வைகுண்டம் செய்த வேலை கடுப்பான சண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில், வீட்டிற்கு வந்த சூடாமணி சமையல் வேலையில் இருந்து வீட்டை சுத்தம் செய்யும் வேலை வரை அனைத்தையும் செய்கிறாள். இதைப்பார்த்து கடுப்பான ரத்னா, முதலில் அந்த பொம்பளைய இந்த வீட்டில் இருந்து போக சொல்லுங்க, இவங்களை பார்த்தாலே ஆத்திரமா வருது என்று சொல்ல கோவப்படும் ஷண்முகம், முதலில் பெரியவர்களுக்கு மரியாதை கொடு என்று சொல்லி கோவத்தோடு அவர்களை அடிக்க போகிறான்.
மறுபக்கம் முத்துப்பாண்டி சஸ்பெண்ட் காலம் முடிந்ததை அடுத்து, அவன் மீண்டும் வேலைக்கு கிளம்ப, இசக்கி அவனது ஷூவுக்கு பாலிஷ் போட்டு கொடுக்கிறாள். இதைப்பார்த்த சௌந்தரபாண்டி, என் புள்ள என்னைக்கும் எனக்கு புள்ளையாக மட்டும் தான் இருக்கனும், இவங்கள சேர விட மாட்டேன் என்று முடிவெடுத்துவிட்டு. டேய் முத்துப்பாண்டி நீ உன் அம்மாவையும் பொண்டாட்டியையும் நம்பாதேடா என்று சொல்கிறார். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

அண்ணா சீரியல்: இதையடுத்து இன்றைய எபிசோடில், எல்லோரும் சாப்பிட்ட முடித்த பிறகு வைகுண்டம் கடையிலிருந்து நெத்திலி மீன் குழம்பு வாங்கி வந்து யாருக்கும் தெரியாமல் சூடாமணிக்கு ஊட்டி விடுகிறான். இதை வெட்டுக்கிளி பார்த்துவிட்டு, காலம் போன போக்குல இந்த ஆளுக்கு இதெல்லாம் தேவையா என்று திட்டிவிட்டு இந்த விஷயத்தை பரணி சண்முகத்திடம் சொல்ல கிளம்புகிறான்.
இதையடுத்து, சூடாமணி, இசக்கியை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட, அதற்காக ஒரு திட்டம் போடும் வைகுண்டம், சௌந்தரபாண்டி வீட்டுக்கு சென்று, பாக்யம் குத்துப்பட்டு கிடந்த போது அவ நல்லபடியாக குணமடைந்து வரவேண்டும் என்று பரிகாரம் செய்வதாக வேண்டிக்கொண்டேன். இதற்காக இசக்கி நாளைக்கு கோவிலுக்கு பூ எடுக்க வரவேண்டும் என்று சொல்ல, சௌந்தரபாண்டியும், முத்துப்பாண்டியும் சம்மதம் சொல்ல வைகுண்டம் சந்தோஷமாகிறார்.
சமாளிக்கும் சண்முகம்: அதன் பிறகு வெட்டுக்கிளி, பரணி மற்றும் சண்முகத்திடம் வந்து வைகுண்டம் சூடாமணிக்கு சாப்பாடு ஊட்டிய விஷயத்தைப் பற்றி சொல்ல இவர்கள் வெட்டுக்கிளிக்கு உண்மை தெரிந்து விட்டதோ என்று பதறுகின்றனர். பிறகு காலம் போன வயசுல அந்த ஆளுக்கு இதெல்லாம் தேவையா என்று கேட்க சண்முகம், அது வைகுண்டத்தோடு செட்டப் என்று சொல்கின்றனர்.
கடுப்பான சண்முகம்: இதையடுத்து, பாக்கியம் பரணிக்கு போன் செய்து, அண்ணன் இப்போத்தான் வந்துவிட்டு போச்சு, நான் உடம்பு முடியாமல் இருந்த போது அண்ணன் வேண்டிக்கிட்டாராம். இதனால், நாளைக்கு இசக்கிக்கு பூ எடுக்க அழைச்சிட்டு போனார். நாளைக்கு நீயும் வந்துவிடு என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியான பரணி, என்ன சண்முகம் மாமா ஏன் இப்படி செய்கிறார். அத்தை இசக்கிய பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருப்பார்கள் அதான் மாமா இப்படி செய்து இருக்கிறார். நாளை கோவிலில் யாராருக்காவது அவங்க யார் என்று தெரிந்துவிட்டால் என்ன செய்வது என்று புலம்புகிறாள். இதைகேட்டு கடுப்பான சண்முகம், அப்பா எதுக்கு இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காரு, அப்பாவா போயிட்டாரு இல்லனா சப்புனு அடிச்சிவிடுவேன் என்று டென்ஷன் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











