரூபிப்பான் என்று சொல்கிறாள் இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











