சூடாமணி வாங்கிய சத்தியம்..அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, பரோலில் வந்த சூடாமணி, குழந்தைகளை பார்க்க ஓடிவர, கனி வந்து இருப்பது யார் என்று தெரியாமல் பயந்து போய் ரத்னாவுக்கு போன் போட்டு, யாரோ ஒரு அம்மா வீட்டுக்கு வந்து இருக்காங்க என்று சொல்லி பயப்படுகிறாள். இதையடுத்து, வீராவும், ரத்னாவும் வேகமாக வீட்டுக்கு வந்து, சூடாமணி இங்கே இல்ல, எங்க அம்மாவுக்கு தெரிந்தவங்க கூட எங்களுக்கு வேண்டாம், நீங்க இங்க இருந்து போய்டுங்க என்று கோபப்பட, கனவோடு வந்த சூடாமணி அங்கிருந்து கிளம்பி செல்கிறாள்.
இதையடுத்து, ஷண்முகத்திற்கு வார்டன் போன் செய்து சூடாமணி பரோலில் வந்திருப்பதை சொல்ல, வீட்டிற்கு வந்தது அம்மா தான் என்ற விஷயம் ஷண்முகத்திற்கு தெரிய வர, பரணியும் சண்முகமும், சூடாமணியை தேடி அலைகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், சண்முகமும் பரணியும் ஒரு பக்கம் சூடாமணியை தேடி வர இன்னொரு பக்கம் வெயில் தாங்காமல் சூடாமணி சுருண்டு விழ அவளது கையில் இருந்த பணமெல்லாம் காற்றில் பறந்து வந்து ஒரு சைக்கிள் முன்னே விழுகிறது. சைக்கிளில் வந்த வைகுண்டம் என்ன பணம் பறந்து வருது என்று அதை எடுத்து கொண்டே முன்னேறி வர,சூடாமணி சுருண்டு விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தண்ணீர் தெளித்து எழுப்புகிறாள்.
பசங்களுக்கு பிடிக்கல: சூடாமணியைப் பார்த்து சந்தோஷப்பட்ட வைகுண்டம், வா வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல, என் பசங்களா பார்க்க வேண்டும் என்று மனசு அடிச்சிக்கிட்டு இருந்தது, அவங்களை பார்த்துட்டேன். அது போதும் எனக்கு. என் பசங்களுக்கு என்னை பிடிக்கவில்லை. இதுக்கு மேல நான் இங்கே இருந்து என்ன பண்ண செய்ய போகிறேன். ஜெயிலுக்கே போய்விடுகிறேன் என்று சூடாமணி அழுது புலம்பிக்கொண்டு இருக்கிறாள்.
நீங்க எதுக்கு போகணும் என்று குரல் கேட்டு திரும்பி பார்க்க சண்முகமும் பரணியும் நிற்கின்றனர். அடுத்து சூடாமணி நான் வந்தது பொண்ணுங்களுக்கு பிடிக்கல நான் எதுக்கு இங்க இருக்கணும் என்று சொல்ல ஷண்முகம் நீங்க யாருனு அவங்களுக்கு தெரியாது. இப்போவே நீ தான் அம்மானு சொல்லி, அவங்களை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்கிறேன் என்று வைகுண்டம் கோபத்துடன் சொல்கிறான்.
சத்தியம் வாங்கும் சூடாமணி: அப்போது குறுக்கிடும் சூடாமணி வேண்டாம் நான் சொல்வதை கேளுங்க என்று சொல்லி வீட்டிற்கு வர மறுக்கிறாள். இப்போ மட்டும் நீங்க வீட்டுக்கு வரவில்லை என்றால், நாங்க அத்தனை பேரும் ஜெயிலுக்கு வருவோம் என்று சண்முகம் சொல்ல, மனம் இறங்கிய சூடாமணி, சரி நான் வருகிறேன். ஆனால், நான் தான் அம்மா என்ற உண்மையை அவங்களுக்கு சொல்ல கூடாது. என்னைக்கு என் மேல எந்த தப்பும் இல்லை என்று இந்த ஊருக்கும், என் மகளுக்கும் தெரியுதோ அது வரைக்கும் இந்த விஷயம் என் மகளுக்கு தெரியக்கூடாது என்று சத்தியம் பண்ணுங்க என்று சொல்ல, அனைவரும் சத்தியம் செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











