சூடாமணியை அன்னையாக ஏற்பார்களா.. தங்கைகளை அடிக்க பாய்ந்த சண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, மயங்கி விழுந்து இருந்த சூடாமணியைப் பார்த்து சந்தோஷப்பட்ட வைகுண்டம், வா வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல, என் பசங்கள பார்க்க வேண்டும் என்று மனசு அடிச்சிக்கிட்டு இருந்தது, அவங்களை பார்த்துட்டேன். அது போதும் எனக்கு. என் பசங்களுக்கு என்னை பிடிக்கவில்லை. இதுக்கு மேல நான் இங்கே இருந்து என்ன பண்ண போகிறேன். ஜெயிலுக்கே போய்விடுகிறேன் என்கிறாள்.

அப்போது அங்கு வரும், பரணி மற்றும் ஷண்முகம், நீங்க எங்கையும் போகக்கூடாது என்று சொல்ல, சூடாமணி வீட்டிற்கு வர மறுக்கிறாள். இப்போ மட்டும் நீங்க வீட்டுக்கு வரவில்லை என்றால், நாங்க அத்தனை பேரும் ஜெயிலுக்கு வருவோம் என்று சண்முகம் சொல்ல, மனம் இறங்கிய சூடாமணி, நான் தான் அம்மா என்ற உண்மையை அவங்களுக்கு சொல்ல கூடாது. என்னைக்கு என் மேல எந்த தப்பும் இல்லை என்று இந்த ஊருக்கும், என் மகளுக்கும் தெரியுமோ அது வரைக்கும் இந்த விஷயம் என் மகளுக்கு தெரியக்கூடாது என்று சத்தியம் வாங்குகிறாள் இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil Anna

அண்ணா சீரியல்: இன்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்த சூடாமணி சூடம் ஏற்றி முருகனை கும்பிட்டு எல்லாருக்கும் ஆரத்தி காட்ட மூன்று பெண்களும் ஆரத்தியை தொட்டு கும்பிடாமல் நிற்கின்றனர். ஷண்முகம் தொட்டு கும்பிட சொல்ல அவர்கள் இவங்க யாருனு முதல்ல சொல்லு என்று கேள்வி எழுப்புகின்றனர். பிறகு ஷண்முகம் அம்மாவுக்கு தெரிந்தவங்க என்று சொல்ல மூன்று பெண்களும் வெறுப்பை காட்ட சூடாமணி வருத்தம் அடைகிறாள். பரணி எதுக்கு இப்படி நடந்துக்குறீங்க என்று கேட்க அம்மா ஓடி போனதால் பட்ட அவமானங்களை சொல்லி ஆவேசப்படுகின்றனர்.

சமாதானப்படுத்திய பரணி: அடுத்த நாள் சூடாமணி சமையல் வேலையில் இருந்து வீட்டை சுத்தம் செய்யும் வேலை வரை அனைத்தையும் செய்கிறாள். அனைவரும் வீட்டில் சாப்பிட உட்கார, பரணி யாரை வேணும்னாலும் சமையல் அறையில் விடுவியா என்று கேட்டு ரத்னா கோவப்படுகிறாள். முதலில் அந்த பொம்பளைய இந்த வீட்டில் இருந்து போக சொல்லுங்க என்று சொல்ல, கடுப்பான ஷண்முகம் அவங்க யார் என்று தெரியாமல் பேசாதே, முதலில் பெரியவர்களுக்கு மரியாதை கொடு என்று சொல்லி கோவத்தோடு அவர்களை அடிக்க போகிறான். அவர்களை தடுத்து பரணி சண்முகத்தை சமாதானப்படுத்துகிறாள்

பரணி, சண்முகம்: பரணி தூங்க போனதை போலவே திரும்பி எழுந்து வர சண்முகமும் பரணியும் அன்னோன்யமாக இல்லை என்பதை புரிந்து கொள்கிறாள். பரணியுடன் நீங்க சந்தோசமாக தானே இருக்கீங்க என்று கேட்க அவளும் ஆமாம் என்று சமாளித்துவிட்டு அங்கிருந்து செல்கிறாள். இவர்களுக்குள் ஏதோ பிரச்சனை இருக்கு என்பதை சூடாமணி புரிந்து கொள்கிறாள்.

மறுபக்கம் முத்துப்பாண்டி சஸ்பெண்ட் பீரியட் முடிந்து மீண்டும் வேலைக்கு கிளம்ப இசக்கி அவனது ஷூவுக்கு பாலிஸ் போட்டு கொடுக்க இதை பார்த்த சௌந்தரபாண்டி என் புள்ள என்னைக்கும் எனக்கு புள்ளையாக மட்டும் தான் இருக்கனும், இவங்கள சேர விட மாட்டேன் என்று முடிவெடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X