ரத்னாவை அடிக்க பாய்ந்த ஷண்முகம்.. நடந்தது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில், பாக்கியம் பரணிக்கு போன் செய்து, அண்ணன் இப்போத்தான் வந்துவிட்டு போச்சு, நான் உடம்பு முடியாமல் இருந்த போது அண்ணன் வேண்டிக்கிட்டாராம். இதனால், நாளைக்கு இசக்கிக்கு பூ எடுக்க அழைச்சிட்டு போனார். நாளைக்கு நீயும் வந்துவிடு என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியான பரணி, என்ன சண்முகம் மாமா ஏன் இப்படி செய்கிறார். நாளை கோவிலில் யாருக்காவது அவங்க யார் என்று தெரிந்துவிட்டால் என்ன செய்வது என்று புலம்புகிறாள். இதைகேட்டு கடுப்பான சண்முகம், அப்பா எதுக்கு இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காரு, அப்பாவா போயிட்டாரு இல்லன சப்புனு அடிச்சிவிடுவேன் என்று டென்ஷன் ஆகிறான். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

அண்ணன் சீரியல்: இன்றைய எபிசோடில், ஷண்முகம் வைகுண்டத்திடம் எதுக்கு அப்பா இப்படி பண்ண என்று கோபப்படுகிறான். கோவிலில் யாராவது அம்மாவை பார்த்துவிட்டா என்ன ஆவது என்று கேட்க, வைகுண்டம், சூடாமணி இசக்கியை பார்க்கணும்னு ஆசைப்பட்டா அவளை வீட்டிற்கு கூப்பிட முடியாது, அதனால் தான் கோவிலுக்கு வர சொன்னேன் என்று சொல்லிக் கொண்டு இருந்ததை, ரத்னா அரைகுறையாக கேட்டு விடுகிறாள். யார் நீங்க? நீங்க எதுக்கு இசக்கியை பார்க்கணும் என்று சூடாமணியை நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்க ஷண்முகம் உட்பட எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
சமாதானப்படுத்தும் சண்முகம்: ஷண்முகம் ரத்னாவை அமைதியாக இருக்க சொல்லியும் அவள் கேட்காமல் சூடாமணியிடம் கோபப்பட ஷண்முகம் அவளை அடிக்க கை ஓங்குகிறான். இதுவரைக்கும் எங்க அண்ணன் எங்களை அடிச்சது கிடையாது, ஆனால் இப்போ என் அண்ணனே என்னை அடிக்க கை ஓங்கிருச்சி.. இதுக்கு நீங்க தான் காரணம், நீங்க வந்த ரெண்டாவது நாளே இப்படி ஆகிருச்சு என்று கோபப்படுகிறாள். இதனால் சூடாமணி, ரத்னா பாவம் பா, புள்ளைங்க யாரும் சாப்பிடல.. நான் கூட இந்த வீட்டை போயிடுறேன் என்று சொல்ல ஷண்முகம் அவங்க உங்களை பத்தி தெரியாமல் பேசுறாங்க என்று ஆறுதல் சொல்கிறான்.
கோவிலுக்கு வரும் சௌந்தரபாண்டி: அதன் பிறகு தங்கைகளை சமாதானப்படுத்தி அவர்களை சாப்பிட வைக்க அதை பார்த்த சூடாமணி நீ ஒரு அண்ணன் மட்டுமில்ல அம்மாவாகவும் இருக்க என்று சந்தோசப்படுகிறாள். அடுத்து கோவிலுக்கு நாங்களும் வரோம் என்று சௌந்தரபாண்டி மற்றும் முத்துப்பாண்டி சொல்ல இந்த விஷயம் சண்முகத்துக்கு தெரிய வர அவன் ஷாக் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
400வது எபிசோட்: ஜீ தமிழின் நம்பர் 1 சீரியலாக ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலுக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சூடாமணியின் என்ட்ரி.. சண்முகத்தின் மீது இருக்கும் கோபத்தால் அமெரிக்கா கிளம்ப முடிவெடுத்த பரணி என்று எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இன்றோடு 400வது எபிசோடில் அடி எடுத்து வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











