சூடாமணிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சண்முகம் செய்ய போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, இதில் நேற்றைய எபிசோடில், சண்முகம் பரணியிடம் அமெரிக்கா போக போறியா என்று கேட்க, அவள் ஆமாம் போகிறேன் என்று சொல்ல, என் குடும்பத்தையும், என்னையும் நாசமாக்கியவனைத்தான் நான் குத்த போனேன், ஒரு நல்லவனை குத்த போகலேயே என்று சண்முகம் பரணியிடம் வருத்தப்பட்டு பேசுகிறான்.
மறுபக்கம்,ஊருக்கு வரும் சூடாமணி பழைய நினைவுகளை நினைத்து பார்க்கிறாள். முருகன் கோவிலையும் அங்கு பரணியும் சண்முகமும் சேர்ந்து இருக்கும் பேனரையும் பார்த்து சந்தோசப்படுகிறாள். ஆனால், பயந்து போய் உள்ளே ஓடி விடுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், சூடாமணியைப் பார்த்து பயந்த கனி, ரத்னாவுக்கு போன் செய்து யாரோ ஒருத்தவங்க புதுசா வந்திருக்காங்க என்று சொல்ல கன்னிக்குமாரி காரர்களாக இருப்பாங்க என்று நினைக்கிறேன் என்று சொல்ல, ரத்னா, நீ பயப்படாத நீ கதவை சாத்திக்கிட்டு உள்ளே இரு நாங்க வந்துடுறோம் என்று சொல்கிறாள். அதை தொடர்ந்து ரத்னா, பரணிக்கு போன் செய்து விஷயத்தை அவளும் நீங்க செய்தது தான் சரி என்று சொல்கிறாள். பிறகு பரணி ஷண்முகத்திடம் உடனே கிளம்பி வா என்று கூப்பிட ஷண்முகமும் கிளம்பி வருகிறான்.
கண் கலங்கும் சூடாமணி: இங்கே வீராவும் ரத்னாவும் வீட்டிற்கு வந்து விட சூடாமணி, நான் உங்க அம்மா என்று சொல்ல வர, நீங்க எங்க அம்மாவுக்கு தெரிஞ்சவங்களா? எங்க அம்மாவுக்கு தெரிஞ்சவங்கக் கூட எங்களுக்கு வேண்டாம், நீங்க இங்க இருந்து போய்டுங்க என்று கோபப்பட, கனவோடு வந்த சூடாமணி கண் கலங்கி நிற்கிறாள். அதன் பிறகு சூடாமணி அங்கிருந்து கிளம்பி செல்ல மறுபக்கம் பரணியுடன் வீட்டிற்கு கிளம்பும் ஷண்முகத்திற்கு வார்டன் போன் செய்து சூடாமணி பரோலில் வந்திருக்காங்க.. வீட்டிற்கு வந்து சேர்ந்திட்டாங்களா? என்று கேட்டதும், வந்தது அம்மா தான் என்கிற விஷயம் ஷண்முகத்திற்கு தெரிய வருகிறது.
தேடி அலையும் சண்முகம்: மகள்கள் சொன்ன வார்த்தையால் இனிமே இங்க இருக்க கூடாது என்று முடிவெடுக்கும் அவள் ஊரை விட்டு வெளியேற வீட்டிற்கு வந்த ஷண்முகத்திடம் தங்கைகள் அவங்களை திட்டி அனுப்பி விட்டதாக சொல்ல சண்முகமும் பரணியும் சூடாமணியை தேடி செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











